உலகின் முதல் சோலார் விமானம்


உலகின் முதல் சோலார் விமானம் அமெரிக்காவில் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. சோலார் இம்பல்ஸ்' என பெயரிடபட்டிருக்கும் இந்த சூரியசக்தி விமானம்,
இரவு நேரத்தில் சுமார் 27,000 அடி உயரத்திலும், சூரிய சக்தி இல்லாத நேரத்திலும் செயல்படும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக தன் பயணத்தை துவங்கிய இந்த சோலார் விமானம், சுவிட்ஸர்லாந்தை சேர்ந்த பைலட் பேர்ட்ரண்ட் பிக்கார்ட் என்பவரால் இயக்கப்பட்டது. முதல் பயணத்தின் அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் இருந்து புறப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு சுமார் 49 கி.மீ என்னும் வேகத்தில் பீனிக்ஸ், அரிசோனா பகுதியை சென்றடைந்தது.

சூரியசக்தியை கொண்டு செயல்படும் தன்மையுடைய இந்த சோலார் விமானத்தை கொண்டு, படிம எரிபொருட்கள் இல்லாமல் உலகை சுற்றிவரும் திட்டத்தை 2015 ஆம் ஆண்டு நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. 
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment