ஆசிரியர் தகுதி தேர்வு சிறப்பு வினா விடைகள் பாகம் 4


தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வின் ஐந்து தலைப்புகளில் குழந்தை மேம்பாடு மற்றும்
கற்பித்தல் என்னும் தலைப்பே தற்போது தேர்வில் அனைவருக்கும் சவாலாக உள்ள பகுதியாக உள்ளது. ஏனெனில் இத்தலைப்பில் கேட்கப்படுகின்ற வினாக்களுக்கான விடையை யூகித்து விடையளிக்க முடியாமலும், பொதுவான நடைமுறை வாழ்க்கையொடு தொடர்பில்லா பாடப்பகுதியாக இத்தலைப்பு அமைந்துள்ளதே காரணம். எனவே இப்பகுதியில் இடம்பெறும் குறிப்புகளை கூர்ந்து படித்து பலன்பெறவும். இவை தாள் - II  அதாவது தேர்வு பி.எட் நிலையிலானது.

SNAP SHOTS

*  கற்றல் - மனித நடத்தையில் ஏற்படும் மாற்றம்

*  சிக்மண்ட் ப்ராய்டு - உளப்பகுப்பாய்வு கோட்பாடு, கனவுகள் ஆய்வு

*  ஆல்டர் - தனிநபர் உளவியல்

*  மாஸ்லோ, காரல் ரோஜர்ஸ் - மனித நேய உளவியல்

*  மரபு - தன் பொற்றோர்களிடமிருந்து பெரும் உடற்கூறு மற்றும் உளக்கூறு பண்புகள்

*  சூழ்நிலை - நம்மை சுற்றியுள்ள தூண்டலுக்கேற்ற தலங்கள்

*  ஒரு கரு இரட்டையர் - ஒரு கரு முட்டையுடன் இரு விந்தணு கூடி கருவுறுதல்.

*  மரபும், சூழலும் - மனித வளர்ச்சிக்கு முக்கியமானது.

*  கவனப்பிரிவு, கவனப்பகுப்பு - ஒரே நேரத்தில் இரு செயல்களில் கவனம் செலுத்துதல்.

*  கவனமாற்றம் - நமது கவனம் ஒரு செயலிலிருந்து மற்றொரு செயலுக்கு தாவுதல்.

*  கவனவீச்சு - ஒரு நொடியில் எத்தனை பொருட்களை கவனிக்க முடியுமே அப்பொருட்களின் எண்ணிக்கையே கவனவீச்சு.

*  டாசிஸ்டாஸ்கோப் - கவனவீச்சை அளவிடும் கருவி.

*  அகக்காரணி, புறக்காரணி - கவனத்துடன் தொடர்புடைய காரணிகள்- 2.

*  புறக்காரணிகள் - தூண்டலுக்கான செறிவு, உருவ அளவு, புதுமை, மாற்றம், வேறுபாடு, அசைவு, திரும்ப திரும்ப கூறுதல்.

*  அகக் காரணிகள் - தேவை, விருப்பார்வம், மனநிலை, பழக்கவழக்கம், உடல்நிலை

*  பிரச்சனை தீர்க்கும் படிநிலைகள் - பிரச்சனையை அறிதல், அடையாளம் காணுதல் புள்ளி விவரம் சேகரித்தல், கருது கோள் உருவாக்கம் மதிப்பீடு, சரிபார்த்தல்.

*  சமூக வளர்ச்சியின் பண்புகள் - தம்மை, பிறர் ஏற்றுக்கொள்ளும் திறன் பெறுதல், கலாச்சாரம் மற்றும் பண்பாடு கற்றுத் தேர்தல், மற்றவரோடு இணக்கமான நடத்தைகளை பெறுதல்.

*  முன்னோர்க்க தடை - முன்பு கற்பவை தற்போது கற்கும் செயலை நினைவு கூற குறுக்கீடு.

*  பின்னோக்கு தடை - தற்போது கற்கும் செயல், முன்னர் கற்ற செயலை நினைவு கூற தடை.

*  மறதி வரைபடம் - 1885, எபிங்காஸ்

*  கற்றலில் 20 நிமிடம் கழித்து - 47 சதவீதம் மறதி

*  கற்றலில் 1 மணி நேரம் - 60 சதவீதம் மறதி

*  கற்றலில் 9 மணிநேரம் - 70 சதவீதம் மறதி.

*  கற்றலில் 1 மாதம் கழித்து - கிட்டத்தட்ட முழுவதும் மறதி.

*  கற்றல் படிநிலை கோட்பாடு - காக்னே

*  கற்றல் வளைவு - பூஜ்ய முன்னேற்றம், நேர்மறையான முன்னேற்றம், எதிர்மறையான முன்னேற்றம், தேக்கநிலை.

*  தேக்க நிலைக்கான காரணிகள் - அறிவு எல்லை, உளவியல் எல்லை, ஊக்குவித்தல் எல்லை.

*  நுண்ணறிவு சொல்லை முதலில் அறிமுகப்படுத்தியவர் - ஆல்பர்ட் பீனே

*  நுண்ணறிவின் வகைகள் - 3. அவை: 1.தாண்டைக் கருத்தியல் நுண்ணறிவு 2. பொறியியல் நுண்ணறிவு 3. சமூக நுண்ணறிவு.

*  புலண் - உணர்வு ஐம்புலன்கள் மூலமாக ஏற்படும் உணர்வு.

*  புலன் - காட்சி புலன் உணர்வும், பொருள் அறிந்து புரிதலும்.

*  அறிவின் வாயில்கள் - ஐம்புலன்கள்

*  புலன்காட்சி விதி - உருவ பின்னணி

*  புலன்காட்சி வெலிப்புறக் காரணிகள் - அண்மை விதி, ஒப்புமை விதி, தொடர்ச்சி விதி, பூர்த்தி செய்தல் விதி, முழுமைக் காட்சி விதி.

*  புலன்காட்சி உட்புறக்காரணிகள் - கடந்தகால அனுபவம், மனப்பான்மைகள்.

*  புலன்காட்சி பிழைகள் -திரிபுக்காட்சி, இல்பொருள் காட்சி

*  திரிபுக்காட்சி - தவறான புலன்காட்சி, பொருள் திரிந்து காணப்படுதல்(முல்லர் - லேயர்)

*  இல்பொருள் காட்சி - எவ்வித தூண்டல் இல்லாமல் பொருள் இருப்பதாக உணர்தல்.

*  பயிற்சி மாற்ற உளப்பயிற்சி கோட்பாடு - வில்லியம் ஜேம்ஸ்

*  பயிற்சி மாற்ற ஒத்தக்கூறு கோட்பாடு - தாண்டைக்

*  பயிற்சி மாற்ற பொதுவிதிக் கோட்பாடு - C.H. கீடு.

*  பயிற்சி மாற்ற குறிக்கோள் கோட்பாடு - w.C. பேக்லி

*  நினைவு - கற்றவற்றை மனத்தில் இருத்தி தேவைப்படும்பொழுது வெளிக்கொணர்தல்.

*  நினைவு படிநிலை - கற்றல், மனத்திருத்தல், மீட்டுணர்தல், மீட்டறிதல், மீட்டுக்கொணர்தல்

*  நினைவு வீச்சு - பார்த்த பொருளில் எத்தனை தவறின்றி கூறப்படுகிறதோ அந்த ஆற்றல்

*  மறதி - கற்றவற்றை நினைவு கூர்தலில் ஏற்படும் நிரந்தரமான அல்லது தற்காலிக இழப்பு முறை.

*  மறதி வகை - இயற்கை மறதி, செயற்கை மறதி.

*  மறதிக்கான காரணம் - காலம் கடந்து செல்லுதல், தடைகள், அடக்குதல், மனவெழுச்சி, பதட்டம், உடல்நலமின்மை.

*  ஒருவர் கருத்தை வெளிப்படுத்தும் கருவி - மொழி

*  ஒலி வடிவமான பொருளுக்குரிய குறியீடு - மொழி

*  மொழியின் அடிப்படை திறன் - கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல்

*  சில நோக்கத்தை நோக்கி, முடிவுகள் எடுக்க தொடர்ச்சியான வழிநடத்தும் கருத்துக்கள் - சிந்தனை

*  சிந்தனைக் கூறுகள் - பிம்பங்கள், கருத்துமைகள், குறியீடு, அடையாளம், மொழி, தசைச் செயல்பாடுகள், மூளைச் செயல்பாடுகள்.

*  மொழி வளர்ச்சிக்கு முக்கிய காரணி - ஊக்குவித்தல்

*  கற்பித்தலின் முதல் படிநிலை - திட்டமிடுதல்

*  கற்பித்தலின் கடைசி படிநிலை - மதிப்பீடு செய்தல்

*  குவி சிந்தனை - குறிப்பிட்ட தூண்டலுக்கான துலங்கள் யாவும் ஒரே இலக்கினை அடைதல்

*  விரி சிந்தனை - குறிப்பிட்ட தூண்டல் வெவேவேறு விதமான பல துலங்களை வரவழைத்தல்.

*  குவி சிந்தனை - செங்குத்துச் சிந்தனை

*  விரி சிந்தனை - பக்கவாட்டு சிந்தனை

*  காரண காரியம் ஆராய்தல் - ஆராய்ந்து பிரச்சனைக்கு முடிவு காணுதல்

*  ஆய்வுச் செயலில் - தொகுத்தறிமானம், பகுத்தறிமானம் இணைந்து காணப்படும்.

*  கற்றலின் அடிப்படை அலகு - பொதுமைக் கருத்து

*  பொருட்கள், நிகழ்ச்சிகள் பற்றிய பொதுவான தன்மையை காட்டும் குறியீடுகள் காட்டும் குறியீடுகள் - பொதுமைக் கருத்து

*  பொதுமைக் கருத்தின் வகைகள் - எளிய கருத்து, சிக்கலான கருத்து, இணைப்பு கருத்து, இணைப்பற்ற கருத்து, தொடர்பு கருத்து.

*  பொதுமைக் கருத்து உருவாதல் படிநிலைகள் - புலன்காட்சி, பண்புகளை பிரித்தல், பொதுமைப்படுத்துதல், வேறுபடுத்துதல்.

*  பொதுமைக்கருத்து உருவாக காரணிகள் - மாற்றம், தெளிவுநிலை, கையாளும் திறன், செயல்முறைக்கான தயார்நிலை, தொடர்புள்ள விபரங்கள்.

*  பொதுக்கருத்து படம் - ஆசுபல், ஜோடப் ஈ, நோவோ

*  The Process of Education - புரூணர்

*  நுண்ணறிவு குடியரசுக் கொள்கை ஒற்றைக் காரணிக் கோட்பாடு - சைமன் பீனே

*  இரு காரணிக் கோட்பாடு - சார்லஸ் ஃபியர்மன்(1904)

*  இரு காரணி - பொதுக் காரணி, சிறப்புக் காரணி

*  குழு காரணிக் கொள்கை - எல்.எல். தர்ஸ்டன்

*  தர்ஸ்டனின் நுண்ணறிவு PMA  - PRIMARY MENTAL ABILITIES 7 வகை அடிப்படை மனத்திறன் உடையது.

*  PMA - சொல்லாற்றல், சொல் வேகத்திறன் ஆற்றல், எண்ணாற்றல், இட ஆற்றல், நினைவாற்றல், புலன்காட்சி வேகம், காரண காரியம் அறிதல்.

*  பல காரணிக் கோட்பாடு - தாண்டைக்

*  கில்போர்டு நுண்ணறிவு கொள்கை - 3D  மாடல்

*   3D-யின் நுண்ணறிவுத் திறனின் எண்ணிக்கை - 120

*   3D நுண்ணறிவு அடங்கிய தொகுதிகள் - 3

செயல் - 5 உட்கூறுகள்

பொருள் - 4 உட்கூறுகள்

விளைவு - 6 உட்கூறுகள்

5 X 4 X 6 = 120

*  பொதுமைக் கருத்து படி படிநி்லைகளாக புரூணர் கூறுவது - செயல்சார்ந்த அறிவு நிலை 0 - 2 வயது, உருவம் சார்ந்த அறிவு நிலை 3 -7 வயது, குறியீடு சார்ந்த அறிவு நிலை 8 - 14 வயது.

*  பியாஜே - ஸ்வீட்சர்லாந்த் நாட்டை சேர்ந்தவர்.

*  பியாடேயின் அறிதல்திறன் வளர்ச்சி படிநிலை - 4. அவை: புலன் உணரும் பருவம் 0 - 2 வயது, மனச்செயல்பாட்டுக்கு முந்தைய நிலை 2 - 7 வயது, கண்கூடாக பார்த்து *  சிந்தித்து செயல்படும் பருவம் 7 - 12 முறையாக யோசித்து சிந்தித்து செயல்படும் பருவம் 12 வயது.

*  தனக்கும், பிறருக்கும் மனநிறைவை ஏற்படுத்துதல் - மனவெழுச்சி முதிர்ச்சி

*  மனவெழுச்சி வாழ்வில் பயன்படும் இடம் - வீடு, பள்ளி, பள்ளிப்பாடங்கள், பொழுதுபோக்கு இடங்கள்.

*  மனவெழுச்சி நுண்ணறிவு - தன் மற்றும் பிறர் உணர்வுகள், மனழெழுச்சிகள் கண்டறிந்து முறைப்படுத்தும் அறிவு, தன் செயல்களை நெறிப்படுத்திக் கொள்ளும் ஆற்றல்.

*  மனவெழுச்சி நுண்ணறிவின் கூறுகள் - மனவெழுச்சிகளை உணர்த்தல், வெளிப்படுத்துதல், மனவெழுச்சிகளை சிந்தனையில் பயன்படுத்துதல், மனவெழுச்சிக்களை புரிந்து கொண்டு பகுத்தாராய்தல், மனவெழுச்சிகளை நெறிப்படுத்தி சுய முன்னேற்றத்திற்கு வழிவகுத்தல்.

*  கோல்பர்க் ஒழுக்க வளர்ச்சி படிநி்லைகள் - மரபுக்கு முந்தைய நிலை, மரபு நிலை, மரபுக்கு பிந்தைய நிலை

*  ஒழுக்கம் பற்றிய முழுமையாக அறிய முயற்சிக்கும் வயது - 11 முதல் 12.

*  கற்றல் பண்புகள் - பயிற்சி, வலுவூட்டல், மாற்றம்

*  கற்றல் கூறுகள் - கற்போர், தூண்டல், துலங்கல்

*  ஒருங்கிணைந்த வளர்ச்சி - உடல், அறிவு, மனவெழுச்சி சமூக மற்றும் ஒழுங்க வளர்ச்சி இணைந்தது.

*  வளர்ச்சி சார்செயல்கள் ஹர்விகர்ஸ்ட் - ஒவ்வொரு பருவத்திலும் கட்டாயம் கற்றுத் தேரும் நடத்தைகள்

*  நெருக்கடியான சூழலில் மன உணர்வுகள் மேலோங்கி நிற்கும் நிலை மனவெழுச்சி. கூறியவர் - ஸ்பிட்ஸ்.

*  அடிப்படை மனவெழுச்சி - பிறப்பிலேயே கட்டமைக்கப்படுகிறது - சினம், பயம், மகிழ்ச்சி, ஆச்சர்யம்.

*  சிக்கலான மனவெழுச்சி - பிள்ளைப்பருவம், குமரப்பருவத்தில் தோன்றும் குழப்பம், கூச்சம், பொறாமை, தற்பெருமை, குற்ற உணர்வு.

*  பிறரை சார்ந்திருக்கும் கற்றல் - சமூக வளரச்சி, சமூக நடத்தை, சமூக மதிப்புகள் அடங்கியவை.

*  நன்னடத்தை - குணநலன் வளர்ச்சி, ஒழுக்க வளர்ச்சி

*  சமூக வளர்ச்சியின் கூறுகள் - சமூக உணர்வை பெறுதல், தனித்தன்மை பெறுதல்

*  சமூக வளர்ச்சிக்கான காரணிகள் - அகக்காரணி, புறக்காரணி

*  சமூகவியல் பினை பெறும் இறுதி இலக்கு - சமூக முதிர்ச்சி

*  எரிக்சனின் சமூக வளர்ச்சி நிலைகள் - 8

*  HATE - HEREDITY, AGE, TRAINING, ENDOCRINE GLAND

*  மனவெழுச்சி கட்டுப்பாடு - மனவெழுச்சியை முறையாக கையாளுதல்.

*  தீவிர மனவெழுச்சிப் பருவம் - குமரப் பருவம்

*  மனவெழுச்சியை கட்டுப்படுத்துதல் - உடற்பயிற்சி, தியானம், யோகா, பயிற்சிகள்

*  நுண்ணறிவு சோதனை வகை - தனியார் சோதனை, குழு சோதனை

*  நுண்ணறிவு சோதனையின் மற்றொரு வகை - சொல் சோதனை, செயல் சோதனை

*  பன்முக நுண்ணறிவுக் கோட்பாடு - கார்டனர்

*  நுண்ணறிவு ஈவு - வில்லியம் டெர்மன்

*  IQ = MC/CA X 100

*  சைமன் பீனே சோதனை - 30 வினாக்கள் உடையது.

*  வெஸ்லர் சோதனை - 7 முதல் 16 வயது குழந்தைகள் நுண்ணறிவு மதிப்பிடுதல்.

*  WISC/WISA - WESHLER  INTELLIGENCE SACLE FOR CHILDREN / ADULTS

*  வெஸ்லர் சோதனைத் தொகுதிகள் - 2

*  சொற்சோதனை செயற்சோதனை - வெஸ்லர் சோதனையின் மொத்த உறுப்புகள் - 11, சொற்சோதனை - 6, செயற்சோதனை - 5

*  அறிவு வளர்ச்சியை கூறியவர் - பியாஜே

*  உடல் வளர்ச்சியை கூறியவர் - ஹர்லாக

*  சமூக வளர்ச்சியை கூறியவர் - எரிக்சன்

*  ஒழுக்க வளர்ச்சியை கூறியவர் - கோல்பர்க்

*  ADOLESENCE - இலத்தின் மொழி

*  குமரப்பருவம் புயலும், அலையும் நிறைந்த பருவம் - ஸ்டான்லி ஹால்

*  மனப்பான்மை அளவுகோள் - லிக்கர்ட்ஸ் அளவுகோல், தர்ஸ்டன் அளவுகோல்

*  நாட்டம் - குறிப்பிட்ட துறையில் விரைவாக, பொருத்தமாக வெற்றி பெறும் திறன்.

*  நாட்டச் சோதனை - முன்னறிச் சோதனை (Prognostic Test) DAT - Different Aptitude Test, எழுத்தறிவு நாட்டச் சோதனை, பொறியியல் நாட்டச்சோதனை, மொழியாற்றல் சோதனை.

*  ஆர்வம் - ஒரு செயலை அடைவதற்கு அவனை ஊக்குவிக்கும் வினையே ஆர்வம்.

*  ஆர்வப் பட்டியல் - ஸ்ட்ராங் தொழிலார்வம் பட்டியல் (SVIB)

*  புறச்சுழலில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து உற்று நோக்குதல் - கவனம்.

*  கவனத்தின் வகைகள் - விருப்பமுள்ள கவனம், விருப்பமற்ற கவனம்

*  கவனமின்மை -குறிப்பிட்ட தூண்டல், செயலை கவனிக்காத நிலை கவனமின்மை

*  கவனமின்மையின் வகைகள் - முழுமையான கவனமின்மை, பாதியளவு கவனமின்மை

*  அறிவுபுல கற்றல் கோட்பாடு - கோலர்

*  கெஸ்சால்ட் என்னும் சொல் - ஜெர்மனி வார்த்தை

*  ஜெஸ்சால்ட் என்பதற்கு - முழுமை எனப் பொருள்

*  பிரச்சனைக்கு தீர்வு காணும் அனுபவம் - உட்காட்சி ஆற்றல்

*  உட்காட்சி கற்றலின் விலங்கு - சிம்பன்சி - மனிதகுரங்கு.

*  உட்காட்சி கற்றல் - சிக்கல் தீர்வு முறை, செய்து கற்றல் முறை, தானே கற்றல் முறைக்கு அடிப்படையாதல்.

*  பயிற்சி மாற்றல் - ஒரு சூழலில் கற்றது மற்றொரு சூழலுக்கு பயன்படுதல், உதவுதல்

*  பயிற்சி மாற்ற வகைகள் - நேர்மறை பயிற்சி மாற்றம், எதிர்மறை பயிற்சி மாற்றம், பூஜ்ஜிய பயிற்சி மாற்றம்

*  உளவியல் ஆய்வகம் ஆரம்பித்தவர் - வில்லியம் ஊண்ட் 1832 -1920

*  உளவியல் ஆய்வகம் அமைத்த நகர் - ஜெர்மன், லிப்சிக் நகர்

*  மாணவர்களின் நடத்தையை அறிவியல் பூர்வமாக ஆராயும் முறை - பரிசோதனை முறை

*  பரிசோதனை முறையின் மாறிகள் - 3 அவை: தனித்து இயக்கும் மாறிகள், சார்ந்து இயக்கும் மாறிகள், குறுக்கீட்டு மாறிகள்

*  பரிசோதனை முறையின் வகைகள் - 2 அவை: ஒரு குழு பரிசோதனை முறை, இரு குழு பரிசோதனை முறை.

*  உளவியல் முறைகளின் நம்பகமான முறை - பரிசோதனை முறை

*  மாணவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும்  உளவியல் - அறிவுரை பகர்தல் உளவியல்

*  மனிதன் நடத்தை வெளிப்படும்போது உள்நோக்கங்கள் வெளிப்பட்டு புலப்படுகிறது - ஹார்மிக் கொள்கை

*  ஹார்மிக் கொள்கையை கூறியவர் - மக்டூகல்

*  மனம், அறிவுசார் இயக்கமுடையது - வடிவமைப்புக் கோட்பாடு

*  வடிவமைப்புக் கேட்பாடு மற்றும் அகேநோக்க கோட்பாட்டைக் கூறியவர் - டிச்னர்(1887 - 1927)

*  நடத்தையே உளவியல் மையப்பொருள் - நடத்தைக்கோட்பாடு

*  நடத்தை கோட்பாட்டை கூறியவர் - வாட்சன், டோலமன், ஹப், கத்ரி, ஸகின்னர்

*  இயல்பூக்க கோட்பாட்டை கூறியவர் - மக்கேல்

*  உளவியல் முறைகளில் பழமையானது - அகநோக்கு முறை

*  தானே விருப்பு, வெறுப்பின்றி பகுத்துணரும் முறை - அகநோக்கு முறை

*  பிறரது நடத்தையை கவனித்து கூறுதல் - உற்றுநோக்கல் முறை

*  அறிவுரை பகர்தல் - தனிநபர் பிரச்சனை மையமானது.

*  வழிகாட்டல் - தனிநபர் மையமானது

*  அசாதாரணக் குழந்தைகள் - பார்வைதிறன் குறைபாடுடையோர், பின்தங்கிய குழந்தைகள், மீத்திறன் மிக்க குழந்தைகள்

*  பார்வை திறன் குறைவானவர்களுக்கான கல்வி முறை - பிரைலி, பதிவு நாடா கருவி

*  பார்வைதிறன் குறைபாட்டை போக்க - வைட்டமின் ஏ அதிகம் தேவை.

*  மீத்திறன் குழந்தைகளுக்கான திட்டம் - விரைவுக் கல்வித் திட்டம், வளமைக் கல்வித் திட்டம், குழுக் கல்வித் திட்டம்

*  கல்வியில் பின்தங்கியோர் - IQ 70 - 80 தொடர்ந்து பள்ளித் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண்களைப் பெறுவர்.

*  குறைநிலைச் சாதனையாளர் - உயர் அறிதிறனைப் பெற்றிருந்தும் குறைந்த அடைவு பெறுதல்

*  மாணவனின் நடத்தைக் கோளாறுகளைக் கண்டறிந்து அவற்றை நீக்கும் முறை - தனியாள் ஆய்வு முறை.

*  தனியாள் ஆய்வு முறையின் முக்கியமான செயல் - மாணவனின் நடத்தைகளின் தகவல்களை சேகரித்தல்.

*  தகவல் சேகரித்தலின் படிகள் - முதல்நிலைத் தகவல், கடந்தகால வரலாறு, தற்போதைய நடத்தைகள்.

*  மாணவர்களை நல்வழிகாட்ட பயன்படும் முறை - தனியாள் ஆய்வு முறை.

*  குழந்தைப் பருவம் முதல் முதிர்ச்சி பருவம் வரை நடத்தைக் கோலங்களில் வளர்ச்சி மாறுபாடுகள் அறியும் முறை - மரபுமுறை அல்லது பருவ வளர்ச்சி அறியும் முறை

*  அடைவூக்கிகள் - சாதனை புரிவதற்கான ஆற்றல், தோல்வியை தவிர்த்தலுக்கான ஆற்றல்.

*  அடைவூக்கத்தை அளவிடுதல் - TAT மெக்லிலேண்டு (1965)

*  அவாவு நிலை - ஒருவர் உள்ளத்தில் ஏற்பட்டிருக்கும் உண்மையான குறிக்கோள், இலக்கை அடைய முற்படும் ஆற்றல்.

*  போட்டி - குழந்தைகளிடையேயான போட்டி மனப்பான்மை வளர்ச்சிக்கு உதவுகிறது.

*  ஒத்துழைப்பு - வகுப்பறைக் கற்பித்தல் வெற்றிபெற ஒத்துழைப்பு மிகவும் அவசியம்.

*  தலைவர் - ஒரு குழுவின் மற்றவர் பின்பற்ற முன்மாதிரியாகத் திகழ்பவர்.

*  Motivation - Lalin word

*  ஊக்கம் - ஒரு இலக்கை அடைய தேவைப்படும் தூண்டுதல்

*  ஊக்கிகள் - ஊக்குவித்தல் நடைபெறத் தூண்டும் காரணிகள்.

*  ஊக்கிகளின் வகைகள் - உள்ளூக்கம், வெளியூக்கம்

*  தேவை மடிநிலைக் கோட்பாட்டின் எண்ணிக்கை - 7

*  அடைவூக்கம் - உயர் சாதனையை அடைய முற்படுதல்

*  அடைவூக்கம் கோட்பாடு - டேவிட் மெக்யிலேண்ட், அட்கின்சன்

*  கற்றல் - நேரடியான, மறைமுகமான அனுபவத்தின் மூலம் ஏற்படும் நடத்தை மாற்றம்.

*  ஆக்கநிலை நிறுத்தம் - பால்வோ (1849 -1936)

*  பால்வோ ஆய்வுக்கு பயன்படுத்திய விலங்கு - நாய்.

*  வலுவூட்டம் என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் - தாண்டைக்

*  முயன்று தவறிக் கற்றல் - தாண்டைக் (1814 - 1944)

*  முயன்று தவறிக் கற்றல் ஆய்வு - பசியுள்ள பூனை

*  கற்றல் விதிகளை கூறியவர் - தாண்டைக்

*  கற்றல் விதிகள் - 3 அவை: பயன் விதி, பயிற்சி விதி, ஆயத்த விதி

*  கருவி சார்ந்த ஆக்க நிலை நிறுத்தல் அல்லது செயல்படு ஆக்கநிலை நிறுத்தம் -ஸ்கின்னர்

*  ஸ்கின்னர் -ஆய்வின் மையப்பொருள் வலுவூட்டல்

*  வலுவூட்டலின் வகைகள் - நேர்மறையான வலுவூட்டிகள், எதிர்மறையான வலுவூட்டிகள்

*  வலுவூட்டம் - தண்டனை குறிப்பிட்ட நடத்தையை நிலை நிறுத்த அல்லது முன்னேற்றம் அடையச் செய்ய பயன்படும் நடத்தை.

*  நேர்முறையான வலுவூட்டிகள் - வெகுமதி

*  மனப்போராட்ட வகை - அணுகுதல் அணுகுதல் மனப் போராட்டம், விலகுதல் விலகுதல் மனப் போராட்டம், அணுகுதல் விலகுதல் மனப் போராட்டம்

*  மனமுறிவு காரணிகள் - உடல் சார்ந்த தடை,  சமூக பொருளாதார இடைஞ்சல், பயிற்சி குறைவு, பெற்றோர் ஆசிரியர் அதிகாரம், எதிர்பாராத நிகழ்வுகள்.

*  அமைதியின்மை - மனப்போராட்டம் மிகுந்து மனமுறிவு ஏற்படுவதே அமைதியின்மை.

*  பொருத்தப்பாடு இயற்கை சமூகம் இவற்றோடு இமைந்த வாழக் கற்றுக் கொள்ளுவது - இணக்கம்.

*  பொருத்தப்பாடின்மை - சூழ்நிலையோடு இயைந்து வாழ செயல்பட முடியாத நிலை.

*  தற்சார்பு நடத்தைகள் - மனக்கவலை உருவாகும் போது அதை தவிர்கும், தணிக்கும் நோக்கோடு தன்னையறியாமல் வெளிப்படும் நடத்தை.

*  ஒருவனது பண்புகளின் தனித்தன்மை வாய்ந்தது அமைப்பு ஆளுமை - கில்போர்டு.

*  தம் சூழ்நிலைக்கேற்ப ஏற்படுத்தும் பொருத்தப்பாட்டின் ஒருங்கிணைப்பு ஆளுமை - கெம்ப்.

*  தங்களுக்கு அளிக்கும் சூழலில் என்ன செய்வார்கள் என்பதை முன்கூட்டியே அறிதல் ஆளுமை - கேட்டல்

*  வகைப்பாட்டுக் கொள்கை - Hippocrates

*  சிடுமூஞ்சி - குறைந்த மனவெழுச்சி அதிக உடல் பலம்.

*  அழுமூஞ்சி - குறைந்த மனவெழுச்சி, குறைந்த உடல் நலம்.

*  தூங்கு மூஞ்சி - அதிக மனவெழுச்சி, குறைந்த உடல் பலம்.

*  சிடுமூஞ்சி - அதிக மனவெழுச்சி, அதிக உடல் பலம்

*  அகமுகன், புறமுகன் வகைப்படுத்தியவர் - யுங்

*  வகைப்பாடு மற்றும் உளப்பண்பு கோட்பாடு - ஐசன்ங்

*  ஐசன்ங் கொள்மையின்படி ஆளுமை - 4 வகைகள் அவை: அகமுகத்தன்மை, புறமுகத் தன்மை, நரம்புத்தன்மை நோய், கடுமையான சித்தக் கோளாறு

*  சிக்மண்ட பிராய்டு - இட், ஈகோ, சூப்பர், ஈகோ

*  லிபிடோ என்பது - பாலூக்கம் இச்சை நிலை

*  ஆக்கத்திறனின் புதுமைப் பயன் சோதனை - டாரன்ஸ் மின்ன சோட்ட சோதனை, மொழிச் சோதனை, படச் சோதனை

*  இந்திய ஆக்கத்திறன் சோதனை - பெக்கர் மேதி படைப்பாற்றல் சோதனை, பாசி படைப்பாற்றல் சோதனை.

*  நுண்ணறிவு செயல் சோதனைகள் வெஸ்லர் செயல் சோதனை - Alexandar's Battery of Performance Test, Bhatias Battery of Performance Test, Koh's Block Design Test, Reven's Progressive Matrices Test.

*  புறத்தேற்று முறைகள் - ரோசாக் மைத் தடச் சோதனை (1921), TAT -முகர்ரே மற்றும் மார்கன் (1935), கதை முடித்தல் சோதனை

*  ரோசாக் எந்த நாட்டவர் - சுவிட்சர்லாந்து

*  மைத்தச் சோதனை அட்டைகள் -10 அவை: 5 கருப்பு,வெள்ளை, 2 கருப்பு,சிகப்பு, 3 பல வண்ணம்.

*  கதை கூறும் சோதனை முறை - TAT

*  TAT சோதனை அட்டைகள் - 30 அவை: 10 ஆண், 10 பெண், 10 இருபாலர்.

*  ஒருங்கிணைந்த ஆளுமை - ஹர்லாக்

*  மனநலம் -ஆளுமையின் நிறைவான, இடைவான செயல்பாட்டைக் குறிப்பது - ஹேட்பீல்டு.

*  நடத்தை பிறழ்ச்சிகள் ஏதுமின்றி பிறரோடு இணைந்து போகும் தன்னிக்கம் மனநலம் - மார்கன் மற்றும் கிங்.

*  மனநலக் காரணிகள் - மரபு, உடல், வீடு, சமூகம், தேவைகளில் திருப்தி.

*  மனநலவியல் நல்ல மனநலத்துடன் வாழ்வதற்கு உதவுகின்ற அறிவியல் - மார்க்ரட் மீட்

*  மனமுறிவு - ஒரு இலக்கை அடைய முயற்சியில் ஏற்படும் தடை

*  மனப் போராட்டம் - ஒரு இலக்கை, தேவையை அடையும் முயற்சியில் ஏற்படும் தடுமாற்றம்.

 *  அறிவுரை பகர்தல் - தீவிர பிரச்சனைக்கு ஆட்பட்டவர்களுக்கு நேருக்கு நேர் கூறும் அறிவுரை.

*  அறிவுரை பகர்தல் வகைகள் - நேர்முக அறிவுரை பகர்தல் - வில்லியம் சன், மறைமுக அறிவுரை பகர்தல் - ஆர். ரோஜர்ஸ், சமரச அறிவுரை பகர்தல் முறை - F.C.தார்சன்.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment