ஆசிரியர் தகுதி தேர்வு சிறப்பு வினா விடைகள் பாகம் 6


வழிகாட்டுதல் (Guidance)

*  மாணவர்கள், தமது தற்போதைய சூழ்நிலைகளுக்கு உகந்த பொருத்தப்பாட்டை
வெற்றிடவும், தத்தம் ஆற்ரல், விருப்பார்வம், சமூகத் தேவைகளுக்கு ஏற்ப, வருங்கால வாழ்கையை அமைத்துக் கொள்ளவும் உதவிடுதலே வழிக்காட்டுதல் எனப்படும்.

வழிகாட்டுதலின் முக்கிய வகைகள்

*  வழிக்காட்டுதலின் பல வகைகள் இருந்தபோதிலும் மாணவர்களைப் பொறுத்தவரை கல்வியில் வழிகாட்டல், தொழில் தேர்வில் வழிகாட்டல், தனிநபர் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உதவும் வழிகாட்டல் ஆகிய மூன்றும் மிக முக்கியமானவை.

கல்வியில் வழிகாட்டல்

*  கல்வியில் வழிகாட்டுதல் என்பது மாணவர்கள் திறமையாகக் கற்கவும், படிப்புகளைத் தேர்ந்தெடுக்கவும், மேம்பட்ட கல்வி அறிவை எட்டுவதில் எதிர்படும் இடர்பாடுகளை அகற்றவும், உதவி செய்தல் ஆகும்.

*  தமது உளப்பண்புகளுக்கும், திறன்களுக்கும் ஏற்ற வகையில், மாணவர்கள் தங்களுக்குக் கல்வியில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு முன்னேற்றமடைய கல்வி வழிகாட்டல் துணைபுரிகிறது.

*  புதிய படிப்புகளையும், அதற்குத் தேவையான தகுதிகளையும் முன்னதாகவே அறிந்து கொள்ளச் செய்து, மாணவர்களை அதற்குத் தகுந்தவாறு திட்டமிடச் செய்தலிலும், கல்வி வழிகாட்டல் பயன்படும்.

தொழில் தேர்வில் வழி காட்டுதல்

*  மாணவர்களைப் பற்றிய முழுவிவரங்களையும் சேகரித்தும், வெவ்வேறு பணிகள்(தொழில்கள்) பற்றிய தகவல்களைப் பெற்றும், அப்பணியில் வெற்றியுடன் செயல்படத் தேவையான உளவியில் பண்புகள், அப்பணிகளில் கிட்டும் மனநிறைவுத் தன்மை, வெவ்வேறு பணிகளை பெறக்கூடிய வாய்ப்புகள், அப்பணிகளைப் பெறுவதற்கான கல்வித்தகுதிகள், பயிற்சிகள், பணியில் முன்னேறக் கூடிய வாய்ப்புகள் முதலியவற்றைப் பற்றியும் தகவல்களைப் பெற்று அவற்றை மாணவர்களுக்கு உதவும் நேரத்தில் வழங்குவதே தொழில் தேர்வில் வழிகாட்டுதலாகும்.

*  தொழில் வழிக்காட்டுதலில், நாட்டச் சோதனைகள் பெரும் பங்கு வகிக்கின்றன.

*  மாணக்கரது தனிப்பட்ட வாழ்வில் எதிர்படும் பிரச்சனைகளையும், சிக்கல்களையும் தீர்ப்பதில் வழிகாட்டுதல்

*  இன்றைய சிக்கல் மிகுந்த வாழ்க்கலையில் எழக்கூடிய பிரச்சனைகளை எதிர்த்து வெற்றி கொள்ள குமரப் பருவத்தோர்க்கு உதவி தேவைப்படுகிறது. மாணக்கர்களுது குடும்ப சூழ்நிலை சிலருக்கு சரியாக அமையாதிருத்தல் அவர்களது வாழஅக்கையில் பல பிரச்சனைகளும், மனப்போராட்டங்களும் எழுந்து அவர்களிடையே வருத்தப் பாடின்மையைத் தோற்றுவிக்கக் கூடும். இந்நிலை எழாமல் தடுப்பதற்கு வழிகாட்டலும், அறிவுரை பகர்தலும் தேவைப்படும்.

*  மாணாக்கர்கள் மனவெழுச்சி சமநிலையும் நனநிலையும் எய்த வாழ்க்கைக்கான வழிகாட்டல் உதவுகிறது. இவ்வகை வழிகாட்டலின் அடிப்படையாக மனநலவியல் அமைகிறது.

*  இவ்வகை வழிகாட்டல் முக்கியமானதும், கடிமானதும் ஆகும். இதில் ஆசிரியரது சிறப்பான பண்புகளும், அவர் மாணாக்கர்கள் பால் காட்டும் அன்பும், பரிவும் முக்கிய பங்கினைப் பெறுவனவாம்.

அறிவுரை பகர்தல் முறைகள்: Counselling Techniques

அறிவுரை பகர்தலில் பின்பற்றப்படும் முக்கிய மூன்று வழிமுறைகளாவன,

1. நேரடி அறிவுரை பகர்தல் அல்லது நெறி சார்ந்த முறை

2. மறைமுக அறிவுரை பகர்தல் அல்லது நெறிசாரா முறை

3. சமரசமுறை அல்லது பொது இணைப்பு முறை

நேரடி(நெறி சார்ந்த) அறிவுரை பகர்தல்:

*  இம்முறையில் அறிவுரை அளிப்பவருக்கே பெரும் பங்குண்டு. இவரையே இம்முறை மையமாகக் கொண்டது.

*  அறிவுரை பகர்பவர், தான் கண்டறிந்ததை விளக்கி அறிவுரை பெறுபவர் செயல்பட் வேண்டிய வழிமுறைகளைப் பரிந்துரைக்கிறார்.

இம்முறையின் படிகளாவன:

*  பகுப்பாய்வு (சேகரித்த விவரங்களை ஆராய்தறிதல்)

*  தொகுப்பாய்வு(கண்டறிந்தவற்றைத் தொகுத்து, ஒட்டு மொத்தக் கருத்தை உருவாக்குதல்)

*  நோயறிதல் (பிரச்சனையைப் பற்றியும் அதற்குரிய காரணம் பற்றியும் அறிதல்)

*  வருவதுரைத்தல் (எதிர்காலத்தில் இப்பிரச்சனைக்கான காரணம் பற்றியும் அறிதல்)

*  அறிவுரை பகர்தல் (மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளைக் கூறி நெறிப்படுத்துதல்)

*  பின்தொடர் செயல்பணி (நெறிப்படுத்திய பின் ஏற்பட்ட நடத்தையின் தன்மையை மதிப்பீடு செய்தல்)

நேரடி அறிவுரை பகர்தல் முறையின் குறைகள்:

*  இம்முறை சர்வாதிகாரமுறை மாதிரி அறிவுரை அளிப்பவர், அறிவுரை பெறுபவர் செய்ய வேண்டியவை யாவை என்று கட்டளையிடுகிறார். அதன்படி செயல்படுவதைத் தவிர அற்வுரை பெறுபவருக்கு வேறுவழியில்லை.

*  அறிவுரை பெறுபவர் என்றும் அறிவுரை பகர்பவரை சார்ந்தேயிருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. தன்னிச்சையாக செயல்பட முடியாது.

*  வழிகாட்டுதலின் அடிப்படைத் தத்துவத்தின்படி, அறிவுரை பெறுபவர் தன்னைத்தானே உணர்ந்து தன்னிச்சையாக முடிவெடுக்க உதவ வேண்டும். ஆனால் இம்முறை அவ்வாறு இயங்குவதில்லை.

*  இங்கு அறிவுரை பெறுபவரிடம் புதிய கற்றல் ஏதும் ஏற்பட்டு, வளர்ச்சிக் கூறுகள் தோன்றிட வாய்ப்பில்லை.

*  இம்முறை இளஞ்சிறார்களுக்கும், தீவிர நடத்தை கோளாறு ஏற்பட்டுள்ளவர்களுக்கும் மட்டுமே அதிகம் பயன்படும்.

மறைமுக (நெறிசாரா) அறிவுரை பகர்தல்:

*  கார்ல் ரோஜாஸ் என்பவர் இம்முறையை பிரபலப்படுத்தினார்.

*  இம்முறையில் அறிவுரை அளிப்பவர் அதிகம் செயல்படுவதில்லை. அறிவுரை பெறுபவரை மையமாகக் கொண்டு இயங்கும் இம்முறையில் அறிவுரை பெறுபவரே, உட்காட்சி வழியே தன்னுடைய பிரச்சனைக்கான தீர்வை அடைகிறார்.

*  அறிவுரை அளிப்பவர் பிரச்சனைக்குரிய தீர்வைக் கூறுவதில்லை, அறிவுரை பெறுபவர் தானே தீர்வைக் காணக் கூடிய வகையில், உகந்த சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்து இலக்கை எட்டுவதில் துணைபுரிகிறார்.

*  அறிவுரை பெறுபவர் தன்னுடைய எண்ணங்களையும் உணர்வுகளையும் ஒளிவுமறைவின்றி வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து, தனது நிறை - குறைகளை அறியச் செய்து, மனமுதிர்ச்சி பெறச் செய்தல் மூலம் மேம்பட்ட வளர்ச்சியை அடையச் செய்தலே அறிவுரை அளிப்பவரின் செயல்பாடு ஆகும்.

*  அறிவுரை பெறுதல் என்ற நிகழ்வுக்கு உட்பட்ட பின்னர் அறிவுரை பெற்றவரின் நடத்தை மேம்படுத்துவதுடன் ஆளுமை வளர்ச்சியில் இசைவுத்தன்மை அதிகரிக்கிறது.

*  அதனால் தான் நெறிசாரா அறிவுரை பகர்தலை வளர்ச்சிசார் செயல் என்று வர்ணிக்கிறார்.

மறைமுக அறிவுரை பகர்தல் முறையின் குறைபாடுகள்:

*  அறிவுரை அளிப்பவர் அதிகம் செயல்பட விரும்பாத மனப்பான்மை அறிவுரை பெறுபவரிடம் எரிச்சலை உண்டாக்குகிறது. எனவே அவர் தன்னுடைய உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்த விருப்பமில்லாமலிருப்பார்.

*  இம்முறை, தீவிர நடத்தைக் கோளாறு உள்ளவர்களுக்கும், இளஞ்சிறார்களுக்கும் நுண்ணறிவு குறைபாடு உள்ளவர்களுக்கும் ஏற்றது அல்ல.

அறிவுரை பகர்தலில் சமரச முறை:

*  எப்.சி. தார்ன் என்பவர் இம்முறையில் தேர்ச்சி பெற்று, பிரபலப்படுத்தியவர்.

*  இம்முறையில் அறிவுரை பகர்பவர், தன்னை நாடி வருபவரின் தன்மை, அவரது கோளாறின் தன்மை ஆகிவற்றிற்கேற்ப தான் செயல்பட வேண்டிய அணுகுமுறையைத் தேர்ந்தெடுக்கிறார்.

*  பெீதுவாக தன்னை நாடி வருபவரின் பிரச்சனைக்கான காரணத்தை ஆராய்ந்தறியும் நிலைவரை நெறிப்படுத்தப்பட்ட அறிவுரை பகர்தல் முறையை கையாள்கிறார். பின்பு பிரச்சனைக்குரியத் தீர்வைத் தேர்ந்தெடுக்கும், பொறுப்பை, நெறிசாரா அறிவுரை பகர்தல் முறைப்படி ,அறிவுரை பெறுபவரிடமே விட்டுவிடுகிறார்.

*  அதாவது பிரச்சனைக்குரிய பல்வகை தீர்வுகளின் சாதக - பாதகங்களை மட்டும் தெளிவுபடுத்தி விட்டு, அறிவுரை பெறுபவரையே தனக்குகந்த தீர்வை தேர்ந்தெடுக்க விட்டுவிடுகிறார்.

*  எனவே சமரச முறையில் தேவைக்குக் தகுந்தவாறு அணுகுமுறை மாற்றிக் கொள்ளப்படுவதால், ஒருவித நெகிழ்வுத் தன்மை காணப்படுகிறது.

*  இன்றைய கல்விச் சூழலில், வழிகாட்டுபவர்களில் பெரும்பாலோர், இம்முறையையே மேற்கொள்கின்றனர்.

குழு அறிவுரை முறை Group Techniques

*  நான்கு முதல் ஆறு பேர் வரையுள்ள சிறு குழுவினர் தங்களது பொதுப் பிரச்சனைகளைப் பற்றி விவாதித்து ஆற்றுப்படுத்திக் கொள்ளும் செயல்பாடுகள் "குழுவாக அறிவுரை பெறுதல்" அல்லது "குழு ஆற்றுப்படுத்துதல் என்றறியப்படுகிறது.

*  இக்குழுவில் ஒரு பயிற்சி பெற்ற வல்லுநர் இடம் பெறுவார். இத்தகைய குழுவின் ஆற்றுப்படுத்தும் அமர்வுகள் 4 முதல் 6 வரை இருக்கும்.

*  பிரச்சனையைப் பற்றிய மாற்றுப் பார்வைகளையும், தீர்வுகளையும், தனிநபர் அறிவுரை பகர்தலில் சக பங்கேற்பாளர்கள் பங்கு அளிக்கின்றனர்.

*  உளவியல் ஆய்வுகள், ஒத்தத் தன்மையுடையோரது கருத்துக்கள் ஏனையோரதைவிட அதிக செல்வாக்கு பெற்றவை என்பதை நிரூபித்துள்ளன.

*  அறிவுரையை நாடிச் செல்வோருக்கு, குழுவாகக் கூடி விவாதிக்கும்போது சுயபங்கேற்றல் மூலம் பிரச்சனையையும் அதற்கான தீர்வையும் புரிந்து கொள்ளும் உணர்வு ஏற்படுகிறது.

*  இந்தப் புரிந்துணர்வு தான் ஆற்றுப்படுத்தலுக்கான அடிப்படை ஆகும்.

*  பங்கேற்றோர் ஒவ்வொருவரும், பிறரது கருத்துக்களையும் , தீர்வுகளையும் ஏற்றுக் கொள்ள முடியாத போதும், அழற்றைப் புரிந்து கொள்ளவும், மதிக்கவும் முயற்சி செய்கின்றனர்.

*  இம்முயற்சி அவர்களது பார்வையை, கண்ணோட்டத்தை விரிவு படுத்துவதால், ஆளுமை வளர்ச்சி மேம்பாடு அடைகிறது.

*  குழு ஆற்றப்படுத்துதலில் அறிவுரை பகர்பவரின் ஆதிக்கம் ஏதுமில்லை. அவர் ஏற்கனவே ஒவ்வொரு பங்கேற்பாளரையும் நன்கு புரகிந்து வைத்திருப்பதால், குழு விவாதங்களில் பங்கேற்பாளர்கள் அனைவரும் துடிப்புடன் பங்கு பெறுகின்றனர்.

குழு அறிவுரை முறையின் குறைபாடுகள்:

*  குழு ஆற்றுப்படுத்துதலில், தனிநபர் அறிவுரை முறையைப் போல் இந்நோக்கு குவிவடைவதில்லை.

*  தமது அந்தரங்கப் பிரச்சனைகளை குழுமுன்பு தெரிவிக்க எவருமே தயக்கம் காட்டுவர். அழற்றின் இரகசியத் தன்மை காக்கப்படும் என்ற உத்தரவாதமும் குழு அறிவுரை முறையில் இல்லை.

*  சில அமர்வுகளில், அறிவுரை பகர்வருடன் மனநெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட பின்னரே பிரச்சனையின் முழுப்பரிமாணமும் வெளிப்படும். இத்தகைய மனநெருக்கம் குழு அறிவுரை முறையில் கிடைப்பதில்லை.

*  அறிவுரை பகர்பவரின் நிபுணர்த்துவமும், தனிக்கவனமும் குழு ஆற்றுப்படுத்தலில் அறிவுரை நாடுபவருக்கு முழுமையாகக் கிடைப்பதில்லை.

கல்வி நிலையங்களில் அறிவுரை தேவைப்படும் மாணவர்கள் Guidance for the Children with Learning Difficulties

*  வழி காட்டுதல் என்பது அனைவருக்குமே வளர்ச்சிப் பருவங்களில் ஏதோ ஒரு நிலையில் தேவைப்படுகிறது.

*  தீவிர மனவெழுச்சி மற்றும் நடத்தைப் பிரச்சனை உடையோருக்கு ்றிவுரை பகர்தல் மட்டுமே பயன் விளைவிக்கும்

நடத்தை பிரச்சனையுடையோர்

தொடர்ந்து வகுப்புக்குச் செல்லாமை, பிற குழந்தைகளை அடித்துத் துன்புறுத்தல், திருடுதல், பொய் சொல்லுதலை வழக்கமாகக் கொண்டிருத்தல், பிறர் உடைமைகளுக்கு சேதம் விளைவித்தல், எதிர்பால் இனத்தவரிடம் ஒழுக்கமின்றி நடந்து கொள்ளுதல், ஆசிரியர்கள் அளித்திடும் வீட்டு வேலைகளை செய்யாமலிருத்தல், பள்ளிக்கு தினமும் காலம் தாழ்ந்து வருதல், எப்போதும் உடல்நலம் குன்றியவர் போல் பாவனை செய்தல் போன்ற ஒழுங்கு நடத்தைகளில் பிரச்சனையுடையோரையும், பிற மாணவர்களுடன் கூடிப்பழகாமல் அதிகம் கூச்சமும் நாணமும் கொண்டு எப்போதும் தனித்திருத்தல், கூச்சலிட்டு அழுது ஆர்பாட்டம் செய்து கடும் சினத்தை வெளிப்படுத்துதல் போன்ற ஆளுமைசார் பிரச்சனை நடத்தையுடைய மாணவர்களையும் கண்டறிந்து பயிற்சி பெற்ற மனநல வல்லுநரின் அறிவுரை பகர்தலுக்கு உட்படுத்த வேண்டும். திறமையான வகுப்பாசிரியர் இத்தகைய மாணவர்களை தொடர் உற்றுநோக்கல் மூலம் இனம் காணுதல் எளிதான காரியமே ஆகும்.

கல்விப் பிரச்சனையுடையோர்:

மெதுவாகக் கற்போர் அல்லது கல்வியில் மிகவும் பின்தங்கியோர் திறமைக்கேற்ற சாதனை அடையாத குழந்தைகள் முத்திறன் பெற்ற குழந்தைகள் கற்ரல் குறைபாடுகள் உள்ள குழந்தைகள் ஆகியோர் வெவ்வேறு விதமான கல்விப் பிரச்சனைகளைக் கொண்டிருப்பர், இத்தகைய மாணவர்களையும் கண்டறிந்து அறிவுரை பகர்தல், வெற்றி பெற்றிட வழிவகை செய்தல் அவசியம். மேலும் அவர்களை அடையாளம் கண்டு அவ்வப்போது அறிவுரைகள் அளித்து, பிரத்தியேகமான கல்விச் செயல்பாடுகளை நடைமுறைப்படுத்திடுவதை பற்றி இனி பார்ப்போம்.

கல்வியில் பின்தங்கியோர் (Under Achievers)

*  முன்பு கல்வியில் ரபின்தங்கியோர் என்று அழைக்கப்பட்டோர் தற்போது மெதுவாக கற்போர் என்று பெயரிட்டுள்ளனர்.

*  இவர்களது நுண்ணறிவுக் கெழு பொதுவாக 70 முதல் 80 வரை இருக்கும்.

*  பள்ளிப் பாடங்களில் சாதாரண நிலையினின்றும் இரண்டு ஆண்டுகள் பின்தங்கிய நிலையிலிருக்கும் மாணவர்களை கல்வியில் பிற்பட்டவர்கள் எனலாம் என்று ஸிரில் பர்ட் என்ற உளவியல் அறிஞர் கூறுகிறார். இவர்களிது கல்வி ஈவு 85க்கும் குறைவாக இருக்கும்.

கல்வியில் பின் தங்குவதற்கான காரணங்கள்:

*  கல்வியில் மாணவர்கள் பின்தங்குவதற்கான காரணங்கள் மரபு, நிலையைச் சார்ந்தவையாகவோ, சூழ்நிலைத் தாக்கங்களின் விளைவாக ஏற்பட்டவையாகவோ இருக்கலாம்..

*  மரபு நிலைக் காரணிகளால் ஏற்படும் தாக்கம் தீவிரமானதாகவும் முழுமையாக சீரமைக்க முடியாததாகவும் அமையும்.

*  ஆனால் சூழ்நிலைக் காரணிகளால் ஏற்படும் தாக்கங்கள், அளவிடும், சீர் பெறக்கூடிய தன்மையிலும் மாறுபட்டுக் காணப்படுகின்றன.

கல்வியில் பின்தங்கியோரை அடையாளம் காணுதல்

*  தனியாள் நுண்ணறிவு சோதனைகள் மூலம் நுண்ணறிவு ஈவு கண்டறிந்தும் 70 முதல் 80 வரை உள்ள மெதுவாகக் கற்போரை அடையாளம் காணலாம்.

*  பிற்பட்ட குழந்தைகளின் நிலைக்குக் காரணங்களைக் கண்டுபிடித்து உதவ பள்ளிகலில் வழிகாட்டும் விடுதிகள் நிறுவப்பட வேண்டும்.

பள்ளிகளில் கல்வியல் பின்தங்கியோருக்கு உதவுதல்:

*  மெதுவாகக் கற்போருக்கான தனிப்பட்ட வகுப்புகள் நடத்துவதுதான் சிறந்த முறையாகும்.

*  இம்மாணவர்களுக்கு கற்பித்தலில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

*  ஒவ்வொரு கருத்தை போதித்த பின்பும் அதை நிலைநிறுத்த அதிக அளவு பயிற்சி கொடுக்கப்பட வேண்டும்.

*  வகுப்பறை கற்பித்தலில் பருப்பொருள் நிலைக் கற்பித்தலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து விளக்கப்படங்கள், மாதிரிகள் செய்து காட்டல், காட்சி கேள்வி சாதனங்களை பயன்படுத்துதல் போன்றவற்றை அதிக அளவில் ஈடுபடுத்த வேண்டும்.

திறமைக்கேற்ற சாதனை அடைவு இல்லாத குழந்தைகள்:

*  இத்தகையோர் உயர் அறிதிறனை பெற்றிருந்தாலும் குறைந்த கல்வித் தேர்ச்சி பெற்றுத் திகழ்தலை திறமைக்கேற்ற சாதனை அடைவு இல்லாதிருத்தல் என்றழைக்கிறோம்.

*  நுண்ணறிவுக் கெழு 130க்கும் மேல் பெற்றுள்ள மீத்திறன் மிக்கோர் கல்வி இடைத் தேர்வுகளில் 40 - 45 விழுக்காடு மதிப்பெண்களேப் பெறுவதும், 90 முதல் 110 வரை *  நுண்ணறிவு ஈவு உடையோர் பள்ளித் தேர்வுகளில் தோல்வியுறுவதும் திறமைக்கேற்ற சாதனை அடைவைப் பெறாமையே ஆகும்.

*  அறிவுக்கேற்ற சாதனையின்மைக்கு மரபுநிலையோ, அதனின்றும் எழும் நுண்ணறிவுக் குறைவோ காரணமன்று.

*  இத்தையோரது குறைந்த சாதனைக்கு சூழ்நிலைக் காரணிகளும், ஊக்கக் குறைவும் தான் அடிப்படையாக அமைகின்றன.

திறமைக்கேற்ற சாதனை அடைவைப் பெறாத மாணவர்களைக் கண்டறிதல்

*  பள்ளிகளில் நிர்வகிக்கப்படும் மாணவர் திரள் பதிவேடுகளை ஆராயும் போது, சென்ற ஆண்டு வரை பள்ளித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று வந்துள்ள மாணவர்களில் சிலர் இவ்வாண்டு தொடர்ந்து மிகக்குறைவான மதிப்பெண்களைப் பெறுவது தெரிய வந்தால், அத்தகையோருக்கு (இவர்கள் குறைசாதனையுடையோர்) ஆசிரியர் தனிக்கவனம் செலுத்துவதோடு அறிவுரை பெறுதலுக்கும் பரிந்துரைக்க வேண்டும்.

திறமைக்கேற்ற சாதனை அடைவு இல்லாதோருக்கும் உதவுதல்

*  வகுப்பாசிரியர் இத்தகைய மாணவர்களிடம் தனிக்கவனம் செலுத்தி, அவர்களுக்கு தனிப்பட்ட பிரச்சனைகள் எதுமிருப்பின் அவற்றைக் களைய உதவ வேண்டும்.

*  அவ்வப்போது பெற்றோர் - ஆசிரியர் கூட்டங்கள் நடத்தி இத்தகைய மாணவர்களது பெற்றோரிடம் கலந்துரையாடி அவர்களது ஒத்துழைப்போடு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.

கற்கும் திறமை குறைவான குழந்தைகள்:

*  இக்குழந்தைகள் பொதுவாக சாதாரணமான குழந்தைகளைப் போலவே தோற்றமளிப்பர்.

*  ஆனால், அவர்கள் வாசித்தல், எழுதுதல், கணக்குப் போடுதல் போன்ற கற்றல் திறன்களில் குறைபாடு கொண்டு காணப்படுவர்.

*  வழக்கமான வகுப்பறைக் கற்பித்தலால் இக்குழந்தைகளிடம் கல்வி வளர்ச்சி ஏறத்தாழ 15 சதவீதம் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

*  கற்கும் திறமை குறைவான குழந்தைகள் உடல் ஊனம் அடைந்தவர்கள் அல்ல: மனவளர்ச்சிக் குன்றியோரும் அல்ல.

*  ஆனால், இவர்களிடம் உடலியக்கக் குறைபாடு காணப்படும். கை, கால்கள் உதறிக் கொண்டே இருக்கும்

*  இவர்களால் ஆசிரியர் கற்பிப்பதில் கவனம் செலுத்தவும் முடியாது. இவர்கள் பொதுவாக மருத்துவ முறைகளாலும், நடத்தைத் திருத்தல் முறைகளாலும், சிறப்புப் பயிற்சிகளாலும் குணப்படுத்தி சீர்படுத்தப்படுகின்றன. 

மீத்திறக் குழந்தைகள் Gifted Children

*  மூன்று முதல் 5 சதவீதக் குழந்தைகள் நுண்ணறிவு ஈவில் 130க்கும் மேற்பட்ட, அறிவுத் திறமையில் உயர்ந்து காணப்படுவர்.

*  இவர்கள் மீத்திறக் குழந்தைகள் எனப்படுவர்.

மீத்திறக் குழந்தைகளை இரு வகைகளாகப் பிரிக்கலாம்: அவை

1.பொது ஆற்றல் மிக்க குழந்தைகள்

2. இசைக்கலை போன்ற குறிப்பிட்ட துறைகளில் மீத்திறன் பெற்ற குழந்தைகள் என்பனவையாகும்.

*  பொது ஆற்றல் மிக்க குழந்தைகளிடம் நுண்ணறிவின் பொதுக் காரணியான "G" யின் மிகுதி, கற்றலில் அவா மிகுதி, புதுப் போக்குடைமை, விடா முயற்சி, பகுத்தறியும் திறன், முன்னேற்றத்தினை அடைய விழையும் மனப்பான்மை, நகைச்சுவையுணர்ச்சி, தர்க்க முறையில் சிந்திக்கும் சக்தி முதிலியன வெகு அதிகமாகக் காணப்படும்.

*  குறிப்பிட்ட திறன் மிக்க குழந்தைகள் இசை, ஒவியக்களை போன்ற குறிப்பிட்ட துறைகளில் பற்றிய மிகுதியும், ஆற்றல் அதிகமும் கொண்டு இருப்பர். 

மீத்திற குழந்தைகளை அடையாளம் காணுதல்:

*  தனியாள் நுண்ணறிவுச் சோதனைகள் நடத்தி நுண்ணறிவு ஈவு 130 க்கும் மேற்பட்டவர்களை மீத்திறமுள்ளவர்களாக கொள்ளலாம்.

*  மீத்திற மாணவகர்களின் கவர்ச்சிகள் பிற சம வயது மாணவர்களைக் காட்டிலும் மேம்பட்டவையாயிருக்கும், எனவே கவர்ச்சி வினாவரிசைகளைப் பயன்படுத்தி இதை கண்டறியலாம்.

*  உடல் வளர்ச்சி, சமூக முதிர்ச்சி பற்றிய விவரங்களும் இத்தகைய மாணவர்களை கண்டுபிடிக்கப் பயன்படும்.

*  பள்ளித் தேர்வுகளிலும், கல்வி அடைவுச் சோதனைகளிலும் இத்தகைய மாணவர் முன்னணியில் நிற்பர்.

*  வகுப்பிற்குள்ளும், வெளியேயும் மாணவர்கள் நடத்தையை உற்று நோக்கும் ஆசிரியருக்கு திறமை மிக்கவர்களை கண்டுபிடிக்கும் பல வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

மீத்திற குழந்தைகளின் பிரச்சனைகள்:

*  மீத்திறன் மிக்கக் குழந்தைகளுக்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் உரிய பாராட்டுதலை தெரிவிக்கத் தவரும்போது, அவர்களது கவனத்தைத் தம்பால் ஈர்க்க இத்தகைய குழந்தைகள் குறும்புத் தனங்களில் ஈடுபடக்கூடும்.

*  தாம் விரும்பிப் பயிலும் பாடங்களில் தம் திறமைக்கேற்ப முன்னேறிச் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்காதபோது கற்பதில் ஆர்வம் இழப்பர்.

*  தகுந்த வாய்ப்புகள் கிடைக்காதபோது பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளாகி தாழ்வு மனப்பான்மை கொள்ளத் தொடங்குவர்.

*  அளவுக்கதிகமாக பெற்றோரிடமிருந்தும் ஆசிரியர்களிடமிருந்தும் பாராட்டுதல்களைப் பெறும் மீத்திறக் குழந்தைகள் தற்பெருமையடித்துக் கொள்ளக்கூடும்.

மீத்திற குழந்தைகளுக்குரிய கல்வி முறைகள்:

*  ஆற்றல் வழி வகைப்படுத்துதல் முறைப்படி, மீத்திறக் குழந்தைகளுக்கென்றே பள்ளியில் ஒரு தனிப்பிரிவு ஏற்படுத்தி கல்வி போதித்தல் நலம்.

*  மீத்திறக் குழந்தைகளைத் தனிமைப்படுத்தும் போது கல்வியொழிந்த மற்ற பள்ளி நடவடிக்கைகளில் பிற மாணவர்களுடன், தாராளமாக அவர்கள் பழக வாய்ப்பளித்தல் அவசியம்.

*  மீத்திறக் குழந்தைகளை ஆண்டு இறுதியில் அடுத்த வகுப்புக்கு மாற்றாமல் அதற்கு அடுத்த உயர்வகுப்புகளுக்கு மாற்றும் துரிதப் பிரிவு மாற்றல் முறையை மேற்கொள்ளலாம்.

*  ஒவ்வொர் ஆண்டும் இப்படி வகுப்பு மாற்றண் அளித்தால் மீத்திற மாணவர்கள் சிறுவயதிலேயே பள்ளியை விட்டு, பரந்த உலகில் அடி எடுத்து வைக்க நேரிடும் .இதனால் சமூக முதிர்ச்சி பெறாமலேயே போகக் கூடிய அபாயம் உள்ளது.

*  பாடத்திட்டத்தை அதிகரிக்கும் முறை சிறந்ததாகக் கருதப்படுகிறது. இதில் ஒரு வகுப்பில் படிக்கும் மீத்திற குழந்தைகளுக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் அவர்களது ஆற்றலுக்கு தகுந்த அதிகப்படியான வேலை கொடுக்கப்படுகிறது. அவ்வேலையை முடிக்கக் கொடுக்கப்படும் கால அளவும் குறைக்கப்படுகிறது.

*  குறிப்பிட்ட சிறப்பு ஆற்றலின் மீத்திறம் பெற்ற மாணவர்களுக்கு அவ்வாற்றலைப் பொறுத்தவரை மேல்வகுப்பு மாணவர்களுடன் சேர்த்துக் கற்பிப்பது சிறந்த முறையாகும்.

*  இன்று நம்நாட்டில் பயன்படுத்தப்படும் ஆற்றல் மிக்க மாணவர்களை கண்டறியும் தேர்வுகள் மீத்திறம் பெற்றோரைக் கண்டறியவும் இவர்களுக்கான சிறந்த வாய்ப்புகளை அளிக்கவும் உதவுகின்றன. நவோதயாப் பள்ளிகள் வசதி குறைந்த ஆனால் திறன் மிகுந்த குழந்தைகளுது தரமான கல்விக்கு வழி செய்வதாக உள்ளது.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment