எச்.ஐ.வி நோய்க்கு புதிய மருத்துவ முறை

எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பான வழிகாட்டு முறைகளை உலக சுகாதாரக் மையம் அறிமுகபடுத்தியுள்ளது.
மேலும், தற்போதைய கணக்கெடுப்பின்படி 1 கோடி பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என ஐ.நா சபை தெரிவித்துள்ளது. 

எய்ட்ஸ் நோயால் ஏற்படக்கூடிய லட்சக்கணக்கான உயிரிழப்புகளைத் தவிர்க்க மருந்து ஒட்கொள்ளும் முறைகளை சற்று முன்னதாகவே துவங்குவதால், நோயின் தீவிரம் சற்றே குறையும் எனத் தெரிகிறது.

அதன்படி, எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டு, நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படுவதற்கு முன்பாகவே மூன்று மருந்துகளை ஒன்றாக சேர்த்துச் செய்த ஒரு மருந்து பாதிக்கப்பட்டவர்கள் உபயோகிக்க வேண்டுமென உலக சுகாதாரக மையம் பரிந்துரைக்கிறது.

இதனை பின்பற்றும்போது, எய்ட்ஸ் நோய் தாக்கம் வருவதைத் தள்ளிப்போட மருந்து சாப்பிடுகின்ற நபர்களின் எண்ணிக்கையை ஒரு கோடியே அறுபது லட்சத்திலிருந்து இரண்டு கோடியே அறுபது லட்சமாக இந்த புதிய மருத்துவ முறை அதிகரிக்கும்.

மலேஷியாவில் ஆரம்பிக்கும் உலக எய்ட்ஸ் மாநாட்டில் இந்த புதிய மருத்துவ முறைக்கான பிரச்சாரம் ஆரம்பிக்கும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், கடந்த 32 ஆண்டுகளாக பரவி வரும் எச்.ஐ.வி தொற்றினால், கடந்த 2011 ஆம் ஆண்டு உலக அளவில் எய்ட்ஸ் நோய் பாதித்தவர்களில் 70 சதவீதம் பேர் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. 

மேலும், தற்போதைய கணக்கெடுப்பின்படி 1 கோடி பேர் எய்ட்ஸ் நோயால் பதிக்கபட்டுள்ளர்கள் என்பதும் வருகிற 2025 ஆம் ஆண்டுக்குள் 65 லட்சம் பேர் எச்.ஐ.வி தொற்றினால் ஏற்படும் எய்ட்ஸ் நோயால் மரணம் அடைவர். அல்லது பாதிக்கப்படுவர் என்பதும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment