இந்த ஆண்டுக் காண கேட் தேர்வு தேதி அறிவிப்பு


இந்த 2013ம் ஆண்டிற்கான கேட் தேர்வு தேதி விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் இதை
அறிவித்துள்ளன. இந்தியாவின் உயர்தர மேலாண்மை கல்வி நிறுவனமான ஐ.ஐ.எம்.,களில் எம்.பி.ஏ., படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், இந்த கேட் தேர்வில் ஆர்வமுடன் பங்கு கொள்வார்கள். இத்தேர்வு, மொத்தம் 20 நாட்கள் நடத்தப்படுகிறது. இத் தேர்வுக்கான வவுச்சர்கள்(vouchers), அக்சிஸ் வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில், வரும் ஜுலை 29ம் தேதி முதற்கொண்டு, செப்டம்பர் 24ம் தேதி வரை கிடைக்கும். மேலும், Registration window, ஜுலை 29 முதல் செப்டம்பர் 26 வரை திறந்திருக்கும். இந்தமுறை, 4 புதிய தேர்வு மையங்கள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், மொத்த தேர்வு மையங்களின் எண்ணிக்கை 40ஆக உயர்கிறது. சூரத், உதய்பூர், திருவனந்தபுரம், விஜயவாடா போன்ற இடங்களில் அந்த புதிய தேர்வு மையங்கள் அமையவுள்ளன என்று ஐ.ஐ.எம்., வடடாரங்கள் தெரிவித்தன.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment