TNPSC GROUP 2 & 4 - அறிவியல் வினா விடைகள் 309


பாக்டீரியாக்கள்
1. பாக்டீரியங்கள் யாவும் ஒரு செல்
புரோகரியாடிக் உயிரிகளாகும்.
2. பாக்டீரிய செல்லில் முழுமையான நியூக்ளியஸ் இல்லை. இதன் மரபுப் பொருள் நியூகிளியாடய்ட் அல்லது குரோமட்டின் உடலம் எனப்படும். நியூக்ளியஸிற்கு சவ்வு கிடையாது.
3. பாக்டீரிய செல்லில் மறைமுக செல்பகுப்பு நடைபெறுவதில்லை.
4. பாக்டீரிய ரிபோசோம் சைட்டோபிளாசத்தில் விரவி காணப்படுகின்றன.
5. பாக்டீரியங்கள் பிளவுறுதல் மூலம் பெருக்கமடைகின்றன.
6. பாக்டீரியங்களில் தன் ஊட்டமுறை மற்றும் சார் ஊட்ட முறை என்ற இரண்டு வகையான ஊட்ட முறைகள் காணப்படுகின்றன.
7. பசும் கந்தக பாக்டீரியம், வெளிர் சிவப்பு கந்தக பாக்டீரியங்கள் ஆகியவை ஒளிச்சேர்க்கை செய்யும் பாக்டீரியங்களுக்கான எடுத்துக்காட்டுகள் ஆகும்.
8. ஒளிச்சேர்க்கை அல்லது வேதிசேர்க்கை மூலம் தன் உணவை தானே தயாரித்துக் கொள்பவை தன் ஊட்ட முறை பாக்டீரியங்கள் ஆகும். எடுத்துக்காட்டு குளோரோபியம்.
9. இறந்த அல்லது உயிருள்ளவற்றிலிருந்து ஊட்டப் பொருள்களை பெறும் பாக்டீரியங்கள் சார் ஊட்டமுறை பாக்டீரியங்கள் ஆகும்.
10. காக்கஸ் என்பது கோள வடிவ பாக்டீரியங்கள்
11. பேசில்லஸ் என்பது கோல் வடிவ அல்லது குச்சி வடிவ பாக்டீரியங்கள்.
12. ஸ்பைரில்லம் என்பது சுருள் வடிவம் கொண்ட பாக்டீரியங்கள்.
13. விப்ரியோ - கமா என்பது வளைந்த வடிவை கொண்ட பாக்டீரியங்கள்
14. மைக்ரோகாகஸ் என்பது தனித்தனி கோளவடிவ செல்களை உடையது.
15. டிப்ளோகாக்கஸ்  என்பது இரட்டையாக அமைந்த கோள வடிவ செல்களை கொண்டவை.
16. ஸ்ட்ரெப்டோகாகஸ் என்பது சங்கிலி வடிவில்அமைந்த கோள வடிவ செல்களை கொண்டவை.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment