அதி வேகமாக உருகும் அன்டார்க்டிக்கா பனி மலைகள்

கோடை வெப்பத்தின் காரணமாக, அன்டார்க்டிக்கா பகுதியில் பனி மலைகள் வேகமாக உருகி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.பூமியின் தென்முனையை சூழ்ந்திருக்கும் பனி கண்டம் அன்டார்க்டிக்கா.
தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன் நச்சுக்களால், பூமி வெப்பமடைந்து, பனி மலைகள் உருகி வருவதால், கடல் மட்டம் அதிகரித்து, பல தீவுகள் மூழ்கும் அபாயம் உள்ளதாக, சுற்றுசூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். இதற்கிடையே, அன்டார்க்டிக்காவில், ஜேம்ஸ் ரோஸ் தீவில், பிரிட்டன்-பிரான்ஸ் விஞ்ஞானிகள் குழு சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். 364 மீட்டர் ஆழத்துக்கு அவர்கள் துளையிட்டு ஆய்வு நடத்தினர். இதில் பனி கட்டிகளின் அடர்த்தி வெகுவாக குறைந்துள்ளது தெரிய வந்தது.பல நூறு ஆண்டுகளாக இல்லாத வகையில், தற்போதைய கோடையில், அன்டார்க்டிக்கா பகுதியில், பனி சிகரங்கள், 10 மடங்கு வேகத்தில் உருகி வருவதாக, ஆய்வு குழுவின் தலைவர் நெரிலி அப்ராம் தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment