மாட்டு சாணம் மூலம் இயங்கும் விமானம்

அமெரிக்காவில் நடைபெற்ற 'ஏர்பஸ்' fly your ideas போட்டியில், மாட்டு சாணத்தைக்கொண்டு இயங்ககூடிய
விமானங்களை உபயோகிக்கும் சாத்தியகூறுகள் குறித்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த குழு விளக்கியுள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்ற விமானங்கள் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு யோசனைகளுக்கான போட்டியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு குழு மாட்டு சாணத்தால் விமானங்களை இயக்ககூடிய சாத்தியகூறுகளை விளக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 

இப்போட்டியில் பல நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்று தங்கள் வடிவமைப்புகளை தாக்கல் செய்தனர். 

அதில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர்கள் பசு சாணம் மூலம் இயங்கும் விமானத்தை வடிவமைத்து இருந்தனர். பெட்ரோலுக்கு பதிலாக மீத்தேன் மூலம் இயங்கும் படி தயாரித்து இருந்தனர். 

விமானத்தில் என்ஜினுக்கு அருகே பசு சாணம் கழிவு டேங்க் அமைக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து மீத்தேன் தயாராகி விமானத்தை இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர்கள் விமான பயணிகளின் உடலில் இருந்து வெளியாகும் வெப்பம் மூலம் இயங்கும் விமானத்தை வடிவமைத்து இருந்தனர். அதன் மூலம் பயணிகளின் இருக்கையில் உணர்வு கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். அவை உடலில் இருந்து வெளியாகும் வெப்பத்தை எடுத்து அதை மின்சாரமாக மாற்றி விமானத்தை இயங்க செய்யும். 

ஆஸ்திரேலியா, பிரேசில், மலேசியா, இத்தாலி ஆகிய நாடுகளுடன் இப்போட்டியில் சென்னையை சேர்ந்த மாணவர்கள் குழுவும் இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளது.

சென்னை மாணவர்கள் விமானம் இயங்கும்போது ஏற்படும் சத்தத்தை குறைக்க ஒரு புதிய யோசனையை பரிந்துரை செய்துள்ளனர்.

கடும் போட்டியுடன் நடைபெற்ற இந்த 'ஏர்பஸ்' fly your ideas போட்டியின் வெற்றியாளர் யார் என்பது ஜூன் மாதம் 14 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. 
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment