ஆசிரியர் தகுதி தேர்வு சிறப்பு வினா விடைகள் பாகம் 6


கவனம்:

*  கவனம் என்பது ஒரு தனிப்பட்ட மன வன்மை ஆகும். மேலும் இது கவனிப்போரின் உள்ளத்தின்
செயல், ஒரு வகை அனுபவம் என்றும் கூறலாம்.

*  ஒரு பொருளையோ, செயலையோ தெளிவாக அறியச் செய்யப்படும் முயற்சியே கவனித்தல் என்று மக்டூகல் வரையறை செய்கிறார்.

*  அறிதல் செயல்பாட்டில் கவனித்தல் என்பது முதல் படிநிலையாகும். இது ஒரு அறிவு சார்ந்த செயல் மட்டுமல்ல, மனவெழுச்சி, முயற்சி போன்ற பல கூறுகளை உள்ளடக்கியுள்ளது.

*  தலையைத்திருப்புதல், பார்வையைக் குவித்தல், செவிமடுத்தல் போன்ற உடல் இயக்கங்களும் கவனித்தல் இடம் பெறுகின்றன. புலன்காட்சி, உற்று நோக்கல் போன்ற செயல்களுக்கும் கவனமே அடிப்படையாக அமைகிறது.

*  தொடர்பற்ற ஒலிகளை விட தொடர்புள்ள ஒலிகளைக் கொண்ட ஒர் இசை நம் கவனத்தை எளிதில் கவருகிறது. முழுமையான ஒவியங்கள், வண்ணம் தீட்டப்பட்ட ஒவியங்கள் மாணவர்கள் கவனத்தை கவரும்.

*  ஹெப் என்பவர் கவனித்தலை பெருமூளையின் செயலாகக் கருதுகிறார்.

*  கவனித்தலின் உளவியல் அடிப்படை பற்றிய கோட்பாடுகளில் 1. தேர்வு செய்தல் கோட்பாடு 2. ஹெப் கோட்பாடு, 3. பிராட்பெண் கோட்பாடு ஆகியவை குரிப்பிடத்தக்கவை.

*  ஒரே பார்வையில் மிகக் குறுகிய நேரத்தில், எத்தனைப் பொருட்களை அல்லது தூண்டல்களை ஒருவன் உணர்ந்து அறிகிறான் என்பதே அவனது கவன வீச்சு(Span of Attention) வரையறுக்கப்படுகிறது.

நினைவு:

*  நம் புலன்கள் கற்று அஅனுபவித்த விவரங்களை மனதில் இருத்திக் கொண்டு நமக்குத் தேவைப்படும்போது எடுத்துத்தருகிறது.

*  மனதில் சேமித்து வைத்துளஅள விவரங்களை நினைவு என்று கூறுகிறோம். பொருளுணர்ந்து கற்றல் நீண்ட நினைவில் நிற்கும்.

*  மெதுவாக நிதானமாக அவசரமின்றிக் கற்பது நினைவாற்றலைப் பெருக்கும் மற்றும் நேரத்தைச் சிக்கனப்படுத்தும்.

*  பல புலன் வழிக் கற்ரல் மூலமாகக் கற்பவை மனதில் வெகுநாட்கள் வரை நிலைத்து நிற்கும்.

*  சுதந்திரமாகத் தானே கற்றல், கற்றவற்றை நினைவில் இருத்திக் கொள்ள சிறந்த வழியாகும்.

*  பொதுவாக நம் புலன்களில் ஏற்படும் தூண்டல்கள் அனைத்தும் முதலில் குறுங்கால நினைவுப் பகுதிக்குச் செல்கிறது. இவற்றின் நிலைப்புத் தன்மை சில நாட்களோ அல்லது சில வாரங்களேயாகும்.

*  குறுங்கால நினைவுப் பகுதிக்குட் டென்ற விவரங்களை மீண்டும் மீண்டும் சிந்தித்து அல்லது கற்று உணரும்பொழுது அல்லது மீட்டுக் கொணரும்பொழுது அவை நெடுங்கால நினைவுப் பகுதிக்கு எளிதில் சென்றடைகிறது.

*  நினைவு 1.புலனறி நினைவு, குறுகிய கால நினைவு, நீண்ட கால நினைவு என மூன்று வகைப்படும்.

*  குறுகியகால நினைவினை தற்கால நினைவு(STM) என்றும், நீண்ட கால நினைவினை நி்லையான நினைவு (LTM) என்றும் குறிப்படுவர்.

*  ஒரே நேரத்தில் குறுகிய கால நினைவில் 7+2 உருப்படிகளை மட்டுமே வைத்திருக்க முடியும் என்று ஆய்வுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. இதையே நினைவு வீச்சு(Memory Span) என்று குறிப்பிடுகிறோம்.

*  நினைவு வீச்சை நினைவு உருளை (Memory Drum) என்ற கருவியைப் பயன்படுத்தி அறியலாம்.

சிந்தனை

*  சிந்தித்தல் என்பது ஒரு அறிவார்ந்த செயலாகும். உளவியல் நோக்கில் சிந்தனை என்பது புறத்தூண்டல்களால் நம் உள்ளத்தில் ஏற்படும் அல்லது தொடர்ந்து நிகழக்கின்ற ஒரு மனச் செயலாகும்.

*  ஒரு குறிக்கோளை அல்லது நோக்கத்தை அல்லது முடிவை அடைவதற்கான வழி தேடும் மனத்தளவிலான முயற்சியே சிந்தனை என்று கூறலாம். மேலும் சிந்தனை என்பது அறிதல் திறனின் கூறாகும்.

*  பழைய அனுபவங்களைச் சிந்தித்து அவற்றுடன் புதிய அனுபவத்தைப் பொருத்திப் பார்த்து ஒரு முடிவுக்கு வருவது குவிச்சிந்தனை(Convergent Thinking) என்று கூறுகிறோம்.

*  பழைய அனுபவத்துடன் புதிய அனுபவத்தைப் பொருத்திப் பார்த்து மேலும் ஒரு புதிய அனுபவத்தைப் பெற முயற்சிப்பதை விரிசிந்தனை(Divergent Thinking)  என்று கூறுகிறோம்.

*  புலன்காட்சி நினைவு போன்ற பலவும் ஆய்ந்தறிதலில் பயன்படுத்தப் படுவதால் ஆய்ந்தறிதலை சிந்தனையின் முழுச் செயல் எனலாம்.

*  ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய முயலும் ஒருவனுக்குத் தடைகள் ஏற்படும்போது அவனுக்குப் பிரச்சனை ஏற்படுகிறது. பிரச்சனைகள் இல்லையெனில் ஆய்தல் தேவைப்படாது.

*  ஆய்வுகளின் காணப்படும் பல்வேறு படிகளைப் பற்றி ஜான்டூயி கூறுவன 1. பிரச்சனையை உணர்தல், 2. பிரச்சினையைத் தீர்க்கவல்ல விவரங்களைத் திரட்டுதல் 3. கருதுகோள்களை அமைத்தல் 4. முடிவை எட்டுதல் 5. முடிவைச் சோதித்தறிதல் ஆகியன.

*  பல செய்திகளை ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்து அவற்றினின்றும் சில பொது விதிகளை வருவித்தல் தொகுத்தறி அனுமானமாகும்.

*  ஒரு பொது விதியைப் பல தனிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கும், நிலைமைகளுக்கும் பயன்படுத்திப் பார்த்தல் பகுத்தறி அனுமானமாகும்.

*  தன் எண்ணங்களை பிறருக்கு எடுத்தியம்பவும், பிறர் கருத்துக்களை அறியவும் மொழித்திறன் தேவைப்படுகிறது.

*  சிந்திப்பதற்கும் மொழி பயன்படுகிறது. மொழியின் வளர்ச்சிக்கும் சிந்தனை உதவுகிறது.

அறிதல் திறன் வளர்ச்சி

*  குழந்தையின் வளர்ச்சியின் முக்கியக் கூறாக அதன் அறிதிறன் வளர்ச்சி (Intellectual or Cognitive Development) விளங்குகிறது.

*  ஒருவர் தனது சுற்றுப்பிறச் சூழலைப் புரிந்து கொள்ளக்கூடிய திறன் வளர்ச்சியை அறிதல் திறன் வளர்ச்சி என்கிறோம். இதற்கு நம் புலன்களாகிய மெய், வாய், கண், மூக்கு மற்றும் செவி பயன்படுகின்றன.

*  ஜீன் பியாஜே என்ற சுவிட்சர்லாந்து அறிவியலறிஞர் தன் வாழ்நாள் முழுவதையும் குழந்தைகளின் வளர்ச்சியைப் புரிந்து கொள்வதில் செலவிட்டார்.

*  குழந்தைகளின் பிறப்பிலிருந்து எவ்வாறு அறிதல் திறன் வளர்ச்சி அடைகிறது என்பதைநான்கு படிநிலைகளாகப் பகுத்துள்ளார்.

*  பியாஜேவின் கருத்துப்படி அறிதிறன் வளர்ச்சியானது தொடர்ச்சியானதாக மட்டுமின்றி வரிசைக்கிரமமாக அமைந்து படிநிலைகளில் நிகழ்கிறது.

*  முதல்நிலை தொட்டு உணரும் பருவம். பிறப்பிலிருந்து 18 மாதம் வரை.

*  இரண்டாம் நிலை மனச் செயல்பாடுகளுக்கு முந்தைய நிலை - 18 மாதம் முதல் முதல் வயது வரை.

*  மூன்றாம் நிலை புலன்களை உணர்வதை வைத்து சிந்தித்துச் செயல்படும் மனச் செயல்பாட்டு நிலை.

*  நான்காம் நிலை முறையாகச் சிந்தித்து எண்ணங்களின் அடிப்படையில் செயல்படும் மனநிலை -12 வயதிற்கு மேல்.

*  ஒரு பொருளைப் பற்றி அறிய, அதை உடல் ரீதியாகவோ, அல்லது மன ரீதியாகவோ கையாள வேண்டும். இவ்வகைச் செயல்களின் தொகுப்பை ஸ்கீமா என்று பியாஜே அழைக்கிறார்.

*  3 முதல் 7 வயது வரையுள்ள குழந்தைகள் புலனியக்கத்திறன், மொழித்திறன் பெற்றவர்களாக உள்ளனர்.

*  8 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்குத் தத்துவ ரீதியாகப் புரிந்து கொள்ள முடியாத கருத்துக்களை அவர்களுக்கு இளமனதில் திணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment