TET - அறிவியல் பகுதிக்கான தகுதி தேர்வு வினாக்கள்

* 2010-ம் ஆண்டில் தற்போதைய மக்கள் தொகை தோராயமாக 1,192,196,919 (1.19 பில்லியன்)

* 1991 - 2001 இடைப்பட்ட பத்தாண்டில் இந்திய மக்கள் தொகை வளர்ச்சிப் பெருக்கம் சுமார் - 21.34 சதவிகிதம்.


* மனிதர்கள் தம் தேவைகளுக்காக தாவரங்கள் மற்றும் விலங்குகளை வளர்ப்பது குறித்து படிக்கும் அறிவியல் பிரிவிற்கு வேளாண்மை என்று பெயர்.

* உலகிலேயே மிகவும் நீளமான பாசனகால்வாய் துர்க்மேனிஸ்தானிலுள்ள காராகும் (1300கிமீ)

* நீரைத் தேக்கி வைப்பதில் இந்தியாவிலேயே மிகப்பெரியது பரப்பிகுளம் ஆழியார் நீர்த்தேக்கமாகும்.

* உலகில் உள்ள முதல் பத்து மிகப்பெரிய நீர்தேக்கங்களில் ஒன்று இந்தியாவில் உள்ள பரப்பிகுளம் ஆழியார் நீர்த்தேக்கமாகும்.

* இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கால்வாய்களுள் ஒன்று இந்திராகாந்தி கால்வாய்

* இந்திராகாந்தி கால்வாய் தொடங்கும் இடம் சுல்தான்பூர் எனும் ஊரிலுள்ள ஹரிகே பாரேஜ்

* பூஞ்சை மற்றும் பாக்டீரியம் போன்ற நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி களைத் தாவரங்களை அழித்தலுக்கு உயிர்களைக் கொல்லிகள் என்று பெயர்.

* தமிழக அரசு உழவர் சந்தை என்னும் அமைப்பை உருவாக்கி குறுநில விவசாயிகள் மற்றும் நுகர்வோரின் தேவையை நிறைவேற்றி வருகிறது.

* நீர்பாசன முறைகள்:

1. பாரம்பரிய முறை (கப்பி முறை, சங்கிலி சுழற்சி முறை, ஏற்றம் முறை)

2. நவீன நீர்பாசன முறைகள்

அ. கால்வாய்ப் பாசனம் 

ஆ. தேக்கு நீர் பாசனம் எ.கா: நெல் வயல்

இ. தெளிப்பு நீர் பாசனம் எ.கா: புல் தரை

ஈ. சொட்டு நீர் பாசனம் எ.கா: திராட்சை, வாழை, கத்தரி

* நீண்ட நேரம் ஈரத்தன்மையை தக்க வைத்துக்கொள்ள இயலாத மண் வகைகள் கொண்ட நிலத்தில் பயன்படுத்தும் நீர் பாசன முறை - தெளிப்பு நீர் பாசனம்

* மழை குறைவாக கிடைக்கும் இடங்களில் பயன்படுத்தப்படும் நீர் பாசன முறை - சொட்டு நீர் பாசனம்

* வயலானது நீரால் முழுமையாக நிரப்பப்படும் நீர் பாசன முறை - தேக்கு நீர் பாசனம்

* வயல் வெளிகளில் பயிர் வரிசைகளுக்கிடையேயுள்ள உழவுக்கால்(சால்) மூலமாக நீர் பாய்ச்சப்படும் நீர்பாசன முறை கால்வாய்ப் பாசனம்.

* அடோலஸன்ஸ் (வளரிளம் பருவம்) என்கிற சொல் இலத்தீன் மொழியான அடொலஸ்ரே (வளர்ச்சி) என்னும் சொல்லில் இருந்து வந்தது.

* உலக சுகாதார அமைப்பு 11-19 வயது வரையுள்ள பருவத்தை விடலைப் பருவம் என்று கூறுகிறது.

* இனப்பெருக்க உறுப்புகள் வளர்ச்சி அடைவதை பருவமடைதல் என்கிறோம்.

* இனப்பெருக்க உறுப்புகளி்ன் வளர்ச்சி ஆண்களுக்கு 14 முதல் 15 வயதிலும், பெண்களுக்கு 11 முதல் 12 வயதிலும் முதிர்ச்சியடைகிறது.

* குரல் வளை ஆடம்ஸ் ஆப்பிள் என்று கூறப்படுகிறது.

* சுரப்பி என்பதன் பொருள் ஏதாவது ஒன்றைச் சுரத்தல் ஆகும்.

* நம்மிடம் உள்ள நாளமில்லாச் சுரப்பிகள்: 1. பிட்யூட்டரி 2. தைராய்டு 3. கணையம் 4. அட்ரீனல் 5. விந்தகம்(ஆண்) 6.அண்டகச் சுரப்பி(பெண்)

* தலைமை சுரப்பி என்று அழைக்கப்படுவது - பிட்யூட்டரி சுரப்பி

* உடலில் உள்ள அனைத்து நாளமில்லாச் சுரப்பிகளையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பிட்யூட்டரி சுரப்பி

* பிட்யூட்டரி சுரப்பி சில நேரங்களில் வயது முதிர்ந்தவுடன் அதிகமாக சுரந்தால் அதனை அக்ரோ மெகாலி

* மூளையின் கீழ் பாகத்தில் பிட்யூட்டரி அமைந்துள்ளது.

* தொண்டை பகுதியின் இரு புறங்களிலும் அமைந்துள்ள சுரப்பி தைராய்டு சுரப்பி

* வளர்ச்சி, சுவாசம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது தைராய்டு சுரப்பி

* குழந்தைகளுக்கு தைராக்ஸின் சுரப்பி குறைவாக சுரப்பதால் ஏற்படும் நோய் - கிரிடினிஸம்.

* நாளமுள்ள மற்றும் நாளமில்லாச் சுரப்பித் தன்மைகளை உடையது கணையம்

* இன்சுலின் குறைபாட்டினால் வரும் நோய் நீரிழிவு நோய்

* இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுபடுத்தும் ஹார்மோன்கள் குளுக்கான், இன்சுலின்

* விந்தகம் டெஸ்டோஸ்டீரோன் என்கிற ஹார்மோனையும், ்ண்டகம் ஈஸ்டிரோஜன் என்கிற ஹார்மோனையும் சுரக்கிறது.

* தைராய்டு சுரப்பி சார்ந்த நோய்களைத் தடுக்க உதவுவது அயோடின்

* இரும்புச் சத்துக் குறைவினால் ஏற்படும் நோய் அனீமியா.

* 80 விழுக்காடு புற்றுநோய் புகைத்தலால் வருபவை

* ஒர் உயிருள்ள நொதிகள் நிறைந்த, குறைவான கலோரிகளையுடைய இயற்கை உணவு முளைப்பயிர்

* சாதாரணமாக செல்கள் ஒர் ஒழுங்கான முறையில் பிரிந்து வளர்ந்து பின் ிறக்கும் சுழற்சி முறைக்கு அபோப்டாசிஸ் என்று பெயர்.

* ஒவ்வொரு சிகரெட்டும் புகைக்கும் போதும், அதிலுள்ள நிகோடின், அம்மோனியா, அசிட்டோன், ஃபார்மால்டிஹைடு, நைட்ரஜன் சயனைடும் மேலும் 400 வேதிப்பொருள்கள்

* மரணத்தை விளைவிக்கக் கூடிய திடீர் மாற்றக் காரணிகளாகவும் 40 வகையான புற்றுநோய்க்கு காரணிகளாகவும் அமைகிறது.

* நம் உடலில் எல்லா இயக்கங்களும் தசைகளின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளே ஆகும்.

* எலும்பின் மையத்தில் எடைக்குறைவானதும் மிருதுவானதுமான உறிஞ்சும் தன்மையுள்ள கடற்பஞ்டு போன்ற பொருள் எலும்பு மஞ்சை எனப்படும்.

* மூட்டுகளின் இரு வகைகள் அசையும் மூட்டு, அசையா மூட்டு

* மூட்டுகளின் இணைப்பு வகைகள் 1. நாரிணைப்பு மூட்டுகள் 2. குருத்தெலும்பு மூட்டுகள், 3. திரவ மூட்டுகள்(சினோவியல் மூட்டுகள்)

சில திரவ மூட்டுகள்:

1. பந்து கிண்ண மூட்டு எ.கா: தோள் பட்டை, இடுப்பு எலும்புகள்

2. கீழ் மூட்டு எ.கா: முழங்கால், முழங்கை

3. வழுக்கு மூட்டு எ.கா: கணுக்கால் எலும்பு, உள்ளங்கை எலும்பு, தோள்பட்டை எலும்பு, மார்பெலும்பு

4. முளை மூட்டு எ.கா: முதல் மற்றும் இரண்டாவது கழுத்து முள் எலும்புகள்

* மனித எலும்பு கூட்டில் 206 எலும்புகள் உள்ளன.

* மனிதனில் காணப்படக்கூடிய மிக நீளமான எலும்பு தொடை எலும்பு

* சராசரி மனிதனின் தொடை எலும்பின் நீளம் 45 செமீ

* நம் உடம்பில் காணப்படக்கூடிய மிகச் சிறிய எலும்பு நடு காதில் உள்ள அங்கவடி எலும்பாகும்.

* கழுத்துப் பகுதியிலுள்ள முள்ளெம்புகளின் எண்ணிக்கை - 7

* மார்புப் பகுதியிலுள்ள முள்ளெலும்புகளின் எண்ணிக்கை - 12
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment