கோலம் - தெரிந்த பெயர் தெரியாத தகவல்


கோலம் ஒரு அர்த்தமற்ற அழகு அல்ல அது நமது பண்பாட்டுச் செறிவின் வெளிப்பாடு. அரிசி
மாவால் இடும் கோலம் எறும்புக்கும், பறவைக்கும் உணவாகிறது. சிறு உயிர்களிடம் கூட நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அது சிறுவயதிலேயே நமக்கு கற்று தருகிறது. 

கோலத்தின் மீது சாணி உருண்டையில் பறங்கிப் பூவைச் செருகி வைத்து அழகு பார்க்கும் மரபு மெள்ள மெள்ள மெலிந்துவிட்டது. மறுநாள் அதைச் சுத்தம் செய்து குப்பைக்குச் செல்லும்போது மாக்கோல மாவும், பூவும்,சாணியும் அருமையான இயற்கை உரமாக கம்போஸ்ட் ஆகி, விளைச்சலை பெருக்குகிறது.
இது மட்டுமா, கோலம் இடுவது சிரண உறுப்புக்கும் பிறப்புறுப்புக்கும் நன்மை பயக்கும். அதிக நேரம் கையை தரையிலிருந்து எடுக்காமலும் குனிந்த நிலை மாறாமல் கோலம் இடுவது கிராமத்து பெண்களுக்கு கௌரவ பிரச்சனையாம்! இது வரலாற்றுச் செய்தி ஆகிவிட்டது.  ஆனால் இன்னும் கூட கோலம் போடும் தமிழ் பெண்கள் இருக்கவே செய்கிறார்கள், இவர்கள் கை எழுத்தைப் பார்த்தாலே அது நமக்குச் புலப்படும். கோலம் இடும் பெண்ணின் கையெழுத்து மிகவும் அழகாய் இருக்கும். கற்பனைதிறனும், இயற்றல் திறனும் (creativity)  கைவந்த கலையாகிவிடுகிறது கோலம் இடும் பெண்ணுக்கு.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment