TET - வரலாறு பகுதிக்கான தகுதி தேர்வு வினாக்கள்

*  ஜெர்மனி மற்றும் இத்தாலி ஒன்றிணைக்கப்பட்ட ஆண்டு - 1870

*  சீனா அரசியல் ரீதியான சுதந்திரம் பெற்ற ஆட்சிக்காலம் - மஞ்சு ஆட்சிக்காலம்


*  ஆங்கில கிழக்கிந்திய வணிகக்குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - கி.பி.1600

*  பிரஞ்சு கிழக்கிந்திய வணிகக்குழுவை நிறுவியவர் - கால்பர்ட்

*  சீனக் குடியரசை உருவாக்கியவர் - டாக்டர் சன்யாட்சென்

*  உலகம் முழுவதையும் ஆதிக்கம் செலுத்தும் திறமை ஜெர்மனிக்கு மட்டுமே உள்ளது எனக் கூறியவர் - கெய்சர் இரண்டாம் வில்லியம்

*  ஜெர்மனியால் முழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ்பெற்ற வணிகக்கப்பல் - லூசிட்டானியா

*  பொருளாதாரம் பெருமந்தம் தோன்றிய நாடு - அமெரிக்கா

*  பாசிஸ் கட்சியைத் தோற்றுவித்தவர் - முசோலினி

*  ஹிட்லர் வியன்னாவில் பணியாற்றியது - பெயிண்டர்

*  இரண்டாம் உலகப்போருக்கு முக்கிய காரணமாக அமைந்த உடன்படிக்கை - வெர்சேல்ஸ் உடன்படிக்கை

*  முதல் உலகப் போருக்குப் பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு - ஜப்பான்

*  இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் பிரதமராக இருந்தவர் - சர். வின்ஸ்டன் சர்ச்சில்

*  பிலிட்ஸ்கிரீக் என்றால் - மின்னல் போர்

*  ஐக்கிய நாடுகள் சபை தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1945

*  பன்னாட்டு நீதிமன்றத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் - திஹேக்.

*  ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை நாணயம் - யூரோ

*  1857 ம் ஆண்டு பெரும் புரட்சியை ஆங்கில வரலாற்று அறிஞர்கள் அழைத்த விதம் - படைவீரர் கலகம்

*  குடியானவர்கள் அதிகமாக செலுத்த வேண்டியிருந்த வரி - நிலவரி

*  பொது இராணுவப் பணியாளர் சட்டம் கெண்டு வரப்பட்ட ஆண்டு - 1856

*  முதன் முதலில் புரட்சி வெடித்த இடம் - பாரக்பூர்

*  சீர்திருத்த இயக்கங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் - ராஜராம் மோகன்ராய்

*  சுவாமி தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பட்டது - ஆரிய சமாஜம்

*  இராமகிருஷ்ண மடத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம் - பேலூர்

*  சர்சையது அகமதுகான் தொடங்கிய இயக்கம் - அலிகார் இயக்கம்

*  தமிழ்நாட்டின் தலைசிறந்த சமுதாய சீர்திருத்தவாதி - ஈ.வெ. ராமசாமி

*  இந்திய சமஸ்தானங்களை இணைக்கும் பணியை மேற்கொண்டவர் - சர்தார் வல்லபாய் பட்டேல்

*  சமய மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளால் உருவானது - தேசியம்

*  முஸ்லீம்களுக்கு தனித்தொகுதிகளை அறிமுகப்படுத்திய சட்டம் - மின்டோ மார்லி சீர்திருத்த சட்டம்

*  பம்பாயில் தன்னாட்சி கழகத்தை தோற்றுவித்தவர் - திலகர்

*  சுதந்திர போராட்டத்தில் காந்திஜி உபயோகித்த புதிய யுக்திமுறை - சத்தியாகிரகம்

*  சி.ஆர். தாஸ் மற்றும் மோதிலால் நேரு தோற்றுவித்த கட்சி - சுயராஜ்ஜியம்

*  இரண்டாம் உலகப்போரில் இந்தியர்களை ஈடுபடுத்தியவர் - லின்லித்கோ

*  நேரு இடைக்கால அரசை அமைக்க உதவிகோரியது - ஜின்னா

*  இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு - ஜனவரி 26. 1950

*  இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் - டாக்டர் இராஜேந்திரபிரசாத்

*  வேலூரில் இந்திய வீரர்களை ஆங்கிலேயருக்கு எதிராக செயல்பட தூண்டியவர் - திப்புசுல்தான் மகன்கள்

*  வேதராண்யம் உப்பு சத்தியாகிரகத்தை நடத்தியவர் - இராஜ கோபாலச்சாரியார்

*  வைக்கம் அமைந்துள்ள இடம் - கேரளாபொருத்துக

*  கிளமண்சு - பிரான்சு

*  ஜெர்மன் உடன்படிக்கை - ஆஸ்திரியா

*  ஒவரா - இரகசிய காவல்படை

*  ஸ்வதிகா - நாசி சின்னம்

*  அணு சோதனை தடைச்சட்டம் - 1963.*  ஆர்லாண்டோ - இத்தாலி

*  வெர்செயில்ஸ் உடன்படிக்கை - ஜெர்மனி

*  டியூஸ் - முசோலினி

*  லூஃப்ட்வோஃப் - ஜெர்மனி

*  பேகம் ஹஸ்ரத் மஹால் - லக்னோ*  லாயிட்ஸ் ஜார்ஜ் - பிரிட்டன்

*  நியூலி உடன்படிக்கை - பல்கேரியா

*  பெரும்புரட்சி - 1857

*  இந்துசமய மார்டின் லூதர்கிங் - சுவாமி தாயானந்த சரஸ்வதி

*  கேசரி - பாலகங்காதர திலகர்*  உட்ரோவில்சன் - அமெரிக்கா

*  செவ்ரேஸ் உடன்படிக்கை - துருக்கி

*  ஃபரர் - தலைவர்

*  விக்டோரியா பேரறிக்கை - மகாசாசனம்

*  பஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதிராய்*  பிஆர். அம்பேத்கர் - வரைவுகுழு

*  இந்தியாவின் இரும்பு மனிதர் - சர்தார் வல்லபாய் படேல்

*  சாணக்கியர் - இராஜாஜி

*  வைக்கம் வீரர் - ஈ.வெ.ரா

*  எல்லை காந்தி - கான் அப்துல் காபர்கான்*  சௌரி சௌரா - உத்திரபிரதேசம்

*  நீதிக்கட்சி - டி.எம்.நாயர்

*  வள்ளலார் - இராமலிங்க அடிகள்

*  கெய்சர் இரண்டாம் வில்லியம் - ஜெர்மனி

*  கெஸ்டபோ - ஹிட்லரின் இரகசிய காவல்படை*  டிரையனான் உடன்படிக்கை - ஹங்கேரி

*  கருஞ்சட்டை - முசோலினியின் தொண்டர்கள்

*  ‘U’ வடிவ படகுகள் - ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பல்

*  மங்கள் பாண்டே - பாரக்பூர்

*  வகுப்பு வாத அறிக்கை - ராம்சே மெக்டொனால்டு*  நியூ இந்தியா - அன்னிபெசண்ட்

*  மவுண்ட் பேட்டன் பிரபு - சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல்

*  மெயின் காம்ப் - எனது போராட்டம்

*  அரசை உருவாக்குபவர் -- காமராஜர்

*  நவீன இந்தியாவின் விடிவெள்ளி - இராஜாராம் மோகன்ராய்*  சூரிய ஒளிமூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டம் - இராமகிருஷ்ணமடம்

*  சர்தார் வல்லபாய் பட்டேல் - இந்தியாவின் பிஸ்மார்க்

*  ஒன்றிணைப்பு உடன்படிக்கை - 1967

*  அழித்துப் பின்வாங்கும் கொள்கை  - ரஷ்யா

*  ரோம் அணிவகுப்பு - 1922*  அல்பேனியா - 1939

*  தேவதாசிமுறை - டாக்டர் முத்துலட்சமி ரெட்டி

*  ஈஸ்வர சங்கர வித்யாசாகர் - சமய, சமூக சீர்திருத்தவாதி

*  அட்லாண்டிக் சாசனம் - எப்.டி.ரூஸ்வெல்ட்

*  புனரமைப்பு நிதி நிறுவனம் - கடனுதவிகள்*  கூட்டாச்சி ரிசர்வ் வங்கி - வங்கிகள் மற்றும் தொழிற்சாலைகள்

*  ஹாங்காங் தீவு - இங்கிலாந்து

*  நானா சாகிப் - கான்பூர்

*  மோதிலால் நேரு - சுயராஜ்ஜியக் கட்சி

*  சுப்பிரமணிய பாரதி - நாட்டுப்பற்றுமிக்க எழுத்தாளர்*  பாதுகாப்பு பரிவர்த்தனை சட்டம் - பங்குச் சந்தை உரிமம்

*  ஐரோப்பிய ஒன்றிய வரவு செலவு - ஐரோப்பிய கணக்கீட்டாளர்கள் மன்றம்

*  காக்கிச் சட்டைகள் - ஹிட்லரின் தொண்டர்கள்

*  சுதேசி - ஒருவருடைய சொந்த நாடு

*  பாண்டிச்சேரி - பிரஞ்சுப் பகுதிகள்*  சத்தியமூர்த்தி - பூண்டி நீர் தேக்கநிலை

*  கோவா - போர்ச்சுக்கீசிய பகுதிகள்

*  இராயல் விமானப்படை - இங்கிலாந்து

*  பன்னாட்டு குடியேற்றம் - சீனா

*  இராணி இலட்சுமிபாய் - ஜான்சி*  லக்னோ - காலின் கேம்பேல்

*  பதேக்ஹைதர் - வேலூர்கலகம்

*  தொடர் அணு சோதனை - 1996

*  தற்போதைய ஐ.நா.பொதுச் செயலாளர் - பான்கீமூன்

*  ஜி.ன்.மோன்ட் - பிரான்சு அரசியல் பிரமுகர்*  ரத்து செய்யும் உரிமை - எதிர்வாக்கு

*  இனவெறிக் கொள்கை - ஆப்பிரிக்கா

*  இரண்டாம் பகதூர்ஷா - டெல்லி

*  வீரத்தமிழன்னை - டாக்டர்.எஸ்.தருமாம்பாள்

*  கர்நாடகப் போர்கள் - இந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்க முடிவு*  ஏகாதிபத்தியம்

ஏகாதிபத்தியம் என்பது ஒரு நாடு பிற நாடுகளின் பகுதிகளை வென்று அவற்றை தனது ஆட்சியின் கீழ் கொண்டு வருதல் ஏகாதிபத்தியம் எனப்படும்.*  காலணி ஆதிக்கம்

அந்நிய நாட்டில் குடியேற்றங்களை ஏற்படுத்தி அதன் இயற்கை வளங்களை சுரண்டுதல் காலணி ஆதிக்கம் எனப்படும்.

தைபிங் கலகம்

*  நான்சிங் உடன்படிக்கையைப் பின்பற்றி அந்நிய நாட்டவர்கள் சீனாவுடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டனர்

*  எனவே 1854 ல் மஞ்சு அரசுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் எதிராக சீனர்கள் கலகத்தில் ஈடுபட்டனர் இதுவே தைப்பிங் கலகம் என்று அழைக்கப்பட்டது.*  முதல் உலகப் போருக்கான உடனடி காரணம்

*  1914 ஜீன் 28ம் நாள் பாஸ்னிய தலைநகர் செராஜிவோ நகரில் செர்விய தீவிரவாத இளைஞன் ஒருவனால் ஆஸ்திரிய நாட்டு பட்டத்து இளவரசர் பிரான்சிஸ்

பெர்டினாண்டும் அவரது மனைவி இசபெல்லாவும் சுட்டுக் கொல்லப்பட்டனர் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என ஆஸ்திரியா செர்பியாவைக் கோரியது

*  ஆனால் செர்பியாவின் பதில் ஆஸ்திரியாவிற்கு திருப்தி அளிக்கததால் அஸ்திரிய 1914-ம் ஆண்டு ஜீலை 28ம் தேதி செர்பியா மீது போரை அறிவித்தது.*  செர்செயில்ஸ் உடன்படிக்கையின் முக்கிய அம்சங்கள்

*  ஆஸ்திரிய மற்றும் ஹங்கேரி குடியரசுகள் அங்கீகரிக்கப்பட்டன.

*  டான்சிக நகருக்கு சர்வதேச அங்கீகாரம் அளிக்கப்பட்டது.*  சர்வதேச சங்கத்தின் அங்கங்கள்

*  பொதுச்சபை

*  மன்றம்

*  செயலகம்

*  சர்வதேச நீதிமன்றம்

*  சர்வதேச தொழிலாளர் அமைப்பு*  பொருளாதார பெருமந்தம் தோன்றக் காரணங்கள்

*  அமெரிக்க பங்கு சந்தையில் ஏற்பட்ட சரிவு

*  பங்குகளின் விலை உயரும் என்ற அனுமானத்தில் மக்கள் கடன் வாங்கி பங்கு சந்தையில் முதலீடு செய்தனர்*  பாசிசம் பொருள்

*  பாசிசம் பாசிஸ் என்ற லத்தின் வார்த்தையிலிருந்து வந்தது

*  இதற்கு கூட்டு அல்லது குழு என்று பொருள்.

*  மியூனிச் உடன்படிக்கை

*  ஹிட்லர் மியூனிச் என்னும் இடத்தில் இங்கிலாந்து பிரதமர் நிவில் சேம்பர்லைன் என்பவருடன்

ஒர் உடன்படிக்கை செய்து கொண்டார்.

*  இதன்படி ஹிட்லர் சூடட்டன்லாந்தை தவிர பிற இடங்களை கைப்பற்றக் கூடாது என்று உறுதி மொழியைப் பெற்றுக் கொண்டார்

*  ஆனால் 1939-ல் மியூனிச் உடன்படிக்கையை மீறி ஹிட்லர் செக்கோஸ்லோவாகியா முழுவதையும் ஜெர்மனியுடன் இணைத்துக் கொண்டார்.*  அழித்துப் பின்வாங்கும் கொள்கை

இராஷ்யர்கள் இரண்டாம் உலகப்போரில் இக்கொள்கையைப் பின்பற்றினர் இதன்படி பயிர்கள், பாலங்கள், இருப்புப் பாதைகள் போன்றவற்றை எதிரிகள் கைப்பற்றாமல் இருக்க

அவற்றை தாங்களே தீயிட்டு அழித்துக்

கொண்டு முன்னேறினர்*  ஐ.நாவின் சிறப்பு நிறுவனங்கள் சில

*  உலக சுகாதார நிறுவனம்

*  பன்னாட்டு தொழிலாளர் நிறுவனம்

*  உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம்

*  உலக வங்கி*  ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நோக்கங்கள்

*  ஐரோப்பிய குடியுரிமை ஏற்படுத்துதல்

*  சமுதாய முன்னேற்றத்தை உயர்த்துதல்

*  ஐரோப்பிய பாதுகாப்பை பலப்படுத்துதல்

*  சமநீதியை உறுதி செய்தல்*  விக்டோரியா மகாராணியின் பேரறிக்கையின் முக்கியத்துவம்

*  இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை இங்கிலாந்து அரசி நேரடியாக மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது.

*  இந்தியாவின் பழமையான பண்பாடும் பழக்க வழக்கங்களும் மதிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.

*  புரட்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.*  1857ம் ஆண்டு நடந்த புரட்சியின் உடனடிக் காரணம்

*  என்ஃபில்டு ரக துப்பாக்கியும்ää கொழுப்பு தடவிய தோட்டக்களும் புரட்சியின் உடனடி காரணம் ஆகும்.

*  இதன் மேலுறையில் பசு, மற்றும் பன்றியின் கொழுப்பு தடவப்பட்டுள்ளது என்ற வதந்தியினால் இதை வீரர்கள் உபயோகிக்க மறுத்தனர்.

*  மங்கள் பாண்டே கொழுப்புத் தடவிய தோட்டாவை உபயோகிக்க மறுத்து தனது மேலதிகாரியை சுட்டுக் கொன்றார்.

*  இதனால் அவர் தூக்கிலடப்பட்டார். இந்நிகழச்சியே புரட்சிக்கு உடனடிக் காரணமாயிற்று.*  பெரும் புரட்சியின் ஈடுபட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் முக்கிய இடங்கள்

*  இரண்டாம் பகதூர்ஷா - டெல்லி

*  ஜான்சிராணி - மத்தியடெல்லி

*  பேகம் ஹஸ்ரத் மஹால் - லக்னோ

*  நான சாகிப், தாந்தியதோப் - கான்பூர்*  ஆரிய சமாஜத்தின் பணிகள்

*  மக்களிடையே சுயமரியாதையும், தன்னம்பிக்கையையும் வளர்ந்தது

*  மதம் மாறிய இந்துக்களை மீண்டும் இந்து சமயத்தில் சேர்த்தது.பிரம்ம ஞான சபையின் கொள்கைகள்

*  மக்களிடையே சகோதரத்துவ உணர்வை வளர்ப்பது

*  மக்களிடையே தெய்வீக சக்திகளை வளர்ப்பது*  19-ம் நூற்றாண்டின் சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்களின் விளைவுகள்

*  இவ்வியக்கங்கள் உடன்கட்டை ஏறுதல், குழந்தை திருமணம், தீண்டாமை ஆகியவற்றை ஒழித்தது.

*  பெண்கல்வி, கலப்பு திருமணம், விதவைகள் மறுமணம், ஆகியவற்றை ஏற்றுக்கொண்டது

*  சமுதாய எழுச்சி, தேசிய உணர்வு பெருகிட வழி வகுத்தது.*  இந்திய தேசிய காங்கிரஸின் குறிக்கோள்கள்

*  சட்டமன்றங்கள் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

*  கல்வியைப் பரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்;.

*  இராணுவச் செலவுகளை குறைக்க வேண்டும்.

*  இந்தியர்களை உயர்பதவிகளில் நியமிக்க வேண்டும்.*  வேலூர் கலகம்

*  இந்து வீhர்கள் நெற்றியில் சமயக் குறிகளை இடக்கூடாது என்றும், முஸ்லீம் வீரர்கள் தாடி மீசைகளை வெட்டி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். என்ற

கட்டுப்பாடுகள் வேலூர் கலகத்திற்கு வழி வகுத்தது.

*  1806 ஜீலை 9ல் திப்புவின் மகள் திருமணத்தின் போது வீரர்கள் ஆங்கிலேயர்களைத்தாக்கி வேலூர் கோட்டையைக் கைப்பற்றினர்.*  நீதிக்கட்சியின் ஆட்சி

*  1920 திரு.சுப்பராயலு தலைமையில் ஆட்சி அமைத்தது

*  1923 ல் திரு.டி.எம்.சிவஞானம் பிள்ளை தலைமையில் ஆட்சி அமைத்தது

*  1926 - மற்றும் 1930 ல் மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்றது.

*  பெரியார் வைக்கம் வீரர் என அழைக்கப்பட காரணம்

*  வைக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலய நுழைவுத்தடை சட்டத்தை எதிர்த்து போராடினார்.

*  இறுதியில் திருவிதாங்கூர் அரசு ஆலய நுழைவு தடைச்சட்டத்தை தளர்த்தி அனைவரும் ஆலயத்திற்க்குள் நுழையலாம் என அறிவித்தது. எனவே இவர் வைக்கம் வீரர் எனப்பட்டார்.

*  தேவதாசி முறை ஒழிப்பிற்கு முத்துலட்சுமி ரெட்டியின் போராட்டம்

*  தேவதாசி முறையை ஒழிக்க தன் வாழ் நாள் முழுவதையும் அர்பணித்தார்.

*  தந்தை பெரியார், திரு.வி.க. இருவரும் இவரது கருத்தை ஆதரித்தனர்

*  எனவே, நீதிக்கட்சி அரசாங்கம் தேவதாசி ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்றியது.* காமராஜரின் நலத்திட்டப் பணிகள்

* மதிய உணவுத் திட்டம்

* புதிய பள்ளிகளைத் திறந்து இலவச கல்வி வழங்குதல்

* வேளாண்மையை மேம்படுத்துதல்

* கால்வாய்களைக் கட்டுதல்

* அணைகளைக் கட்டுதல்

* தொழிற்சாலைகளை அமைத்தல் போன்ற நலத்திட்டங்களை மேற்கொண்டார்*  பிளாசி மற்றும் பக்சார் போர்

* 1757 -ம் ஆண்டு வங்காளத்தின் நவாப்பாக இருந்தவர் - சிராஜ் உத் தெளலா.

* துணைப் படைத்திட்டத்தினை அறிமுகப்படுத்தியவர் - வெல்லெஸ்லி பிரபு

* டல்ஹெளசி பிரபுவின் கொள்கை - வாரிசு இழப்புக் கொள்கை

* விக்டோரியா மகாராணியின் பிரகடனம் வெளியிடப்பட்ட ஆண்டு -  நவம்பர் 1, 1858*  ஜெர்மனியின் போராசை

* முதல் உலகப்போரின் போது ஜெர்மனியின் அரசர் - கெய்சர் இரண்டாம் வில்லியம்

* அவரின் நம்பிக்கை - உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் உரிமை மற்றும் திறமை ஜெர்மனிக்கு மட்டுமே உள்ளது என அவர் நம்பினார்.

* அவரால் சகித்துக் கொள்ள முடியாதது - ஆங்கிலேயர்களின் பேரரசில் சூரியன் மறைவதே இல்லை என்ற கூற்றை அவரால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

* எங்கு கப்பற்படை தளம் அமைத்திருந்தார் - ஹெலிகோலாண்ட்*  உடனடிக்காரணம்

* பாஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவை எப்பொழுது ஆஸ்திரியா இணைந்தது - கி.பி.1908.

* ஆஸ்திரியா நாட்டு பட்டத்து இளவரசர் - பிரான்ஸிஸ் பெர்டினாண்ட்

* அவருக்கு நேர்ந்தது - செர்பிய தீவிரவாத இளைஞன் ஒருவனால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்

* ஆஸ்திரேலியா என்ன செய்தது - ஆஸ்திரியா செர்பியாவிடம் விளக்கம் கேட்டதுபோரின் போக்கு

* முதல் உலகப் போரின் காலம் - கி.பி.1914 – கி.பி 1918

* மைய நாடுகள் - ஜெர்மனியும் அதன் கூட்டணி நாடுகளும், மைய நாடுகள்

* நேச நாடுகள் - இங்கிலாந்தும் அதன் நட்பும் நாடுகளும் நேச நாடுகள்

* போரில் உபயோகபடுத்தப்பட்ட போர் கருவிகள் - பிரங்கிப்படை மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள்சர்வதேச சங்கம்

* சர்வதேச சங்கத்திற்கு முன் தோன்றிய சில சர்வதேச அமைப்புகளின் பெயர்கள் - 1. சர்வதேச சமுதாயம், 2. உலக அமைதி கூட்டமைப்பு, 3. சுதந்திர நாடுகளின் சர்வதேச சங்கம்

* சர்வேத சங்கத்தின் தலைமையகம் - ஜெனிவா

* உறுப்பு நாடுகள் தங்கள் பிரச்சனைகளுக்கான - சர்வதேச சங்கத்தின் மூலம் சுமூகமான முறையில் தீர்த்துக் கொள்ள வேண்டும்

* ஜப்பான் எப்போது மஞ்சூரியாவைக் கைப்பற்றியது - 1931மத்திய இந்தியாவில் பெரும் புரட்சி?

* மத்திய இந்தியாவில் புரட்சியை வழிநடத்திச் சென்றவர் - ஜான்சிராணி இலட்சமிபாய்

* ஜான்சிராணி இலட்சுமிபாய் கைப்பற்றிய நகரம் - குவாலியர்

* இராணி இலட்சுமிபாயின் முடிவு - 1858 ஆண்டு நடந்த போரில் கொல்லப்பட்டார்

* தாந்தியா தோப்பிற்கு நிகழ்ந்தது - கைது செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.பிரம்ம சமாஜம்

* பிரம்ம சமாஜத்தினை நிறுவியவர் - இராஜராம் மோகனராய்

* இராஜராம் மோகனராய் பயின்ற மொழிகள் - அரபிக், சமஸ்கிருதம், பாரசீகம், ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தின், கிரேக்கம், மற்றும் ஹீப்ரு

* இராஜராம் மோகனராய் எழுதிய புத்தகங்கள் - ஏசு கிறிஸ்துவின் கட்டளைகள், அமைதிக்கும் மகிழ்ச்சிக்கும் வழி

* பிரம்ம சமாஜத்தின் நம்பிக்கை - ஒரே கடவுள், பொது சமயத்தில் நம்பிக்கை8. ஆரிய சமாஜம்

* சுவாமி தயானந்த சரஸ்வதியின் இயற்பெயர் - மூல்சங்கர்

* சுவாமி சரஸ்வதியின் குரு - சுவாமி விராஜனந்தா

* வாமி தயானந்த சரஸ்வதியின் கொள்கை - வேதங்களை நோக்கிச் செல்

* ஆரிய சமாஜம் எதனை ஆதரித்தது - பெண்கல்வி, கலப்பு மணம், சம்பந்தி உணவு முறை, பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம். ஆகியவற்றை ஆதரித்தது.பிரம்ம ஞான சபை

* பிரம்மஞான சபையை நிறுவியவர் - மேடம் பிளாவட்ஸ்கி மற்றும் ஹென்றி எஸ் ஆல்காட்.

* பிரம்மஞானசபை நிறுவப்பட்டது ஏன் ? - கடவுள் பக்தி மற்றும் உண்மை அறிவைப் இச்சபை நிறுவப்பட்டது

* 1893-ம் ஆண்டு பிரம்மஞான சபையின் தலைவர் - திருமதி. அன்னிபெசன்ட்

* பிரம்மஞானசபையின் தலைமையகம் - சென்னையில் உள்ள அடையார்இராமகிருஷ்ண மடம்

* இராமகிருஷ்ண பரமஹம்சர் என்பர் யார்?

கோவில் அர்ச்சகர்

* இராமகிருஷ்ண மடத்தை நிறுவியது யார் ?

சுவாமி விவேகானந்தர்

* உலக சமயமாநாடு எங்கு, எப்பொழுது நடைபெற்றது ?

1893-ம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில்

* உலக சமய மாநாட்டில் இந்து சமயத்தின் பிரதிநிதியாக கலந்து கொண்டவர் யார் ?

சுவாமி விவேகானந்தர்டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்

* தலித்துக்கள் மற்றும் தாழ்த்துப்பட்டோர்களின் மீட்பாளர் யார் ?

டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்

* இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார் ?

டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்

* இந்திய அரசாங்கத்தால் இவர் எவ்வாறு சிறப்பிக்கப்பட்டார்

1990-ல் மிகப் பெரிய விருதான பாரத ரத்னா விருது மூலம் சிறப்பிக்கப்பட்டது

* மும்பையில் மகத் மார்ச் என்ற பேரணியை தலைமை ஏற்று நடத்தியது ஏன்?

தீண்டத்தகாத மக்களுக்காக பொது குளத்தில் குடிநீர் எடுக்கும் உரிமையை பெற மும்பையில் மகத் மார்ச் என்ற பேரணியை நடத்தினார்.ஏகாதிபத்தியம் ஏற்படக் காரணங்கள்

* 1.தொழிற்புரட்சி:

தொழிற்புரட்சி காரணமாக உற்பத்தி அதிகரிப்பு.

ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளை சந்தை மற்றும் மூலப்பொருளுக்காகப் பயன்படுத்துவது.

* 2. தேசியப் பாதுகாப்பு:

நாட்டின் செல்வத்தை அயல்நாட்டில் முதலீடு செய்வது. பாதுகாப்பிற்க்காக அந்த நாடுகளை கட்டுப்பாட்டில் கொண்டு வருவது.

* 3. தேசிய மயமாக்கல்:

வளர்ச்சி குன்றிய நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்துவது கருப்பின மக்களுக்கு நாகரிகம் கற்று தருவது தங்களின் பெருமை எனக் கருதுவது.

* 4. சமநிலை ஆதிக்கம்:

சமநிலை ஆதிக்கம் பெற அண்டை நாடுகளுக்கு இணையாக குடியேற்ற நாடுகளை ஏற்படுத்த முயல்வது.

* 5. புதிய வழித்தடங்கள் கண்டுபிடிப்பு:

குடியேற்ற நாடுகளின் செல்வத்தை சுரண்ட உதவியது.முசோலிளியின் தலைமையில் பாசிசம் படைத்த சாதனைகள்

* சிறந்த தலைவர்.

* இத்தாலியை வலிமை பொருந்திய நாடாக மாற்ற முயன்றார்

* அமைதி மற்றும் ஒழுங்கை நிலைநாட்டினார்

* தொழில் பட்டயம் தொழிலாளர்களின் நலனுக்காக வெளியிடப்பட்டது

* பொருள் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை திறமையான நிர்வாகி

* 1929-ல் போப்புடன் லேட்டரன் உடன்படிக்கை. போப் அரசரின் மேலாண்மையை அங்கீகரித்தார்.இரண்டாம் உலகப்போரின் விளைவுகள்

* 50 மில்லியன் மக்கள் இறப்பு

* இத்தாலி ஜெர்மனியில் சர்வாதிகார ஆட்சி முடிவு

* போரில் அமெரிக்கா ஜப்பானைக் கைப்பற்றியது

* அமெரிக்கா, ரஷ்யா உலகில் முதல் தர நாடுகளாக உருவாதல்

* ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் சுதந்திரப் போராட்டம் தொடக்கம்

* ஏகாதிபத்திய கொள்கை கைவிடப்பட்டது.

* அமைதி மற்றும் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்தப்பட்டதுபிரம்ம சமாஜம்

* இராஜாராம் மோகன்ராய் பிரம்ம சமாஜத்தை தோற்றிவித்தார்.

* பல மொழிகளை அறிந்தவர்.

* பல நூல்களை எழுதியவர் முகாலாய மன்னரால் இராஜா என்ற பட்டத்தை பெற்றவர்.

* இவர் சமுதாயத்தில் காணப்பட்ட பல்வேறு மூடப்பழக்க வழக்கங்களை நீக்க பாடுபட்டார்.

* கடவுள் ஒருவரே என்ற கொள்கை, ஆடம்பர சடங்கு, உருவ வழிபாடு, தீண்டாமை மற்றும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழித்தார்.1920 - 1922 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தின் படிநிலை

* முதல்நிலை: ஆங்கில அரசிடம் இருந்து பெற்ற பதவி, பட்டம், விருது துறப்பு.

* இரண்டாம் நிலை: அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், சட்டமன்ற நடவடிக்கை புறக்கணிப்பு.

* மூன்றாம் நிலை: வரி செலுத்த மறுப்பது.நீதிக்கட்சியில் தோற்றம் மற்றும் சாதனைகள்

* தோற்றம்: 1916 ஆம் ஆண்டு டி.எம். நாயர் மற்றும் தியாகராய செட்டியாரால் தோற்றுவிப்பு.

* 1920 தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பு.

* திரு. சுப்பராயலு, திரு.டி.எம். சிவஞானம்பிள்ளை தலைமையில் ஆட்சி பிறகு ப. முனிசாமி நாயுடு தலைமையில் ஆட்சி.

சாதனை:

* சாதி அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கிராமங்கள் முன்னேற்றம் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையை உயர்த்தியது.

உயர்க்கல்வி நிறுவனங்களை நெறிப்படுத்துவது.

* ஆந்திரா, அண்ணாமலை பல்கலைக்கழகம் தொடங்குதல் பெண்களுக்கு வாக்குரிமை, தேவதாசி முறைஒழிப்பு, வன்கொடுமை தடைச்சட்டம், இயற்றுதல், இலவச

வீட்டுமனைத் திட்டம், இலவச மதிய உணவுத் திட்டம்

* 1944ல் சேலத்தில் நடந்த மாநாட்டில் பெரியார் நீதிக்கட்சியை திராவிடர் கழகம் என பெயர் மாற்றினார்.1900 – 1920

1905 – வங்காளப் பிரிவினை

1906 – முஸ்லீம் லீக் தோற்றம்

1914 – முதல் உலகப்போரின் துவக்கம்

1918 – முதல் உலகப்போரின் முடிவு

1919 – ஜாலியன் வாலாபாக் படுகொலை

1920 – ஒத்துழையாமை இயக்கம்1920 – 1930

1920 – கிலாபத் இயக்கம்

1922 – சௌரி சௌரா இயக்கம்

1930 – தண்டி யாத்திரை

1927 – சைமன் குழு வருகை

1923 – சுயராஜ்ஜியக் கட்சியின் தோற்றம்1930 – 1940

1930 - முதல் வட்டமேசை மாநாடு

1931 - இரண்டாம் வட்டமேசை மாநாடு

1932 - மூன்றாம் வட்டமேசை மாநாடு

1935 - இந்திய அரசு சட்டம்

1939 - இரண்டாம் உலகப்போரின் தொடக்கம்

1940 - ஆகஸ்டு நன்கொடை1940 – 1950

1942 - வெள்ளையனே வெளியேறு இயக்கம்

1945 - இரண்டாம் உலகப்போர் முடிவு

1946 - இடைக்கால அரசு அமைப்பு

1947 - இந்தியா சுதந்திரம் அடைதல்

1950 - இந்தியா குடியரசு ஆகுதல்
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment