இந்த ஆண்டு +2 வுக்கு புதிய பாடத்திட்டம்


+ 1 மற்றும் + 2 வகுப்புகளுக்கு அடுத்த (2014 – 15) கல்வியாண்டிலிருந்து புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


அதற்கான வரைவு பாடத்திட்டம் பொது மக்கள் பார்வைக்கென இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குனர் கு. தேவராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“2014–2015–ம் கல்வி ஆண்டில் பிளஸ்–1, பிளஸ்–2 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. அதற்காக தமிழக அரசால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழு, 24 பாடங்களுக்கு வரைவு பாடத்திட்டம் தயாரித்துள்ளது. அந்த வரைவு பாடத்திட்டம் www.tnschools.gov.in என்ற இணையதளத்தில் மே 30–ந்தேதி வரை பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள் பிளஸ்–1, பிளஸ்–2 வரைவுபாடத்திட்டத்தை உற்று நோக்கி தங்களது கருத்துக்களை சென்னை–6 மாநிலகல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனருக்கு scrtt@gmail.com என்ற இ–மெயில் அல்லது கடிதம் மூலமாக தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,” என தெரிவித்துள்ளார்.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment