ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இணையான கல்வித்தகுதி கொண்ட பட்டப்படிப்புகள்

பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வில், எந்தெந்த இளநிலை பட்டப்படிப்புகள் தகுதியானவை என்பது குறித்து
ஆசிரியர்களிடையே குழப்பமான சூழலே நிலவி வருகிறது. இந்நிலையில், பட்டதாரி ஆசிரியர்
தகுதித் தேர்வுக்கு, இளநிலை பட்டப் படிப்புகளுக்கு இணையான கல்வித் தகுதிகளைக் கொண்ட பட்டப்படிப்புகளின் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

தமிழ்: பி.ஏ. தமிழ், பி.ஏ. பயன்பாட்டுத் தமிழ் -  திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், பி.ஏ. தமிழ் மற்றும் கணினிப் பயன்பாடு - நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.

ஆங்கிலம்: பி.ஏ. ஆங்கிலம்,  பி.ஏ. கம்யூனிக்கேஷன் இங்கிலீஷ் - மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பி.ஏ. ஆங்கிலம் மற்றும் கணினிப் பயன்பாடு, பி.ஏ. ஃபங்ஷனல் இங்கிலீஷ், பி.ஏ. சிறப்பு ஆங்கிலம், பி.ஏ. ஆங்கிலம் மற்றும் தொழிற்கல்வி - காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம்.

கணிதம்: பி.எஸ்சி. கணிதம்,  பி.எஸ்சி. புள்ளியியல், பி.எஸ்சி. கணிதம் மற்றும் கணினிப் பயன்பாடு - பாரதிதாசன் பல்கலைக்கழகம்.

இயற்பியல்: பி.எஸ்சி. இயற்பியல்,  பி.எஸ்சி. இண்டஸ்ட்ரியல் எலெக்ட்ரானிக்ஸ் - பாரதிதாசன் பல்கலைக்கழகம் (பி.எட். படிப்பில் இயற்பியல் படித்திருக்க வேண்டியது கட்டாயம்), பி.எஸ்சி. இயற்பியல் மற்றும் கணினிப் பயன்பாடு - பாரதியார் பல்கலைக்கழகம், பி.எஸ்சி. இயற்பியல் (இன்ஸ்ட்ருமென்டேஷன் டிப்ளமோ கட்டாயம்)  -பாரதியார் பல்கலைக்கழகம்.

தாவரவியல்: பி.எஸ்சி. தாவரவியல், ஒருங்கிணைந்த 5 ஆண்டு எம்.எஸ்சி, லைஃப் சயின்ஸ் பட்டம் (பிளான்ட் சயின்ஸ், மைக்ரோ-பயாலஜி, பயோ-டெக்னாலஜி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று சிறப்புப் பாடம்)  - பாரதிதாசன் பல்கலைக்கழகம், பி.எஸ்சி. பிளான்ட் பயோ-டெக்னாலஜி - சென்னை பல்கலைக்கழகம், பி.எஸ்சி. சுற்றுச்சூழல் உயிரியல் - மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பி.எஸ்சி. பிளான்ட் பயாலஜி, பயோ-டெக்னாலஜி  - பாரதியார் பல்கலைக்கழகம்.

விலங்கியல்: பி.எஸ்சி. விலங்கியல், ஒருங்கிணைந்த 5 ஆண்டு எம்.எஸ்சி. லைஃப் சயின்ஸ் பட்டம் (அனிமல் சயின்ஸ் சிறப்புப் பாடம்)  - பாரதிதாசன் பல்கலைக்கழகம், பி.எஸ்சி., சுற்றுச்சூழல் விலங்கியல் - சென்னை பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம்.

வரலாறு: பி.ஏ. வரலாறு, பி.ஏ. வரலாறு மற்றும் சுற்றுலா - பாரதியார் பல்கலைக்கழகம்.

மாநகராட்சிப் பள்ளிகளில் மனநல ஆலோசகர் பணி

சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் மன உளைச்சலைக் குறைக்கும் வகையில், மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
சென்னை மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் குடும்ப மற்றும் சமூகப் பிரச்சினைகளால் உடல் மற்றும் மன ரீதியில் பாதிக்கப்படும் மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்கப்படுகிறது. அந்த மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கி, அவர்கள் உளைச்சலில் இருந்து விடுபட உதவும் வகையில், ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு மன நல ஆலோசகர் வீதம் நியமிக்கப்படுவார்கள்.  இப்பணிக்கு எம்.ஏ. சைக்காலஜி மற்றும் எம்.எஸ்சி. சைக்காலஜி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை ஜூன் 30-ஆம் தேதிக்குள் சென்னை மாநகராட்சிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: கல்வி அதிகாரி, சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகை, ஈ.வி.ஆர். சாலை, சென்னை - 600 003
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment