இன்றைய வானியல் அற்புதமான சந்திரகிரகணத்தை பார்க்கலாம்


சூரியனை பூமி சுற்றிவருகிறது. பூமியை சந்திரன் சுற்றிவருகிறது. இந்த நிகழ்வின் போது, சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி
வருகிறபோது பூமியின் நிழலால் சந்திரன் மறைந்து பிறகு தெரிவதே சந்திரகிரகணம் எனப்படுகிறது. 

இந்த வருடம் மூன்று சந்திர கிரகணங்கள் நிகழவுள்ளன. அதன் முதலாவது சந்திர கிரகணத்தை இன்று நள்ளிரவு 1:22 முதல் 1:53 வரை நீங்கள் வெறும் கண்களால் பார்க்கமுடியும். இந்த நூற்றாண்டின் பாதியளவு மறைந்து பிறகு தெரியும் இந்த சந்திரகிரகணம் 27 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது.

இந்த வானியல் அற்புத நிகழ்ச்சியை நாடு முழுவதிலும் உள்ள விண்ணியல் ஆர்வளர்கள் கண்டுகளிக்கலாம். இந்த பாதியளவிலான சந்திரகிரகணத்தை அடுத்து 2034, 2082 வருடங்களில் மீண்டும் சந்திரகிரகணம் ஏற்படுகிறது.  

இந்தவருடம் மூன்று சந்திரகிரகணங்களும், இரண்டு வளையம் போன்ற சந்திரகிரகணங்களும் என 5 கிரகணங்கள் நிகழவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment