TNPSC GROUP 2 & 4 - அறிவியல் வினா விடைகள் 310


கசையிழைகள்:
1. இவை நீண்ட ரோமம் போன்ற
அமைப்புகளாகும். இவை பாக்டீரியங்களின் இயக்கத்தில் ஈடுபடுகின்றன. ப்ளாஜெல்லின் என்ற புரதத்தை கொண்டுள்ளது.
2. ஒற்றை கசையிழை பாக்டீரிய செல்லின் ஒரு முனையில் ஒரு கசையிழை இருக்கும். எடுத்துக்காட்டு: விப்ரியோ மெட்சினிகொலி.
3. பாக்டீரியங்கள் இயற்கையின் துப்புரவாளர்கள். நிலத்தில் சேகரமாகும் இறந்த தாவரங்கள்,விலங்குகள் மற்றும் பல வகை கரிம கழிவுப் பொருட்கள் ஆகியவற்றை அழுகச் செய்து சிதைக்கின்றன.
4. லேக்டோகாகஸ் லாக்டிஸ், லேக்டோபேசில்லஸ் மற்றும் லூகோநாஸ்டாக் கிரிமோரிஸ் ஆகிய லாக்டிக் அமில பாக்டீரியங்கள் பால் பண்ணைத் தொழிற்சாலையில் சுவையூட்டப்பட்ட பால் பொருள்கள் மோர், பல்கேரியன் யோகர்ட், கேஃபிர், குமிஸ் ஆகியவற்றை தயாரிக்கப் பயன்படுகிறது.

Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment