உலகில் அதிக ஏழைகள் உள்ள நாடு இந்தியா - உலக வங்கி தகவல்


உலகில் அதிக ஏழைகள் வாழும் நாடு இந்தியா என்று உலக வங்கியின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.


உலக நாடுகளில் உள்ள ஏழைகளைப் பற்றிய அறிக்கை ஒன்றை உலக வங்கி வெளியிட்டுள்ளது. உலக நாடுகளில் மொத்தம் 1.2 பில்லியன் ஏழைகள் வாழ்வதாகவும், அவர்களில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் இந்தியாவில் உள்ளனர் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் உலக நாடுகளில் ஏழ்மையை ஒழிக்கும் திட்டத்திற்காக உலக வங்கி நடத்திய ஆய்வின் மூலம், உலகில் ஏழ்மை அதிகமாக உள்ள நாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியா, ஆசிய கண்டம் மற்றும் பசுபிக் பெருங்கடலை சுற்றியுள்ள ஆசிய நாடுகளில் பலர் நாளொன்றுக்கு ரூ.65க்கும் குறைந்த செலவில் வாழ்ந்து வருவதாக அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment