ஆசிரியர் தகுதி தேர்வு சிறப்பு வினா விடைகள் பாகம் 7


மனநலம்

*  உளவியலறிஞர்கள் பார்வையில் மனநலம் என்பது மனவெழுச்சி, முதிர்ச்சி, பொருத்தப்பாடு
மற்றும் நன நிறைவு எனப்படுகிறது.

*  மனநலம் என்பது வாழ்க்கை நிலையைக் குறிக்கும் ஒருவரின் ஆளுமையின் நிறைவான இசைவான செயற்பாட்டைக் குறிக்கும்.

*  நடத்தைப் பிறழ்ச்சிகள்(Behaviour disorder) இன்றி பிறரோடு இணைந்துபோகும் தன்னிணக்கமே மனநலம் எனப்படுகிறது.

*  மனவெழுச்சி வளர்ச்சியின் இறுதி எல்லை மனவெழுச்சி முதிர்ச்சி ஆகும்.

*  மனவெழுச்சி முதிர்ச்சி, சமநிலையுடன் சூழ்நிலையில் பொருத்தப்பாட்டுடன் பிறரோடு மனநிறைவுடன் இணைந்து தானும் பிறரும் மகிழ்ச்சியையும் விதத்தில் ஒருவர் செயல்படும் நிலையே மனநலம் எனப்படுகிறது.

*  அன்பும் பரிவும் கொண்ட ஆசிரியர், மகிழ்ச்சியான கற்ரல் சூழல் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள நண்பர்கள், கருத்து சுதந்திரம், ஒய்வு, நல்ல உணவு, உணர்வு ரீதியாக மனநிறைவு அடைதல் போன்றவை மாணவர்களிடம் உணர்வு சமநிலையைத் தோற்றுவிக்கும் காரணிகளாகும்.

*  உற்சாகமான மனநிலை, நல்ல உறக்கம், உணவில் திருப்தி ஆகிய மூன்றும் மனநலத்தின் வெளிப்படையான அறிகுறிகளாகும்.

*  புதிய சூழலுடன் ஒத்துப்போகும் உறவே இணக்கம் எனப்படும்.

*  புதிய சூழலில் காணப்படும் எதிர்ப்பார்புகளை ஏற்றுக்கொள்ளுதல், அவற்றை நிறைவேற்றுதல், தொடர்ந்து கடைபிடித்தல் போன்றவை இணக்கமான நடத்தைக்கு அடிப்படைகளாகும்.

*  ஒருவர் தனது குணநலன்களையும், நடத்தைகளையும் ஏற்றுக்கொண்டது போலவே, மற்றவர்களும் ஏற்றுக்கொள்ளுதல்(acceptance of others) சமூக இணக்கம் எனப்படும்.

*  ஒருவர் தனது சொந்த குணநலன்களோடு ஆர்வம், ஆற்றல், மனவெழுச்சி, மனப்பான்மை போன்றவற்றோடு ஒத்துப்போவது தன்னிணக்கம்(Personal Adjustment) எனப்படும்.

*  பள்ளிச் செயல்களில் முழுவதுமாக ஈடுபட்டு பள்ளிக் குறிக்கோள்களை அடைவதற்குரிய செயல்களை மாணவன் வெளிப்படுவத்துவது பள்ளி இணக்கம் எனப்படும்.

மனவெழுச்சிகளும் உடல்நலமும்

*  மனநலமும், உடல் நலமும் ஒன்றோடொன்று இணைந்தவை. உடல்நலப் பிரச்சனைகள் ஒருவரிடம் மனச்சோர்வு, மகிழ்ச்சியின்மை, எரிச்சல், கோபம் போன்றவை மனக்குறைபாடுகளை ஏற்படுத்துகிறது.

*  மன அதிர்ச்சி, உடம்பில் வியர்வையாக, இதயத் துடிப்பை அதிகரிப்பதாக பசியின்மையாக, வயிற்றுவலியாக வெளிப்படுகிறது.

*  மனநலப் பிரச்சனைகள் காரணமாக பல்வேறு உடல் நலப் பிரச்சனைகள் தோன்றுகின்றன. அதிகமான மன அதிர்ச்சி மீண்டும் மீண்டும் எழுவதால் குடற்புண், உயர் இரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

*  பயம், பதற்றம், தாழ்வு மனப்பான்மை, அளவு கடந்த துக்கம் காரணமாக ஏற்படும் மன மாறுபாடுகள் ஆஸ்துமாவை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

*  ஆழ்ந்த உணர்ச்சியை வெளிக்காட்டாமல் மனதில் அடக்கி வைப்பதால் குடற்புண் ஏற்படுகிறது.

*  மன அழுத்தம், மன உளைச்சல், பயம் அதிகயளவில் தோன்றும்போது உடல் வலி தோன்றுகிறது.(எ.கா.தலைவலி)

*  மனதில் ஏற்படும் அழுத்தங்களும், பகைமை உணர்வும், குற்றஉணர்வுகளும், அதிக இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகின்றது.

*  பல்வேறு நாளமில்லா சுரப்பிகள் தூண்டப்படுவதால் சுரக்கும் அதிகமான ஹார்மோன்களால் நீரிழிவு நோய் ஏற்படுகின்றது.

*  மனதில் மறைத்து வைக்கப்பட்டு தீவிரமான மனஉணர்வுகளின் காரணமாக வலிமிகுந்த மாதவிடாய் ஏற்படும் அல்லது சரிவர வராமல் நீண்டகாலம் தள்ளிப்போகும்.

*  எரிக்சனின் கருத்துப்படி ஒருவரின் ஆளுமை வளர்ச்சியில் உள்ள நிலைகளின் எண்ணிக்கை எட்டு.

*  தன்னுடைய நிறை குறைகளை முழுமை தழுவிய அணுகுமுறையில் உண்மையான நோக்கில் மதிப்பீடு செய்து கொள்வதையே தன்னையறிதல் என்கிறோம்.


*  பொறாமை என்பது ஒரளவு அச்சமும், சினமும் கலந்த சிக்கலான வீணான மன வெழுச்சியாகும். யாரையோ, எதையோ எதிர்த்து உருவாகும் தீவிர உணர்வாகும்.

*  விரும்பத்தகாத விளைவுகளுக்கு வரவேற்பு வளையம் வைக்கும் நஷ்டம் தரும் உணர்வாகும். சந்தேகம், பயம், பிறர் குறித்த கணிப்பின் காரணமாக ஏற்படும் உணர்வாகும்.

*  பொறாமையின் காரணமாக பழிவாங்குதல், திட்டமிட்டு அழித்தல், ஆத்திரமாக செயல்படுதல், அவதூறு பேசுதல் போன்ற எதிர்மறை எண்ணங்கள் மற்றும் பொருத்தப்பாடற்ற நடத்தைகள் ஒருவரிடம் தோன்றுவதால் பல்வேறு உடல்நலச் சீர்கேடுகளும், (எ.கா உயர் இரத்த அழுத்தம், ஆஸ்துமா, குடற்புண், மனநலப் பிரச்சினைகளும்) உருவாகும்.

*  அச்சம் என்பது மனிதர்களிடம் காணப்படும் வெறுப்பூட்டும், எதிர்மறை மனவெழுச்சியாகும்.

*  மனவெழுச்சியில் ஒரு பொருள் அல்லது நிகழ்ச்சி குறித்த மகிழ்வுணர்வு அல்லது வெறுப்புணர்ச்சி மேலோங்கிக் காணப்படும்.

*  ஹெரால்டு ஷால்ஸ்பர்க் என்பவரின் கருத்துப்படி மனவெழுச்சிகள் மூன்று பரிமாணங்களில் பரவிக் காணப்படுகின்றன. 1. மகிழ்ச்சி - மகிழ்ச்சியின்மை 2. கவனித்தல் - புறக்கணித்தல் 3. செயலுறு நிலை - செயலற்ற நிலை ஆகியன. இம்மூன்றுடன் நான்காவதாக எளிமை - சிக்கல் என்னும் பரிமாணமும் இன்று குறிப்பிடப்படுகிறது.

*  நினைப்பதற்கும் நடப்பதற்கும் இடையே காணப்படும் முரண்பாடுகள் கவலைக்கு அடிப்படை காரணமாக அமைகின்றது. திறமையின்மை, அச்சம், பிரச்சனை குறித்த விழிப்புணர்வு, பேராசை காரணமாக தனது இயலாமையை உணர்ந்து, நினைத்து வருத்தி அமைதி இழந்து காணப்படும் மனோநிலை கவலை எனப்படும்.

*  கவலைகள் இருவழிகளில் சந்திக்கலாம். 1.எதிர்த்துப் போராராடுதல் Fight, 2. தப்பித்து ஒடுதல் Flight

*  அதிக அளவில் கவலைப்படுவதின் விளைவுகள்: தெளிவற்ற மனநிலை, எரிச்சல், மன அழுத்தம், மனப்போராட்டம், சுவாசநோய், இரத்த அழுத்தம் போன்ற பல்வேறு உடல்நலச் சீர்கேடுகள், சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுதல், மாயத்தோற்றம், மாய ஒலி போன்ற மனநலப்பிரச்சினைகள்.

*  ஆரோக்கியமற்ற உறவுகளும் தாழ்வு மனப்பான்மையும் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஆணி வேராக அமைந்துள்ளன.

*  பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டிய மூன்று A க்கள் Accept - ஏற்றுக்கொள்ளுதல்(நிறை குறைகளுடன்), Adjust - அனுசரித்தல் (உணர்வுகளை மதித்தல்), Appreciate - பாராட்டுதல்(வெற்றிகளையும், முயற்சிகளையும்)

*  மனவெழுச்சியின் வளர்ச்சியின் இறுதி எல்லை மனவெழுச்சி முதிர்ச்சி ஆகும்.

*  நடத்தை பிறழ்ச்சிகள் இன்றி பிறரோடு இணைந்துபோகும் தன்னிணக்கமே மனநலம் எனப்படுகிறது.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment