ஆசிரியர் தகுதி தேர்வு சிறப்பு வினா விடைகள் பாகம் 2


நுண்ணறிவு

*  நுண்ணறிவுச் சோதனைகளின் தந்தை எனக் கூறப்படும் ஆல்பிரட் பினே என்பவர் புரிந்து கொள்ளல், புதுமை புனைதல், தொடங்கிய
செயலைத் தொடர்ந்து முடித்தல், தனது நடத்தையில் உள்ள குறைபாடுகளைத் தானே உணர்தல் போன்ற கூறுகள் நிண்ணறிவினுள் அடங்கியுள்ளன என்றார்.

*  நோக்த்தோடு செயல்படுதல், பகுத்தரிவோடு சிந்தித்தல், திறமையாகச் சூழ்நிலையைச் சமாளித்தல் போன்றவை அடங்கிய !ரு கூட்டுச் செயலாற்றலே நுண்ணறிவு என்று வெக்ஸ்லர் கூறுகிறார்.

*  தார்ன்டைக் என்பவர் கூற்றின் படி நுண்ணறிவு மூன்று வகைப்படுகிறது.

*  1.சமூக நுண்ணறிவு: பிறரைத் தன்பால் ஈர்க்கும் திறன் கொண்டு சமூகத்துடன் இணைந்து வாழ்தல் சமூக நுண்ணறிவு எனப்படும்.

*  2.கருத்தியல் நுண்ணறிவு: பல்வேறு குறியீடுகள், சொற்கள் வரைபடம், எண்கள் ஆகியற்றுக்கிடையேயான தொடர்பினை அறிந்து பிரச்சனைக்குத் தீர்வு காணுதல் கருத்தியல் நுண்ணறிவு எனப்படுகிறது.

*  3.பொறியியல் சார்ந்த நுண்ணறிவு: பல்வேறு இயந்திரங்களை வடிவமைத்துத் திறமையாகக் கையாளும் திறனைப் பெற்றுத் திகழ்வதே பொறியியல் சார்ந்த நுண்ணறிவு எனப்படுகிறது.

*  நுண்ணறிவு என்பது புரிந்துகொள்ளும் ஆற்றல், சிக்கலைத் தீர்க்கும் ஆற்றல், தொடர்பு காணும் ஆற்றல், சூழ்நிலைப் பொருத்தப்பட, கருத்தியல் சிந்தனைத் திறன் போன்ற ஆற்றல்கள் அல்லது திறன்களின் தொகுப்பாகும்.

நுண்ணறிவு கோட்பாடுகள்:

*  மூன்று வகை நுண்ணறிவுக் கோட்பாடுகள் கூறப்பட்டுள்ளன. அவை ஒற்றைக் காரணி, இரட்டைக் காரணி, குழுக்காரணி என மூவகைப்படும்.

*  ஒற்றைக் காரணிக் கோட்பாடு: இக்கோட்பாடு நுண்ணறிவு பற்றிய முடியரசுக் கொள்கை எனப்படுகிறது. நுண்ணறிவு ஒரு பொதுத் திறனாகும். ஒருவரின் பல வகையான திறன்களை இயக்கக்கூடிய வல்லமை வாய்ந்த ஒரு திறன் உண்டு எனவும் அதுவே அவரது நுண்ணறிவாகும் என இக்கோட்பாடு குறிப்பிடுகிறது.

*  ஸ்பியர்மென் இரட்டைக் காரணிக் கோட்பாட்டைக் கொண்டு வந்துள்ளார்.

*  ஸ்பியர்மென் கருத்தின்படி நுண்ணறிவு இரு காரணிகளால் ஆனது. நுண்ணறிவு = பொதுக்காராணி(ஏ) + சிறப்புக் காரணி(ந) உதாரணமாக மின்சக்தி ஒரு பொதுக்காரணியாகும்.

*  தார்ண்டைக்கின் பல்காரணிக் கொள்கை: இக்கோட்பாட்டின்படி நுண்ணறிவானது பல்லாயிரக் கணக்கான சிறு சிறு ஆற்றல்களை உள்ளடக்கியது. இக்கோட்பாட்டின்படி நுண்ணறிவு என்பது ஒரே காரணியால் ஆனது அல்ல.

*  தார்ண்டைக்கின் நுண்ணறிவுச் சோதனை நான்கு பகுதிகளைக் கொண்டது. அவை 1.வாக்கியத்தைப் பூர்த்தி செய்தல் 2. எண் கணக்குகள் தொடர்பான ஆராய்ந்தறிதல் 3. சொற்களஞ்சியம் 4. கட்டளைகளை நிறைவேற்றுதல் ஆகியன.

*  தர்ஸ்டனின் கருத்துப்படி நுண்ணறிவு ஏழு வகையான அடிப்படை மனத்திறன்களால் ஆனதாகும். செல்லாற்றல், சொல்வேகத் திறன், எண்ணாற்றல், இட ஆற்றல், நி்னைவாற்றல், புலன்காட்சி வேகம், காரணி காரியத் தொடர்பு அறிதல் ஆகிய ஏழு தனித்தன்மை கொண்டது ஒவ்வொன்றும் நுண்ணறிவின் வெழ்வேறு திறன்களை அளப்பவை.

*  சமீபவத்தில் கார்டனர் நுண்ணறிவின் பல வகைப்பாடுகளை விளக்கி பன்மை நுண்ணறிவு என்ற கருத்தை வெளியிட்டுள்ளார். நுண்ணறிவு என்ற கருத்தை வெளியிட்டுள்ளார். நுண்ணறிவுமிக்கோரின் செயல்பாடுகளை ஆய்வு செய்து பத்து வகை நுண்ணறிவுகள் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார்.

*  மொழித்திறன், கணித்திறன், இசைத்திறன், தொடு உணர் திறன், பிறரோடு தொடர்பு கொள்ளுதல் திறன், தன்னை அறிதல், இயற்கையை அறிதல், ஆன்மீக அறிவு போன்ற பத்து திறன்களில் ஒன்றிலோ அல்லது சிலவற்றிலோ ஒருவருடைய நுண்ணறிவு அதிக அளவு இருக்கலாம்.

நுண்ணறிவு சோதனைகள்

*  நுண்ணறிவு என்பது தொடர்ந்து வளர்ச்சியடையும் ஒர் ஆற்றல் என பினே கருதினார்.

*  நுண்ணறிவின் உண்மை இயல்புகளை ஒரளவு அறிந்து அதை அளப்ப வெற்றி கண்டவர் ஆல்பிரட் பினே என்னும் பிரெஞ்சு அறிஞராவார்.

*  வெக்ஸ்லர் சோதனையை 7 முதல் 16 வயது வரையிலான மாணவர்களுக்குப் பயன்படுத்தி அவர்களின் நுண்ணறிவை அளவிட இயலும்.

*  வெக்ஸ்லரின் நுண்ணறிவு சோதனைகளில் இரண்டு வகைச் சோதனைத் தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை சொற்சோதனை, செயற்சோதனை.

*  சொற்சோதனைகளில் பல உருப்படிகள் அல்லது புதிர்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இவற்றைப் படித்துப் புரிந்து கொண்டு விடையளிக்கவோ அல்லது புதிரைத் தீர்க்கவோ வேண்டும். இத்தகைய சோதனைகள் பேப்பர் பென்சில் சோதனைகள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில பங்கு பெற மொழியறிவு தேவை.

*  நம் நாட்டில் பாட்டியா என்பவர் உருவாக்கிய செயற்சோதனை அடுக்கு மிகப் பிரபலமாக உள்ளது. இதில் வடிவப்பலகை, சிக்கலறை சோதனை, கட்டைக் கோலச் சோதனை அலெக்சாண்டரின் நகர்த்திச் செல்லல் சோதனை, படநிரப்புச் சோதனை ஆகியவை உள்ளடங்கியுள்ளன.

நுண்ணறிவு ஈவு

*  நுண்ணறிவின் அளவை உளவியல் வல்லுநர்கள் நுண்ணறிவு ஈவு என்னும் ஒர் அளவையினால் குறிப்பிடுகின்றனர்.

*  டெர்மன் என்பவர்தான் முதன் முதலில் நுண்ணறிவு ஈவு என்னும் சொல்லை அறிமுகப்படுத்தினார்.

*  ஒருவருடைய மனவயதுடன் அவனது கால வயதினை ஒப்பு நோக்க நுண்ணறிவுத் திறன் அளவைக் குறிப்பிடுவர். மனவயதை கால வயதால் வகுத்து 100 ஆல் பெருக்கினால் கிடைக்கும் எண்ணே நுண்ணறிவு ஈவு எனப்படும்.

*  நுண்ணறிவு ஈவு (IQ) = மனவயது(மாதங்களில்) (MA)
                                            -------------------------------------------X 100
                                            கால வயது (மாதங்களில் (CA)

*  100 ஆல் பெருக்குவது ஈவு பின்னமாக இல்லாமல் முழு எண்ணாக இருப்பதற்காகத்தான்.

*  மனவயது என்பது சோதிக்கப்படுபவரின் நுண்ணறிவு முதிர்ச்சியைக் குறிக்கும் அளவாகும்.

*  நுண்ணறிவு வளர்ச்சி 16 வயது வரை நீடிக்கும். எனவே நுண்ணறிவு ஈவு கணக்கிடும்போது சோதிக்கப்படுவோர் 16 வயதிற்குக் குறைவாக இருத்தல் வேண்டும். *  நுண்ணறிவு அதிகமாக பெற்றுள்ள குழந்தைகள் பள்ளிப் படிப்பிலும் முன்னணியில் இருப்பர்.

ஆக்கத்திறன்

*  ஆக்கத்திறன் எனப்படுவது ஆக்கச் சிந்தனையுடன் தொடர்புடையது.

*  புதுமையான மற்றும் தனித்தன்மையுள்ளவற்றைப் படைக்கும் அல்லது உருவாக்கும் திறனை ஆக்கத்திறன் என்று கூறலாம்.

*  கிரகாம் வாலிஸ் கருத்துப்பட் ஆக்கச்சிந்தனையில் 1. ஆயத்த நிலை 2. உள் வளர்ச்சி, 3. விளக்கம் தோன்றல் அல்லது உள்ளொளி தோன்றுதல் 4. சரி பார்த்தல் என்ற நான்கு படிகள் உள்ளன.

*  டாரன்ஸ் என்பவர் ஆக்கத்திறனின் ஐந்து பண்புகளாக 1. தன்னியல்பு, 2. நெகிழ்ச்சி 3.மாற்றுத்தன்மை 4.கருத்துவேகம் 5.முற்றிலும் புதுமை ஆகியவற்றைக் குறிப்பிடுகிறார்.

*  நுண்ணறிவுக்கு குவி சிந்தனையும், ஆக்கத்திறனுக்கு விரி சிந்தனையும் அடிப்படையாக விளங்குகின்றன.

*  பிறந்த குழந்தை சில மணி நேரத்திலேயே தன்னைச் சுற்றி உள்ளவர்களின் முகங்களையும், தாயின் குரலையும் அறிந்து கொள்கிறது ஒரிரு வாரத்திலேயே நிறங்கள், வடிவங்கல், குரல் வேறுபாடுகளை அறிந்து கொள்கின்றனர்.

*  ஆறு மாதத்திலிருந்து 18 மாதத்தில் குழந்தைகள் தங்களைச் சுற்றி நடப்பவைகளை அறிந்து அது தொடர்பாக நடக்க முயற்சிக்கின்றனர்.

*  குழந்தைக்குக் கற்றல் என்பது அது செல்லும் எல்லா இடங்களிலும் அதற்குக் கிடைக்கும் அனுபவங்கள் மூலம் ஏற்படுகிறது.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment