ஆசிரியர் தகுதி மறுதேர்வு அதிகாரபூர்வ வினா விடைகள்


டி.இ.டி., மறுதேர்வுக்கான, "கீ-ஆன்சர்', டி.ஆர்.பி., இணையதளத்தில், வெளியிடப்பட்டது.கடந்த 14ம் தேதி
நடந்த டி.இ.டி., முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வை, 5 லட்சம் பேர் எழுதினர். இரு தேர்வுகளுக்குமான விடைகளை, டி.ஆர்.பி., இணையதளத்தில் இன்று வெளியிட்டது.கேள்வித்தாள், ஏ,பி,சி,டி என, நான்கு வரிசைகளில் வழங்கப்பட்டன. அதேபோல், நான்கு கேள்வித்தாள் வரிசைகளுக்கும், தனித்தனியே, விடைகள் வெளியிடப்பட்டுள்ளன. தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது ஆகிய சிறுபான்மை மொழிகளுக்கான கீ-ஆன்சர் மட்டும், வெளியிடப்படவில்லை. இவை, நாளைமறுநாளோ அல்லது அதற்கு மறுநாளோ வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. விடைகளில், ஏதாவது ஆட்சேபணை இருந்தால், அது குறித்து, தேர்வர்கள், ஒரு வாரத்திற்குள், டி.ஆர்.பி.,க்கு, எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம். ஆட்சேபணைகள் இருந்தால், அது குறித்து, பாட வல்லுனர்களிடம் ஆலோசித்து, இறுதி விடைகள் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment