ஆசிரியர் தகுதி தேர்வு சிறப்பு வினா விடைகள் பாகம் 8


குறியீட்டுச் சிந்தனை

*  குழந்தைகள் தாங்கள் புரிந்துகொண்ட வார்த்தைகள், எண்கள், உருவங்கள் போன்ற
குறியீடுகளை உள்ளத்தில் உபயோகப்படுத்தும் திறனே குறியீட்டுச் சிந்தனை எனப்படும்.

*  குழந்தைகள் இடைவெளி, காரண காரியம், அடையாளம் காணுதல், வகைப்பாடு செய்தல் மற்றும் எண்ணுருக்கள் இவற்றைப் புரிந்து கொள்வதன் மூலம் அவர்களின் குறியீட்டுச் சிந்தனை வளர்ச்சி அடைகிறது.

*  குழந்தைகள் சிலவற்றை சிசுப் பருவத்திலிருந்தே புரிந்து கொள்ளத் தொடங்கி விடுகின்றனர். மற்றவை முன் குழந்தைப் பருவத்தில் வளர ஆரம்பிக்கின்றன. எனினும் பின் குழந்தைப் பருவம் வரை இந்த வளர்ச்சி முழுமை அடைவதில்லை.

*  குழந்தைகள் பள்ளிக்கு வரும் முன்னர் பின்பற்றிச் செய்தல், பாவனை விளையாட்டு, மொழியால் கருத்துப்பரிமாற்றம் ஆகிய செயல்களில் ஈடுபடுகின்றனர். இவையெல்லாம் குறியீட்டுச் சிந்தனையின் வெளிப்பாடுகளே ஆகும்.

*  பாவனை விளையாட்டில் குழந்தைகள் தங்களை மருத்துவர் போலவும், ஒட்டிநர் போலவும் உருவகப்படுத்தி கொண்டு விளையாடுகின்றனர்.

*  குழந்தைகளின் குறியீட்டுச்சிந்தனைக்கு எண்ணுருக்களும் எழுத்துக்களும் அவசியம். மொழியைப் பயன்படுத்தி குழந்தைகள் வார்த்தைகளைப் பேசுகின்றனர், கேட்கின்றனர்.

*  புலன் உணர்ச்சி அல்லது செயல் குறிப்பு இல்லாமல் மனத்தளவில் நடைபெறுவது குறியீட்டுச் சிந்தனையின் தன்மையாகும்.

*  குறியீட்டுச் சிந்தனையின் வளர்ச்சி தர்க்க முறை சிந்தனை ஆகும். தர்க்க முறை சிந்தனை என்பது குறியீடுகளில் வரிசைத் தொடரை ஏற்படுத்தி ஒரு முடிவையெடுத்தல் அல்லது மதிப்பீடு செய்தல் ஆகும்.

*  ஒரு குழந்தை 7, 8 ஆண்டுகளில் வரிசைத் தொடர்பு கிரமப்படி சிந்திக்கத் தொடங்குகிறது என்று பியஜே குறிப்பிடுகிறார்.

*  பியாஜெ மற்றும் அவரது சகாக்கள் குழந்தைகள் தர்க்க சிந்தனை வளர்ச்சியை அனுமானம் செய்வதன் மூலம் ஆரம்பிக்கின்றனர் என்று கருதுகின்றனர்.

*  பள்ளிமுன் பருவத்தில் (3-6 ஆண்டுகள்) குழந்தைகள் எண்களைப்பற்றிய 5 விதிகளை ஒரளவு புரிந்துக்கொள்கின்றனர்.

*  குறியீட்டுச் சிந்தனை வளர்ச்சி குழந்தைகள் பொருள்களுக்கு இடையே உள்ள இடைவெளி தொடர்பு பற்றி சரிவர தெரிந்து கொள்ள உதவுகிறது. இதுவே இடைவெளி தர்க்க சிந்தனை எனப்படுகிறது.

*  வினைக்கும் பயனுக்கும் இடையே உள்ள காரண காரிய தொடர்பை சிறு குழந்தைகள் அறிந்திருந்தாலும், 2 ஆண்டுகள் வரை காரண காரிய தர்க்க முறை சிந்தனை வளர்ச்சி பெறவில்லை ஏன்? எதற்கு? என பல்வேறு வினாக்களைத் தொடுப்பது குழந்தைகளின் காரண காரிய சிந்தனை வளர்ச்சியின் வெளிப்பாடே.

1 ஒரு பொருளுக்கு ஒர் எண்ணைத் தொடர்பு படுத்துதல். 2. நிலையான எண் வரிசை (1,2,3,4,----) 3. எந்தப் பொருளிலிருந்து எண்ணத் தொடங்கினாலும் மொத்த எண்ணிக்கை சமம். 4. பொருள்களின் மொத்த எண்ணிக்கை கடைசிப் பொருளின் எண்ணாகும். 5. இந்த நான்கு விதிகளும் எந்தப் பொருளுக்கும் பொருந்தும்.

*  ஐந்து வயதில் குழந்தைகள் 20 மற்றும் அதற்கு மேலும் எண்ண முடிகிறது. ஒன்று முதல் பத்து வரை எண்களின் அளவை அதாவது பெரியது, சிறியது என அறிந்து கொள்ள முடிகிறது.

*  பள்ளியில் பாடங்களைக் குழந்தைகள் தொடக்கப் பள்ளிக்கு வரும்போது அவர்களின் குறியீட்டுச் சிந்தனையும் தர்க்க முறை சிந்தனை வள்ர்ச்சி தொடங்கப் பெற்று இருந்தாலும், அவை முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்கவில்லை. குழந்தைகளின் சிந்தனையில் சில குறைபாடுகள் காணப்படுகின்றன. இதற்குக் காரணம் குழந்தைகள் அறிதல் திறன் வளர்ச்சியில் முழுமை அடையவில்லை என்பதே ஆகும்.

அறிதல் திறன் வளர்ச்சி

*  தன்னையும் சுற்றுப்புறச் சூழ்நிலையையும் புரிந்துகொள்ளும் மனத்திறனை அறிதல் திறன் என்கிறோம்.

*  அறிதல் திறனில் சிந்தித்தல், நினைவுகூர்தல், மொழியைப் பயன்படுத்துதல், படைப்பாற்றல், நுண்ணறிவு, புரிந்துகொள்ளுதல், பிரச்சனையைத் தீர்த்தல், முடிவு செய்தல் போன்ற பல திறன்கள் அடங்கியுள்ளன. இத்திறன்களின் வளர்ச்சியையே அறிதல் திறன் வளர்ச்சி என்கிறோம்.

*  நெய்சா என்ற அறிஞரின் கருத்துப்படி, புலனுறுப்புக்கள் மூலம் பெறப்படும் செய்திகளைத் தொகுத்தல், சுருக்கியமைத்தல், விரிவுபடுத்தல், நினைவு கூர்தல் என்ற உளச் செயல்களின் அடிப்படையில் ஆராய்ந்து அவை பற்றி அறிந்து கொள்ளுதல் அறிதிறன் என்ப்படும்.

*  வெளி உலகத்தைப் பற்றி தெரிந்து கொள்ள உதவும் உளச் செயல்களே அறிதிறன் செயல்கள் எனப்படும்.

*  அறிதல் திறன் வளர்ச்சி நான்கு படி நிலைகளில் நடைபெறுகிறது என்று பியாஜே என்ற உளவியல் அறிஞர் குறிப்பிடுகின்றார். அதாவது 1. புலனியக்கப் பருவம் Sensory motor state: 0-2 years) 2. மனச் செயல்பாட்டுக்கு முந்தைய பருவம் (Preoperational Stage: 2-7 years  3. கண்கூடாகப் பார்ப்பதைக் கொண்டு சிந்திக்கும் பருவம் (C0ncrete Operational Stage: 7-12 years 4. முறையான மனச் செயல்பாட்டுப் பருவம்  (Formal Operational Stage: above 12 years) என நான்கு படி நிலைகளில் நடைபெறுகிறது என சுவிட்சர்லாந்து நாட்டு உளவியலறிஞரான ஜீன் பியாஜே குறிப்பிடுகிறார்.

*  ஒரு பொருளைப் பற்றி அறிய, அதை உடல் ரீதியாகவோ, அல்லது மன ரீதியாகவோ கையாள வேண்டும். இவ்வகைச் செயல்களின் தோகுப்பை ஸ்கீமா என்று பியாஜே அழைக்கிறார்.

*  ஸ்கீமா உருப்பெரும் தன்மைக்கேற்ப குழந்தைகளின் அறிதிறன் வளர்ச்சியை நான்கு நிலைகளாக மேற்கூறியவாறு பியாஜே பிரித்துள்ளார்.

*  அறிதல் திறன் வளர்ச்சியில் குழந்தை பிறந்தது முதல் இரண்டு ஆண்டுகள் வரை உள்ள பருவம் புலனியக்கப் பருவம் எனப்படும்.

*  புலனியக்கப் பருவத்தின் தொடக்கத்தில், அதாவது பிறந்து நான்கு மாதங்கள் வரை குழந்தைகள் பொருளின் நிலைப்புத் தன்மையை உணர்வதில்லை.

*  ஒரு பொருள் கண் முன் இல்லையென்றாலும் அப்பொருள் எங்கோ ஒர் இடத்தில் உள்ளது என்று உணர்ந்து கொள்ளுதல் பொருளின் நிலைப்புத் தன்மையை உணர்தல் எனப்படும்.

*  பொருளின் நிலைப்புத் தன்மையை சுமார் 18 மாதங்கள் ஆன பின்பு குழந்தை முற்றில்ும் உணர்ந்து கொள்கிறது. இவ்வாறு பொருளின் நிலைப்புத் தன்மையை உணர்தலும், பொருளின் உருவம் மனதில் தோன்றுதலுமே புலனியக்கப் பருவத்தின் முக்கிய வளர்ச்சியாகும்.

*  மனச் செயல்பாட்டுக்கு முந்தைய பருவத்தில் குழந்தைகள் மன உருவங்களைப் பயன்படுத்துவதில் படிப்படியாக முன்னேறுகின்றன. அதே சமயத்தில் குழந்தையின் மொழியும் வளர்ச்சி அடைகிறது.

*  மனச்செயல்பாட்டுக்கு முந்தைய பருவத்தி்ல் குழந்தைகள் மன உருவங்களைக் கொண்டு சிந்தனையைத் தொடர்ந்தாலும் இப்பருவத்தில் குழந்தையின் அறிதல் திறன் முழு வளர்ச்சி அடைவதில்லை. இப்பருவத்தில் குழந்தைகளின் சிந்தனைகளில் சில குறைபாடுகள் காணப்படுகின்றன.

*  குழந்தைகளின் சிந்தனையில் காணப்படும் ஒரே ஒரு கூறில் மட்டும் கவன செலுத்தும் தன்மை, நடந்து முடிந்த ஒர் நிகழ்ச்சியை மனத்தளவில் மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர இயலாத *  தன்மை, தன்னை மையமாக்கிச் சிந்திக்கும் தன்மை, உயிருள்ள பொருள்களையும் உருள்ளவையாக பாவிக்கும் தன்மை முதலியன.

*  ஒரே ஒரு கூறில் மட்டும் கவனம் செலுத்தும் தன்மை என்பது குழந்தைகள் ஒரு பிரச்சனையின் ஒரே ஒரு கூறில் மட்டும் கவனம் செலுத்தி மற்ற முக்கியக் கூறுகளைப் புறக்கணிக்கும் பண்பாகும்.

*  மனச்செயல்பாட்டுக்கு முந்தைய பருவத்து குழந்தைகள் எல்லாப் பொருள்களும் தங்களைப் போலவே உயிருள்ளவை என்றும் நம்புகின்றனர்.

*  அறிதல் திறனில் ஒரளவு மன உருவங்களைப் பயன்படுத்தும் திறன் வளர்ந்திருந்தும் அது முழுமையாக வளர்ச்சி அடையாமல் ஆனால் வளர்ச்சி நோக்கி செல்வதால் பியாஜே இதனை  மனச்செயல்பாட்டுக்கு முந்தைய பருவம் என்ரு பெயரிட்டார்.

*  முதல் வகுப்பில் தொடக்கக் கல்வியை தொடங்கும் குழந்தை இன்னும் மனச் செயல்பாட்டுக்கு முந்தைய பருவத்திலேயே உள்ளதால் அவர்களின் திறன் முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.

*  நரம்பு மண்டலத்தின் முதிர்ச்சி மற்றும் குழந்தை சூழ்நிலையோடு கொள்ளும் பொருத்தப்பட்டு ஆகிய இரண்டும் இணைந்து செயலாற்றுவதன் மூலம் பொருள்களின் மாறாத் தன்மை போன்ற அறிதல் திறன் வளர்ச்சி பெறுகிறது.

*  மனிதனை நாகரீக வளர்ச்சியின் உச்சிக்குக் கொண்டு செல்ல மேம்பட்ட சிந்தனைக்குப் பெரிதும் துணை புரிவது மனச் செயல்பாட்டுக்கு முந்தைய பருவமாகும்.

குழந்தைகளின் மொழி வளர்ச்சி

*  மொழி என்பது தனது எண்ணங்களைப் பிறர்க்குத் தெரியப்படுத்த மனதால் வகுக்கப்பட்ட குறிகள் அல்லது அடையாளங்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகும்.

*  குழந்தைகளின் மொழித்திறன் வளர்ச்சிக்கு அடிப்படையாக உடல் முதிர்ச்சி(வாய், உதடு ஆகியவற்றின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் திறன்) அமைகிறது.

*  பிறந்த குழந்தை உடல் வளர்ச்சி மற்றும் அறிதல் திறன் வளர்ச்சி அடைந்ததும் தனது முதலாவது பிறந்த நாளில் (10 முதல் 14 மாதங்களில்) அடையாளம் காணக்கூடிய தெளிவான உச்சரிப்புடன் கூடிய முதல் சொல்லைப் பேசுகிறது.

*  பொதுவாக 18 மாதங்கள் வரை குழந்தைகள் ஒரு தனியான சொல்லைப் பேசி தம் கருத்தைத் தெரிவிக்கிறது.

*  18-24 மாதங்கலில் குழந்தை சிறு வாக்கியங்களை பேசத் தொடங்குகிறது. முதல் முக்கியமான அரு சொற்களைக் கொண்ட வாக்கியங்களைப் பேசுகிறது.

*  20-30 மாதங்களில் இரண்டுக்கு மேற்பட்ட சொற்களை வாக்கியத்தில் அமைத்து பேசுகின்றனர்.

*  12 வயதில் குழந்தையின் சொற்களஞ்சியம் சுமார் 10000க்கும் அதிகமான சொற்களைக் கொண்டதாக உள்ளது.

*  குழந்தைகளின் ஒலியெழுப்பும் செயல், மொழித் திறனாக உருவாவதில் 3 படிநிலைகள் உள்ளதாக ஸ்கின்னர் குறிப்பிடுகிறார்.

*  குடும்பப் பின்னணியில் பூவா, ஆம், மம்மு போன்ற உணவைக் குறிக்கும் சொற்களை குழந்தை தன் தாயிடமிருந்து கற்கிறது. இதனை குழந்தையின் தாயார் மொழி என்கிறோம்.

*  மொழி வளர்ச்சியில் குழந்தைகள் தங்கள் வட்டாரங்களில் வழங்கப்படும் மொழியையே முதலில் கற்றுக் கொள்கின்றனர்.

*  குழந்தை உலகத்தோடு இணைந்து செயற்றுவதால் ஏற்படும் தனது வளர்ச்சியில் ஒவ்வொரு நிலையிலும் தனக்கு ஏற்படும் சோதனைகளில் கிடைக்கும் வெற்றி, தோல்விகளைப் பொறுத்து தன்னுடனான உணர்வு ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் மாறுபடுகிறது என்கிறார் எரிக்சன் என்னும் உளவியலார்.

*  குடும்பத்தினண் பொருளாதாரச் சூழ்நிலை குழந்தைகளின் அறிதல் திறன் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

*  உடன்பாட்டு தற்கருத்து கொண்ட மாணவர்கள் வகுப்பறையில் சுறுசுறுப்பாகவும், வெற்றி உணர்வோடும் தன்னம்பிக்கையுடன் திகழ்வார்கள்.

*  எதிர்மறை கருத்து கொண்ட மாணவர்கள் பள்ளி இணைக்கம், சமூக இணக்கம், தன்னணக்கம் போன்ற செயல்பாடுகளில் குறைபாடு உடையவர்களாக இருப்பார்கள்.

*  வெற்றி வெற்றியையும், தோல்வி தோல்வியையும் வளர்க்கும் என்கிறது நவீன உளவியல் கோட்பாடு. எனவே மாணவர்களின் திறமை, ஆர்வம், விருப்பத்திற்கேற்ப செயல்பாடுகலில் திறமைகளை ஈடுபடுத்தி வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

*  அவநம்பிக்கை, வெறுப்பு, தோல்வி, உணர்ச்சி, சந்தேகம், பாதுகாப்பற்ற உணர்வு போன்ற எதிர்மறை எண்ணங்களின் அடிப்படையில் தற்கருத்து அமைவது எதிர்மறை தற்கருத்து எனப்படும்.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment