ஆசிரியர் தகுதி தேர்வு சிறப்பு வினா விடைகள் பாகம் 5


உடல் வளர்ச்சி

*  உடல் வளர்ச்சி என்பது பல காலக்கட்டங்களை உள்ளடக்கியது.


*  உடல் வளர்ச்சி உயிரியல் நியதிக்கு உட்பட்டதாகும். பிறப்பு முதல் இரண்டு வயது வரை உடல் வளர்ச்சி விரைவாக நடைபெறுகிறது. அதன் பின்னர் உடல் வளர்ச்சி குமரப் பருவத்தை நோக்கி மெதுவாக நடைபெறுகிறது.

*  நரம்பு மண்டல வளர்ச்சி: பிறப்பிற்கு முன்னரும் பிறந்த பின்னர் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு மிக விரைவாக நடைபெறுகிறது. இதன் பின்னர் நரம்பு மண்டல வளர்ச்சி மெதுவாக நடைபெறுகிறது.

*  மூளை வளர்ச்சி பிறப்பு முதல் நான்கு வயதுவரை விரைவாகவும் அதன் பின்னர் எட்டு வயதுவரை மிதமாகவும், பின்னர் பதினாறு வயதுவரை மிதமாகவும் முன்னேற்றமடைந்து முழுமையடைகிறது.

*  பிறக்கும்பொழுது குழந்தையின் மூளையின் நிறை 35 கிராம் ஆக உள்ளது. பருவமடைந்த பின்னர் மூளையின் அளவு 1260 கிராம் முதல் 1400 கிராம் வரை உள்ளது.

*  பிறக்கும்பொழுது கால் மடங்காகவும், ஒன்பதாவது மாதம் அரை மடங்காகவும், இரண்டாவது வயதின் முடிவில் முக்கால் மடங்காகவும், நான்காவது வயதில் ஐந்தில் நான்கு மடங்காகவும், ஆறாவது வயதில் 90 விழுக்காடாகவும் மூளையின் வளர்ச்சி உள்ளது.

*  மூளையின் வளர்ச்சி உடலின் எடையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது, பிறக்கும்பொழுது அது 1/18 ஆகவும், பதினைந்தாவது வயதில் 1/30 ஆகவும், பருவமடையும் பொழுது 1/40 ஆகவும் உள்ளது.

*  குழந்தையின் உயரம் பிறக்கும்பொழுது சுமார் 52 சென்டிமீட்டராகவும், ஐந்தாவது வயதில் 106 செ.மீ ஆகவும், ஒன்பதாவது வயதில் 131 செ.மீ ஆகவும், 13 வயதில் 151 செ.மீ ஆகவும் உள்ளது. ஆரம்ப நிலையில் உயரவளர்ச்சி விரைவாகவும் பின்னர் மெதுவாகவும் உள்ளது.

*  பெண் குழந்தைகளின் உயர வளர்ச்சி: ஆண் குழந்தைகளைவிட சற்றுக் குறைவாக உள்ளது. குழந்தைகளின் உயர வளர்ச்சியில் தனியாள் வேறுபாடு அதிகமாகவுள்ளது. *  சில குழந்தைகள் உயரமாகவும் சில குழந்தைகள் குள்ளமாகவும் உள்ளனர். ஆறு அல்லது ஏழு வயதில் உயரமாக உள்ள குழந்தை 15 அல்லது 16 வயதில் உயரமாக உள்ளனர்.

*  பிள்ளைப் பருவமே கற்றலுக்கு ஏற்ற பருவம். உடல் வளர்ச்சி என்பது உடலின் பெருக்கத்தை மட்டுமே குறிப்பதல்ல. அதன் செயல்திறனையும் குறிக்கிறது.

*  உடல் உறுப்புகளின் வளர்ச்சியுடன் கூடவே புலனியக்க வளர்ச்சியும் நடைபெறுகிறது. குழவிப் பபுவத்திலே கேட்கும் திறன் முழு வளர்ச்சி நிலையை எட்டுகிறது.

உடற் பண்புகள்:

5 முதல் 8 வயது வரை

*  ஏறத்தாழ 100 செ.மீ உயரம்(வருட சாராசரி உயர வளர்ச்சி 5 செமீ முதல் 7.5 செமீ வரை).

*  செயல்பாடுகள் அனைத்தும் உடல் சார்ந்ததாக இருக்கும்.

*  கால்கள் விரைவாக வளர்ச்சி அடைகின்றன.

*  ஆண்களை விடப் பெண்கள் விரைவில் பருவமடைகின்றனர்.

*  தசைகளின் இயக்கம் விரைவாகவும் ஆற்றல் மிக்கதாகவும் இருக்கும்.

*  மூக்கு மற்றும் தொண்டைக் கோளாறுகள் அடிக்கடி ஏற்படுவதுண்டு.

*  உயரம் மற்றும் எடை வளர்ச்சி வீதம் 5 முதல் 11 வயது வரை மெதுவாகவும் நிதானமாகவும் நடைபெறுகிறது.

*  வயிறு புடைக்க உணவருந்த விரும்புகின்றனர்.

*  கருத்துக்கள் தெளிவற்றதாகவும், ஒழுங்கற்றதாகவும் இருக்கும்.

*  குளிப்பதற்கு மறுப்பர்.

*  செயல் வேகத்தில் படிப்படியான முன்னேற்றம காணப்படும். இது நிதானத்தையும் துல்லியத்தையும் நோக்கி வளரும்.

*  உடல் நலம் முன்னேற்றமடையும்.

9 முதல் 11 வயது வரை

*  இது முழுக்க முழுக்க செயல்திறன் மிக்க வயதாகும்.

*  பொதுவாகத் திடமாகவும் ஆரோக்கியமாகவும் உள்ள வயதாகும்.

*  தின் பண்டங்கள் மீது அதிக விருப்பம் காட்டுவர்.

*  ஆண்கள் வாலிப வயதின் பாதி எடையினைப் பெற்றவர்களாக இருப்பர்.

*  பெண்களின் உடல் திறன்கள் 11 வயது வரை மெதுவாகவும், திடமாகவும் முன்னேற்றமடையும். அதன் பின்னர் திறமைகள் நி்லைப்படும்.

*  ஆண்களைப் போல பெண்கள் உடல் வலிமைகளையும், ஆரோக்கியத்தையும் அடைய முடிவதில்லை.

*  உடல் வலிமை 11 வயது முதல் 13 வயது வரை பெண்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

*  போட்டி விளையாட்டுக்களில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

*  உடற் செயல்பாடுகளுக்குப் பின்னர் எளிதில் சோர்வடைகின்றனர்.

*  கைகளின் சிறு தசைகள் நல்ல வளர்ச்சியைப் பெறுகிறது.

*  வயது அதிகரிக்க அதிகரிக்க நிதானத்தின் வேகம் அதிகரிக்கிறது. அது துல்லியமாக முன்னேற்றமடைகிறது.

*  11 வயது வரை பெண்களின் உயரம் மற்றும் எடையின் வளர்ச்சி நேர்த்தியாக உள்ளது. ஆண்களின் வளரச்சி பெண்களை விட நன்றாகவும் உள்ளது.

உடல் தேவைகள்: 5 முதல் 8 வயது வரை

*  10 முதல் 12 மணி வரை நல்லுறக்கம், பற்களின் பாதுகாப்பிற்குத் தேவை. அடிக்கடி ஒய்வு, பொழுபோக்கு அம்சங்கள், ஒடியாடி விளையாடுதல் அவசியமாகிறது. உணவருந்தப் பழக்குதல், பொருள்களைக் கையாளக் கற்றுக் கொடுத்தல், விளையாட போதுமான இடம், ஆடைகளைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் போன்றவற்றைக் கற்றுத் தருவது மிக அவசியமாகிறது.

*  தட்டம்மை, பொன்னுக்குவீங்கி, கக்குவான், இளம் பிள்ளைவாதம், மூச்சுக் கோளாறுகள் போன்ற நோய்களிலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற உதவுது அவசியம்.

9 முதல் 11 வயது வரை

*  குழந்தைகளின் உடல் இயக்கங்களைச் செம்மைப்படுத்த ஆடல், பாடல் உடற்பயிற்சி, யோகா போன்றவற்றில் ஈடுபடச் செய்தல்.

*  சுயமாக உடல் சுத்தம் மற்றும் சுகாதாரப் பராமரிப்புக்களை மேற்கொள்ள உதவுதல்.

*  குழந்தைகள் தங்கள் உடல் இயக்கங்களை வளர்த்துக் கொள்ளவும், கட்டுப்படுத்தி செம்மைப்படுத்தவும் மற்றும் சிறப்பாக வெளியிடவும் அதிக வாய்ப்புக்களையும், வசதிகளையும் அளிக்க வேண்டும்.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment