ஆசிரியர் தகுதி தேர்வு சிறப்பு வினா விடைகள் பாகம் 1


* சமூக வளர்ச்சி என்பது சமூக ஏற்புடைய நடத்தைகளை மேற்கொள்ளவும் மற்றும் பிறருடன் இணக்கமாக வாழ உதவும் திறன்களை பெறுதல் ஆகும்.


* சமூக விழிப்புணர்வு, வாழ்வியல் திறன்கள், மொழியறிவு நற்பண்புகள் போன்றவற்றைப் பெற்று சமூகத்துடன் நல்ல பொறுத்தப்பாட்டை அடைவதை சமூக வளர்ச்சி என்று கூறலாம்.

* சமூக வளர்ச்சி என்பது சமூகத் தொடர்புகளில் முதிர்ச்சி பெறுதல் என்பதாகும் ஹர்லாக் என்பவரின் கருத்தாகும்.

* சமூக வளர்ச்சி, சமூக இயல்பினை அடைதல் ஆகியவற்றின் இறுதி இலக்கு சமூக முதிர்ச்சியினை பெறுதலாகும்.

* குழந்தைகளின் நட்பு சாதி, மதம், பொருளாதார வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது. இந்த நட்புக்கு ஆண், பெண் என்ப இனப்பாகுபாடு ஏதுமில்லை.

* குழந்தைகளின் நட்பு எதிர்பாராமலும் மற்றும் தன்னிச்சையாகவும் ஏற்படுகிறது. சம வயது, உயரம், எடை, ஆர்வும் மற்றும் திறன்களின் அடிப்படையில் நட்பு ஏற்படுகிறது.

* பொதுவாக குழந்தைகள் உடலாலும் உள்ளத்தாலும் அதிக நெகிழ்வுத் தன்மையுடைவர்கள். இவர்கள் புதிய மனிதர்கள், புதிய இடங்கள், விலங்குகள் போன்றவற்றை கண்டு அச்சமடைகின்றனர்.

* சம வயதுள்ள குழந்தைகளை வழகி நட்பு கொள்ள பள்ளிக்கூடம் அதிக வாய்ப்புக்களை அளிக்கிறது.

* சம வயது மற்றும் சம நிலைகளில் உள்ள  குழந்தைகள் ஒன்றுபட்டு உருவாக்கும் குழுவினை ஒப்பார் குழு என்று கூறுகிறோம்.

* ஒப்பார் குழுக்கள் எதிர்பாரா விதமாகவும், சுதந்திரமாகவும் ஏற்படுகிறது. இக்குழுக்கள் பெரும்பாலும் விளையாட்டை மையமாக வைத்து உருவாகிறது.

* பள்ளிக்குள் நுழையும் குழந்தைகளை முதல் தன் அன்பையும் ஆதரவையும் காட்டி ஏற்றுக்கொள்ளும் குழு ஒப்பார்க் குழுவாகும்.

* அன்பு, அரவணைப்பு, மகிழ்ச்சி போன்ற மனதிற்கு இன்பம் தரும் மனவெழுச்சிகளும், சினம், அச்சம், பொறாமை போன்ற மனதிற்குத் துன்பம் தரும் மனவெழுச்சிகளும் அளவோடு இருந்தால் மனவெழுச்சி சமநிலையடையும்.

* சினம் என்பதை குட் இனஃப் என்ற அறிவியலறிஞர் 1.திக்கற்ற சினம் - இச்சினம் கொண்ட சிறுவர்கள் தங்கள் சினத்தை யாரிடம் அல்லது எதன்மீது செலுத்துவது என்று தெரியாமல் கால்களை தரையில் உதைத்தும் மூச்சை அடக்கிக் கொண்டும் அல்லது வீரிட்டு அலறியும் வெளிப்படுத்துகின்றனர்.

2. இயங்க அல்லது பேச மறுக்கும் சினம் - கொடுத்த வேலையை செய்ய மாட்டேன் என்று எதிர்த்துப் பேசுவது இயங்க மறுக்கும் சினமாகும். நண்பனுடன் சினம் கொண்டக் குழந்தை, இனிமேல் உன்னுடன் பேச மாட்டேன் என்று சொல்லிச் செல்வது பேச மறுக்கும் சினமாகும்.

3. பழி வாங்கும் சினம் - சிறுவர்கள் சில நேரங்களில் தங்களுடையச் சினத்திற்கு காரணமானவர்களை அடித்து துன்புறுத்தியும், கடித்தும் அல்லது வாய்க்கு வந்தபடி கடும் சொற்களைப் பேசி பழிவாங்குகின்றனர். பழிவாங்கும் சின சில நேரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என வகைப்படுத்தியுள்ளார்.

* பதற்றம் என்பது தீங்கு வரும் என்று அஞ்சி நடுங்கும் ஒருவித மனவெழுச்சியாகும். பிறரால் ஏமாற்றப்படும்பொழுதும், அச்சம் மூட்டப்படும்பொழுதும் அல்லது இடையூறு செய்யும்பொழுதும் பதமடைகின்றனர்.

* அனைத்து வயதினரும் தங்கள் மொத்த சினங்களில் உடல் பாதுகாப்பிற்காக 20 சதவீதம், அதிகாரம் செலுத்துபவர்கள் மீது 20 சதவீதம், சமூக உறவில் ஏற்படும் பிரச்சனைகள் மீது 30 சதவீதம் என ஏறத்தாழ 70 சதவீத சினத்தைப் பிறர் மீது உடனடியாகச் செலுத்துகின்றனர்.

* இரக்கம் சமூக உறவை வளப்படுத்தும் ஒரு அரிய மனவெழுச்சி ஆகும்.

* நகைச்சுவை உணர்வு மனித வாழ்க்கையின் மிகப்பெரிய சொத்தாகும்.

* இன்பம் தரும் அன்பு, பரிவு, பாசம் மற்றும் மகிழ்ச்சி போன்ற மனவெழுச்சிகளை வளர்த்துக் கொண்டும், துன்பம் தரும் அச்சம், சினம், பதட்டம், பொறாமை போன்ற * மனவெழுச்சிகளைக் குறைத்துக் கொண்டும், மற்றவர்களுடன் இணக்கமாக வாழும் இயல்புடையவரை மனவெழுச்சி முதிர்ச்சி பெற்றவர் எனலாம்.

மகிழ்ச்சியற்றும், சினமுற்றும், அச்சமுற்றும், அமைதியற்றும் வெறுப்படைந்தும் அல்லது பழிவாங்கும் உணர்வுடன் மற்றவர்களால் வெறுத்து ஒதுக்கத்தக்க விதத்தில் நடந்து கொள்பவனை மனவெழுச்சி முதிர்ச்சியற்றவன் எனலாம்.

ஒழுக்க வளர்ச்சி

* கல்வியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று மாணவர்களிடையே நல்லொழுக்க வளர்ச்சிக்கான வாய்ப்புக்களை அளித்தலாகும்.

* நுண்ணறிவினைக் காட்டிலும் நல்லொழுக்கமே இண்றைய முக்கிய தேவை என்பதில் பெருமளவு உண்மை உள்ளது.

* சரி, தவறு என்று பிரித்தறியும் திறனைப் பெற்று (ஒழுக்க உணர்வைப் பெற்று), தனக்கென ஒழுக்கக் கோட்பாட்டை அமைத்துக் கொள்வதையே ஒழுக்க வளர்ச்சி குறிப்பிடுகிறது.

* குழந்தைகளது ஒழுக்க வளர்ச்சி தனிப்பட்டு நிகழ்வதில்லை. குழந்தைகளின் ஒழுக்கம் பல நிலைகளில் வளர்ச்சியுறுகிறது. அதன் அறிவு வளர்ச்சி, மனவெழுச்சிகளது வளர்ச்சி, சமூகப் பண்புகளுது வளர்ச்சி ஆகியவற்றுடன் இணைந்தே நிகழ்வதாகும்.

* ஒழுக்கக் கல்வி எனப்படுவது பல்வேறு அறப்பற்றுகளை வளர்த்துக்கொள்ள குழந்தைகளுக்கு உதவுவதலும் இவற்றை வலுமிக்க ஆக்கநிலையில் அமைந்த தற்கருத்தின் அடிப்படையில் பயிற்சி அளித்தலும் ஆகும்.

* ஒழுக்க வளர்ச்சியில் நான்கு நிலைகளை உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். அவை 1. பட்டறி நிலை (Prudential Stage) இந்நிலையில் மகிழ்ச்சி, துன்பம் எனப்படும் இரு இலக்குகளால் குழந்தையின் நடத்தை கட்டுப்படுத்தப்படுகிறது.

2.ஆதிக்க நிலை அல்லது ஆளப்படு நிலை(Authoritarian Stage) குழந்தை தன்னைவிட மூத்தோரான பெற்றோர்கள், ஆசிரியர்கள் போன்ற தம் மீது ஆதிக்கம் செலுத்துவோரின் சொற்படி நடக்கத் தொடங்குகிறது.

3. சமூக நிலை (Social Stage) -  சமூகப் பழக்க வழக்கங்களால் குழந்தையின் நடத்தை பாதிக்கப்படுகிறது. சமூக ஏற்புள்ள நடத்தையையே குழந்தை மேற்கொள்ளும். நம்மில் பலருடைய ஒழுக்க வளர்ச்சி இந்நிலையிலேயே தேங்கி நிற்கும்.

4. உயரிய நிலையான தனித்த நிலை (Personal Stage)

* பியாஜே குறிப்பிடுவது போன்ற ஒழுக்க வளர்ச்சிக்கும், முதிர்ச்சி பெறுதலுக்கும் தொடர்பு உண்டு என்று கோல்பர்க் கருதுகிறார்.

* ஒழுக்கம் என்பது பல அறப்ற்றுக்களையும் நற்பண்புகளையும் உள்ளடக்கிய தானுணர்ச்சியுடன் இணைந்து செயல்படுதலே ஆகும்.

* ஏழை எளிய மாணவர்களுக்கு பணம், பொருள் ஆகியவற்றைக் கொடுத்து உதவும் பண்பு தர்மம் எனலாம்.

* பிறருக்கு உதவி செய்யும் மனப்பாங்கினை தர்மசிந்தனை என்று குறிப்பிடலாம்.

* இலட்சியம் ஐந்து ஆண்டுகளுக்கு மேலானதாக இருப்பின் அது வாழ்வின் இலட்சியமாகிவிடும்.

* ஒழுங்கு எனப்படுவது தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்வதன் விளைவாக எழும் நன்னடத்தையாகும்.

* ஒழுக்க வளர்ச்சியும்(Moral Development) ஒழுங்கு நிலையும் (Level 0f Discipline) ஒன்றுடன் ஒன்று இணைந்தவை.

* ஒழுங்கு எனப்படுவது தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்வதன் விளைவாக எழும் நன்னடத்தை ஆகும்.

Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment