oxford அகராதியில் விதிமுறைகளை மீறி இடம் பிடித்த tweet வார்த்தை?

ஆக்ஸ்போர்ட் அகராதியில் சமூக வலைத் தளத்தில் பயன்படுத்தப்படும் ட்வீட் என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியின் தலைமை ஆசிரியர் ஜான் சிம்ப்சன் கூறுகையில், ஒரு புதிய வார்த்தையை ஆக்ஸ்போர்ட் அகராதியில் சேர்க்கும் முன்பு குறைந்தது 10 ஆண்டுகளாவது புழக்கத்தில் இருந்திருக்க வேண்டும். 

ஆனால் ட்வீட் (Tweet) வார்த்தை அந்த விதிமுறையை மீறி அகராதியில் இடம்பிடித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அதாவது, பறவையின் பாட்டு என்ற அர்த்தத்தில் ட்வீட் என்ற வார்த்தை ஆக்ஸ்போர்ட் அகராதியில் இருக்கிறது. இந்நிலையில் ஜூன் மாத பதிப்பில் அந்த வார்த்தைக்கு புதிய அர்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

(Retweet)ரீட்வீட் என்ற வார்த்தை கடந்த 2011ம் ஆண்டே ஆக்ஸ்போர்ட் அகராதியில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment