சீனாவுக்கு பதிலடி கொடுக்குமா இந்திய ராணுவம்


இந்திய எல்லையிலிருந்து வெளியேற சீனா மறுத்துவரும் நிலையில், இந்திய எல்லைக்கு கூடுதல் படைகளை பாதுகாப்பு துறை
அமைச்சகம் அனுப்பியுள்ளது. இதனால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக்கில் சீன படைகள் ஊடுருவியதை திருமப பெற முடியாது, மேலும் தங்களுடைய பகுதிக்குள் இந்திய ராணுவம் ஊடுருவியுள்ளதாக சீனா நேற்று அறிவித்தது.

இந்த அறிவிப்பை அடுத்து பதற்றத்தை தவிர்க்க இந்திய ராணுவமும் சீன ராணுவமும் இணைந்து மேற்கொண்ட சுமார் மூன்று மணி நேர கொடி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. 

இந்த நிலையில் ஊடுருவல் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். 

அதே நிலையில் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்க லடாக் பகுதிக்கு கூடுதல் ராணுவத்தை அனுப்பப்பட உள்ளது என்று அவர் கூறியுள்ளார். 

இரு நாட்டு படைகளும் லடாக் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளதால் லடாக் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment