பூமியை போல் மனிதன் வாழ தகுதியான 3 புதிய கிரகங்கள் கண்டுப்பிடிப்பு


விண்வெளியில் பூமியை போன்ற மனிதன் வாழ சாதகமான அமைப்புகளைக்கொண்ட 3 புதிய கிரங்களை நாசாவின் கெப்லர் ஆராய்ச்சி மையம் கண்டுப்பிடித்துள்ளது.


புதிதாக கண்டறியப்பட்ட இந்த கிரங்களின் மேற்பரப்பு வெப்பநிலை சரியான அளவில் அமைந்திருப்பதால் இந்த கிரங்களில் பூமியை போன்று மனிதன் வாழும் சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கிரங்களுக்கு கெப்லர் 62 e, கெப்லர் 62 f , மற்றும் கெப்லர் 69 c எனப் பெயரிடப்பட்டுள்ளது. இவற்றில் கெப்லர் 62 f பூமியை விட 40 சதவீதம் பெரிதாக உள்ளது. இதனால், விண்வெளியில் பூமியை ஒத்த கிரங்களில் இது முதலிடத்தை பெறுகிறது.

இரண்டாவது கிரகமான 62 e, பூமியை விட 60 சதவீதம் பெரிதாக உள்ளது, மற்றொரு கிரகமான 69 c யின் தன்மையை குறித்து விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர். தற்போது கிடைத்துள்ள தகவலின்படி இந்த கிரகம் சூரியனை போன்ற ஒரு நட்ச்காத்திரத்தை சுற்றிவர 242 நாட்கள் ஆகும் என்பது, பூமிக்கு அருகாமையில் இருக்கும் வெள்ளி கிரகம் சூரியனை சுற்றிவர தேவைப்படும் நாட்களுக்கு சமமாக இருப்பது தெரியவந்துள்ளது. 
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment