டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாகும் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி., நிரப்பி வருகிறது. மெட்ராஸ் சர்வீஸ் கமிஷன்
என்ற பெயரில் 1929ல் நிறுவப்பட்ட இந்த அமைப்பு 1970ல் தமிழ் நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் என்று பெயர் மாற்றம் பெற்றது. ஜூனியர் அசிஸ்டெண்ட் (நான் செக்யூரிட்டி மற்றும் செக்யூரிட்டி), கிரேடு 1 பில் கலெக்டர், டைப்பிஸ்ட், ஸ்டெனோ டைப்பிஸ்ட், பீல்டு சர்வேயர், டிராப்ட்ஸ்மேன் ஆகிய பிரிவுகளிலான பல காலி இடங்களையும் நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. குரூப் 4 நிலையிலான இந்தப் பணியிடங்களுக்கு லட்சக்கணக்கானவர் விண்ணப்பிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் கடந்த சில ஆண்டுகளாக இது போன்ற பணியிடங்களில்
லட்சக்கணக்கானவர் பங்கேற்றது தான். 

பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்: டி.என்.பி.எஸ்.சி.,யின் அறிவிப்பின்படி நான்-செக்யூரிடி பிரிவிலான ஜூனியர் அஸிஸ்டெண்ட் 3469ம், செக்யூரிடி பிரிவில் 62ம், பில் கலெக்டர் பிரிவில் 19ம், டைப்பிஸ்ட் பிரிவில் 1738ம், ஸ்டெனோ டைப்பிஸ்டில் 242ம், பீல்டு சர்வேயர் பிரிவில் 6ம், டிராப்ட்ஸ்மேன் பிரிவில் 10ம் காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தேவைகள்: தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அறிவித்துள்ள மேற்கண்ட பல்வேறு காலி இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி கல்வித் தகுதியும், இதர தேவைகளும் மாறுபடுகிறது. எல்லா பதவிகளுக்கும் குறைந்த பட்ச கல்வித் தகுதி பத்தாம் வகுப்பிற்கு நிகரான படிப்பு ஆகும். டைப்பிஸ்ட் பதவிக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் டைப்பிங்கில் ஹையர் தேர்ச்சி தேவைப்படும். ஸ்டெனோ பதவிக்கு தமிழ் மற்றும் ஆங்கில ஷார்ட் ஹேண்டு மற்றும் டைப்பிங் தேவைப்படும். துல்லியமான தேவைகளை இணைய தளத்திலிருந்து அறியலாம்.

மற்ற விஷயங்கள்: டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ள மேற்கண்ட காலி இடங்கள் நேர்காணல், ஸ்கில் டெஸ்ட் போன்ற அடிப்படையில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.125/-ஐ கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையிலேயே சமர்ப்பிக்க வேண்டும். இந்த வேலை வாய்ப்பு தகவல் உங்களுக்கு அடிப்படைத் தகவல்களை தெரிவிப்பதற்குத் தான். முழுமையான விபரங்களை அறிய கட்டாயம் இணைய தளத்தைப் பார்த்து அறிந்து அதன் பின்னரே விண்ணப்பிக்கவும்.

விளம்பர எண் 9/2013 வெளியிடப்பட்ட நாள்: 14.6.2013
ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 15.07.2013
கட்டணம் செலுத்த இறுதி நாள் : 17.07.2013
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 25.08.2013

Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment