நிலவை தாக்கிய ராட்ஷச விண்கல் பூமியில் மோதுமா?


விண்வெளியில் இருந்து அதிவேகத்தில் நிலவை நோக்கி வந்த விண்கல் ஒன்று, நிலவின் மீது மோதி, வெடித்ததில் ஏற்பட்ட
வெளிச்சத்தை பூமியில் இருந்து பார்க்க முடிந்ததாக நாசா தெரிவித்துள்ளது.

மணிக்கு 90,000 கிலோமீட்டர் வேகத்தில், விண்கல் ஒன்று நிலவை மோதியதில், நிலவில் சுமார் 20 மீட்டர் பள்ளம் ஏற்பட்டுள்ளது என நாசாவின் விண்கல் சுற்றுசூழல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விண்கற்கள் ஆராய்ச்சியாளர் பில் குக் கூறுகையில், "சிறிய அளவிலான பாறை போன்ற விண்கல் கடந்த மார்ச் 17-ம் தேதி நிலவில் மோதியது. அப்போது, இதுவரை பார்த்திராத அளவுக்கு அதிகளவு வெளிச்சம் உண்டானது' என்றுக் கூறினார்.

நிலவில் மோதிய விண்கல் 40 கிலோ அளவுக்கு எடை கொண்டதாகவும், 0.3 முதல் 0.4 மீட்டர் நீளம் கொண்டதாகவும் இருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் உள்ள விண்கற்களால் நிலவிற்கு ஏற்படும் பாதிப்புகளை ஆராயும் இந்த ஆராய்ச்சி கூடம், இதுவரை நிலாவில் சுமார் 300 தாக்குதல்கள் ஏற்பட்டதாகவும், ஆனால் சமீபத்தில் மார்ச் 17 ஆம் தேதி, நிலவை தாக்கிய விண்கல்லால் ஏற்பட்ட பாதிப்பே மிகவும் அதிக வெளிச்சமுடையதாக இருந்ததாக தெரிவித்துள்ளது.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment