இனி ஸ்மார்ட்போன் மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம்

பாஸ்போர்ட் தேவைப்படுபவர்கள் இனி ஸ்மார்ட்போன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான வசதி விரைவில் அறிமுகம் ஆகிறது.

இதுகுறித்து பாஸ்போர்ட் சேவா திட்டத்தின்
இணை செயலாளர் மற்றும் தலைமை பாஸ்போர்ட் அதிகாரி முக்தேஷ் குமார் கூறியதாவது:

பாஸ்போர்ட் தேவைப்படுபவர்கள் ஸ்மார்ட்போன் மூலம் விண்ணப்பிக்கும் வசதி விரைவில் வருகிறது. அதன்படி, ஸ்மார்ட்போன்களில் உள்ள எம்,பாஸ்போர்ட் சேவா அப்ளிகேஷனை பயன்படுத்தலாம். இதில் அப்ளிகேஷனில் சென்று விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விவரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இந்த வசதி ஓரிரு மாதங்களில் அறிமுகமாகிவிடும்.

எம்,பாஸ்போர்ட் சேவா என்ற ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷனை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்தது. இந்த அப்ளிகேஷன் தேவைப்படுபவர்கள் www.passportindia.eov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்யலாம்.

கடந்த ஆண்டில் 74 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. இந்த ஆண்டில் அது 85 லட்சமாக உயரும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் 75 லட்சம் பாஸ்போர்ட்கள், இந்தியாவில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்கள் மூலமும், வெளிநாடுகளில் உள்ள தூதரகங்கள், துணைத் தூதரங்கள் மூலம் 11 முதல் 12 லட்சம் பாஸ்போர்ட்களும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்திலேயே 37 லட்சம் பேருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment