பூமியை நெருங்கும் புதிய விண்கல் - தாக்குமா?


பூமியை நோக்கி அதி வேகமாக வந்துக்கொண்டிருக்கும் விண்கல் ஒன்று இம்மாத இறுதியில் பூமிக்கு மிக நெருக்கமாக வருமென என நாசா அறிவித்துள்ளது.

பூமியை நோக்கி சுமார் 2.7 கி.மீ நீளமுள்ள ஒரு விண்கல் அதிவேகத்தில் வந்துக்கொண்டிருக்கிறது. இது வரும் மே 31 ஆம் தேதி பூமியை மிக அருகே கடந்து செல்லுமென தெரிகிறது.

'1998 கியூஇ2' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் 1998 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி அமெரிக்காவின் மசாசூ செட்ஸ் பல்கலைக் கழகத்தின் விண்வெளி மையத்தால் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த விண்கல் எங்கிருந்து வந்தது என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. இந்த விண்கல்லின் மேல் பகுதி கருப்பு நிறத்தில், வழவழப்பான திரவம் படிந்த நிலையில் உள்ளது.

இந்த விண்கல்லின் திசை மற்றும் வேகத்தை, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள அமெரிக்க சிறிய கிரக மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

இந்நிலையில், இம்மாதம் 31 ஆம் தேதி, இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு பூமியிலிருந்து 5.8 மில்லியன் கி.மீ. தூரத்தில் கடந்து செல்லப் போகிறது.

இது பூமிக்கும் நிலவுக்கும் உள்ள தூரத்தைப் போல 15 மடங்காகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment