TNPSC GROUP 2 & 4 - அறிவியல் வினா விடைகள் 307


காமா கதிர்கள் நின்றொளிர்தலை உண்டாக்கும்.

1. காமா கதிர்கள் காற்றினை அயனியாக்கும்.

2. காமா கதிர்கள் பொருள்களின் மீது விழும்போது பீட்டா கதிர் அல்லது எலெக்ட்ரான்களை வெளியேற்றுகின்றன.
3. எலெக்ட்ரோ மீட்டர், கெய்கர் முல்லர் எண்ணி, மேகப்பெட்டகம், குறைகடத்தி மின்சுற்றுகள் இவை யாவும் கதிரியக்க வீச்சுகளை அறிய பயன்படுத்தப்படும் கருவிகள் ஆகும்.
4. பாஸ்பரஸ் 32 அல்லது ஸ்ட்ரான்சியம் - 90 ஆகியவை தோல் புற்றுநோயைக் குணப்படுத்தும்.
5. மருத்துவக் கருவிகளில் உள்ள கிருமிகளை நீக்க கதிர்வீச்சு பயன்படுகிறது.
6. டிரிட்டியம், கார்பன் 14 போன்றவை உயிரியல் மூலக்கூறுகளைக் கண்டறிய பயன்படுகிறது,.
7. ரேடியோ ஐசோடோப்பிலிருந்து வெளிவரும் கதிரியக்கத்தைப் பயன்படுத்தி உயர்விளைச்சல் தரும் புதிய ரக நெல், கோதுமை, ஆகியவற்றை உருவாக்கலாம்.
8. காமா கதிர்களைப் பயன்படுத்தி அணு உட்கருவின் அமைப்பு மற்றும் பண்பை அறிய முடியும்.
9. கதிர்வீச்சுகளின் உதவியால் பொருள்களின் அமைப்பு வாய்ப்பாட்டை கண்டறியலாம்.
10. கதிரியக்க அயோடினைப் பயன்படுத்தி கரைசல்களில் தங்கியிருக்கும் மிகச்சிறிய அளவு சில்வர் கசடுகளையும் கண்டறியலாம்.
11. கதிரியக்க ஐசோடோப்புகள் வேதிவினைகளின் சுவடறி தனிமங்களாகப் பயன்படுகிறது.
12. நியூட்ரான் கிளர்வு ஆய்வு மூலம் ஆர்செனிக் நச்சுத் தன்மையைக் கண்டறிவதில் கதிரியக்க ஐசோடோப்புகள் பயன்படுகின்றன.
13. தொல்பொருள் மற்றும் பழம்பொருளின் வயதை அறிய கார்பன் -14 ஐசோடோப்பு பயன்படுகிறது.
14. கதிரியக்க கார்பனின் அரை ஆயுள் காலம் 5,730 ஆண்டுகள்.
15. கார்பன் - 14  கதிரியக்கத்தைக் கொண்டு பாறைகள் மற்றும் படிவங்களின் வயதை கண்டுபிடிக்கலாம். இது கதிரியக்க கார்பன் தேதியிடல் எனப்படுகிறது.
16. ரேடியோ தேதியிடுதல் முறையில் விண்கற்கள், நிலவில் உள்ள பாறைகள் ஆகியவற்றின் வயது கணக்கிடப்படுகிறது.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment