விண்வெளியில் புதிய நட்சத்திர மண்டலம் கண்டுபிடிப்பு

விண்வெளியில் புதிதாக ஒரு நட்சத்திர மண்டலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சிறிய நட்சத்திர மண்டலத்தில், சுமார் 1000 நட்சத்திரங்கள் உள்ளதாக தெரிகிறது.

விண்வெளியில் ஒரு அபூர்வ, சிறிய நட்சத்திர மண்டலத்தை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த நட்சத்திர மண்டலத்தை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்களில் இந்திட ஆராய்ச்சியாளரும் ஒருவர். 

அமெரிக்க - ஹவாய் தீவு வி.எம். கெக் ஆய்வுக்கூடத்தில் பொருத்தப்பட்டுள்ள உலகின் அதி நவீன சக்திவாய்ந்த டெலெஸ்கோப் மூலம் இந்த நட்சத்திர மண்டலத்தை கண்ட ஆராய்ச்சியாளர்கள், இந்த நட்சத்திர மண்டலத்தில் சுமார் 1000 நட்சத்திரங்கள் உள்ளதாக தெரிவத்துள்ளனர்.

இந்த மந்தமான குள்ள நட்சத்திர மண்டலத்திற்கு சேகு-2 என்று பெயரிட்டுள்ள விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், பால் வீதியில் இதுபோன்று குள்ள நட்சத்திர மண்டலம் இருப்பதாக முன்னரே கணித்து சொல்லப்பட்டுள்ளதால், அதை கண்டுபிடிப்பதற்காக பல வருடங்களாக கண்காணித்து, தேடி தற்போது இதில் வெற்றி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment