ஆசிரியர் தகுதி தேர்வு சிறப்பு வினா விடைகள் பாகம் 3


கற்றல்

*  தற்போது ஆரம்பக் பள்லிகளில் செயல்வழிக் கற்றல் முறையில் கற்பிக்கப்படுகிறது.


*  கற்றல் என்பது பயிற்சி, அனுபவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவனிடம் எற்படக்கூடிய ஒரளவு நிலையான நடத்தை மாற்றத்தைக் குறிப்பதாகும்.

*  கற்றல் என்பது நமது அனுபவங்களில் இருந்து நாம் பெறும் படிப்பினை அல்லது விளைபயன்கள் ஆகும்.

*  மனிதன் ஒரு சமூக விலங்கு(அரிஸ்டாட்டில்), மனிதன் தனியே வாழ முடியாது. பிறரைச் சார்ந்தே வாழ வேண்டியுள்ளது. எனவே குழந்தைகளுக்கு கூடி வாழக் கற்பிப்பது அவசியம்.

*  பள்ளியில் கல்வி என்பது 1.அறிவு பெறக் கற்றல் 2.செயல்களைச் செய்யக் கற்றல் 3. வாழக் கற்றல் 4. நல்ல மனிதனாக இருக்கக் கற்றல் ஆகிய நான்கும் கற்றல் திறன்களையும் வளர்க்க வழி வகை செய்ய வேண்டுமென யுனெஸ்கோவின் டெலார்ஸ்(1996) அறிக்கை வலியுறுத்துகிறது.

*  குழந்தைகள் நமது வாழ்க்கையைப் பூர்த்தி செய்யப் பிறப்பதில்லை அவர்களது வாழ்க்கையைப் பூர்த்தி செய்யவே பிறந்திருக்கிறார்கள்- வில்லியம் மார்டின்.

*  ஸ்கீமாக்கள் என்பவை நடத்தையாகவோ(உண்ணுதல், ஆடை அணிதல்), குறியீடுகளாகவோ(சொற்கள், எண்கள், உருவங்கள்) அல்லது மனச் செயல்பாடுகளாகவோ (கற்பனை செய்தல், கணக்குகள் செய்தல்) இருக்கலாம்.

*  காலப்போக்கில் குழந்தைகள் பெறும் அனுபவங்களின் மூலம் ஸ்கீமா ஒன்றிணைக்கப்படுதல் மற்றும் பகுக்கப்படுதல் என்னும் செயல்கள் மூலம் பல்வேறு பட்ட சிக்கலான செயல்பாடுகளாக மாறுகின்றன.

*  குழந்தைகள் உடன் இணைத்துக் கொள்ளுதல் மற்றும் தன் மயமாக்கிக் கொள்ளுதல் என்னும் இரு வேறுபட்ட மனச் செயல்பாடுகள் மூலம் குழந்தை தான் பெறும் புதிய செய்தியைத் தன் முந்தைய அறிவுடன் கட்டமைத்துக் கொள்கிறது. இதனையே கற்றல் என்கிறோம்.

*  மொழியைக் கற்பது என்பது ஒலி வடிவ, வரி வடிவக் குறியீடுகளைக் கற்பதாகும். குறியீடுகளைக் கற்பதால் நமது சிந்தனைத் திறன் வளர்ச்சி அடைகிறது.

*  மொழி கற்றல் பற்றிய நடத்தைக் கொள்கையை வெளியிட்டவர் ஸ்கின்னர் என்பவர் ஆவார்.

*  மொழியைக் கற்றுக்கொள்ளும் திறன் மனிதர்களுக்குள் இயல்பாகவே அமைந்துள்ளது என்று கூறுவது இயல்புத் திறன் கொள்கையாகும். இக்கொள்கையை வடிவமைத்தவர் கோம்ஸ்கி என்பவர் ஆவார்.

*  புதியதாக உள்வாங்கும் செய்திகள் முன்னதாக உருவாகி இருக்கும் ஒரு ஸ்கீமாவுடன் பொருந்துகிற வரை அந்த ல்கீமாவில் மாற்றம் ஏற்படுவதில்லை.

*  குழந்தைகள் உடன் இணைத்துக் கொள்ளுதல் மற்றும் தன்மயமாக்கிக் கொள்ளுதல் என்னும் இரு வேறுபட்ட மனச் செயல்பாடுகள் மூலம் குழந்தை தான் பெறும் புதிய செய்தியைத் தன் முந்தைய அறிவுடன் கட்டமைத்துக் கொள்கிறது இதனையே கற்றல் என்கிறோம்.

*  ஊக்குவித்தல் என்பது ஒருவர் ஒரு செயலைத் தொடங்கவும், வழி நடத்தவும், தீவிரப்படுத்தவும், அதிலே நிலைத்திருக்கவும் காரணமாக இருப்பது ஊக்கம் ஆகும். இதனைத் தூண்டச் செய்யும் முயற்சியே ஊக்குவித்தல் எனப்படும்.

*  குழந்தைகள் ஏற்கனவே அறிந்திருக்கும் கருத்துக்களோடு புதிய கருத்தை இணைத்துக் கற்பித்தால் கற்றல் சிறப்பாக நடைபெறும்.

விவரங்களை அறிதல் மன அனுபவங்கள் மற்றும் செயல்திறன்கள் ஆகியவை மேம்பாடு அடைய மனத்திறன்களை குவியச் செய்து வழிநடத்தும் செயலே கவனம் எனப்படும்.

*  ஜப்பான் நாட்டைப் போல பன்மைப் போக்குடைய கலாச்சாரத்தைக் கொண்ட நம் நாட்டில் குழந்தைகளுக்கு தொடக்கத்திலிருந்து பன்மைப் போக்குடைய கலாச்சாரத்திற்கான பயிற்சியை வழங்க வேண்டும்.

*  பள்ளியில் சகமானவர்களுடன் இடைவினையாற்றும்போது குழந்தைகள் மொழித் திறனைப் பெறுகின்றனர். கூட்டுறவு விட்டுகொடுக்கும் மனப்பான்மை ஆகிய சமூகத் திறன்களையும் கற்றுக் கொள்கின்றனர்.

*  பள்ளியை அடுத்து குழந்தை சமுதாயத்துடன் இடை விளையாற்றுகிறது. இதனால் சமூகத்தைப் பற்றிய அறிவையும் குழந்தை பெறுகிறது.

*  சமூதாயத்தில் பல நிலைகளில் இடைவினையாற்றும் வாய்ப்புகள் பெறாத குழந்தை சமூகத்தைப் பற்றிக் குறைவாக அறிந்திருப்பர். மேலும் சமூகத்திறமையற்றவர்களாகவும், தனிமையை விரும்பும் ஆளுமைப் பண்புடையவராகவும், ஊக்கம் மற்றும் செயல்திறம் அற்றவர்களாகவும் காணப்படுகின்றனர்.

*  இந்திய அரசியலமைப்புச் சட்டம், 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் இலவச கட்டாயக் கல்வி பெறுவதை, குழந்தைகளின் அடிப்படை உரிமையாக அறிவித்துள்ளது. எனவே சாதி, மத, இன, மொழி, பொருளாதார, கலாச்சார பாராபட்சம் இன்றி அனைத்து குழந்தைகளுக்கும் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வியும், கல்வியில் சமத்துவமும் சமவாய்ப்புகளும் அளிக்கப்படுகின்றது.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment