கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர் வேலை - டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு


கூட்டுறவு சங்கங்களில், இளநிலை ஆய்வாளர் பணிக்கு, இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.


கூட்டுறவு சங்கங்களில், இளநிலை ஆய்வாளர் நிலையில், காலியாக உள்ள, 17 இடங்களை நிரப்ப, ஆகஸ்ட் 3ம் தேதி, போட்டித் தேர்வு நடக்கிறது. இதற்கு, 17ம் தேதி முதல் (நேற்று), ஜூன் 10ம் தேதி வரை, தேர்வாணைய இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.

மேலும், கூட்டுறவு சங்கங்களில், 13, "சூப்பர்வைசர்" பணிகளை நிரப்பவும், மேற்கண்ட தேதிகளுக்குள் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையில், 18, "ஸ்டோர் கீப்பர் - கிரேடு - 2" பணியிடங்கள், தொழில்துறை மற்றும் வர்த்தகத் துறையில், 2, "ஸ்டோர் கீப்பர்" பணியிடங்களுக்கும், விண்ணப்பிக்கலாம். அனைத்து தேர்வுகளும், ஆகஸ்ட், 3ம் தேதி, காலை, 10:00 மணி முதல், பிற்பகல் 1:00 மணி வரை நடக்கும்.

"ஆப்ஜக்டிவ்" முறையில், 300 மதிப்பெண்களுக்கு, தேர்வு நடக்கும். இத்துடன், 40 மதிப்பெண்களுக்கு, நேர்முகத்தேர்வு நடத்தப்படும். இவ்வாறு தேர்வாணையம் அறிவித்துள்ளது.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment