TET - அறிவியல் பகுதிக்கான தகுதி தேர்வு வினாக்கள் 8

*  பாக்டீரியங்களின் செல்சுவர் எதனால் ஆக்கப்பட்டது - பெப்டோகிளைக்கான்

*  செல்சுவரைச் சுற்றியுள்ள தடித்த உறையின் பெயர் - கேப்சூல்


*  பாலைப் புளிக்கச் செய்து தயிராக மாற்றும் பாக்டீரியா - லேக்டோபேசில்லஸ்

*  தோசை, இட்லி மாவைப் புளிக்கச் செய்து சுவை தரும் பாக்டீரியா - லுக்கோநாஸ்டாக்

*  பாக்டீரியங்கள் வடிவத்தின் அடிப்படையிலும், கசையிழைகளின் அடிப்படையிலும் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன - நான்கு

*  பாக்டீரியாவினால் எலுமிச்சையில் ஏற்படும் நோய் - கேன்கூர் நோய்

*  பாக்டீரியாவினால் உருளையில் ஏற்படும் நோய் - வளைய அழுகல் நோய்

*  பாக்டீரியாவினால் ஆப்பிளில் ஏற்படும் நோய் -  தீ வெப்ப நோய்

*  பாக்டீரியாவினால் தக்காளியில் ஏற்படும் - வாடல் நோய்

*  ஒரு செல் தாவரங்கள் மற்றும் விலங்குகள் அடங்கிய குழுமம் - புரோட்டிஸ்டா

*  சீலியாக்களைக் கொண்ட பாரமீசியம் - சீயோபோரா வகையைச் சார்ந்தது.

*  கசையிழைகளைக் கொண்ட யூக்ளினா - மாஸ்டிக்கோபோரா வகையைச் சார்ந்தது.

*  போலிக்கால்களைக் கொண்ட அமீபா சார்க்கோடைனா வகையைச் சார்ந்தது.

*  ல்போர்கள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் பிளாஸ்மோடியம் - ஸ்போரோசோவா வகையைச் சார்ந்தது.

*  மலேரியா நோயைப் பரப்பும் பிளாஸ்மோடியத்தின் முக்கியக் கடத்தியாக செயல்படுவது - பெண் அனோபீலஸ் கொசு

*  குளிர் மற்றும் நடுக்கம் அதைத் தொடர்ந்து காய்ச்சல், கடுமையான தலைவலி போன்றவை மலேரியா நோயின் அறிகுறிகள் ஆகும்.

*  ஒரு செல்லாக உயிர் வாழ்கிற நுண்பாசிக்கு உதாரணம் - கிளாமிடோமோனஸ்

*  பெனிசியம், ஈஸ்ட் போன்ற பூஞ்சைகள் - ஆஸ்கோமைசீட்ஸ் பிரிவைச் சார்ந்தவை.

*  மருந்துகளின் ராணி - பெனிசிலின்

*  ரொட்டி தயாரிக்கப் பயன்படும் பூஞ்சை - ஈஸ்ட்

*  நொதித்தல் முறையில் ஆல்கஹால் தயாரிக்கப் பயன்படும் பூஞ்சை - ஈஸ்ட்

*  உலகில் ஏறக்குறைய எத்தனை வகை தாவர இனங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது - 4 லட்சம் இனங்கள்

*  பூவாத் தாவரங்களின் மறு பெயர் - கிரிப்டோகேம்கள்

*  பூக்கும் தாவரங்களின் மறு பெயர் - ஃபெனரோகேம்கள்

*  என்டிரோமார்ஃபா எனும் பாசியில் உள்ள சேமிப்பு உணவுப் பொருள் - ஸ்டார்ச்

*  கடல் களைகள் எனப்படும் பாசியின் பெயர் - சர்காசம்

*  சர்காசத்தில் காணப்படும் நிறமியின் பெயர் - பைக்கோசேந்தின்

*  சர்காசத்தில் காணப்படும் சேமிப்பு உணவு - லேமினேரியன் ஸ்டார்ச்

*  கிரினெல்லா என்ற சிவப்பு பாசியில் காணப்படும் நிறமி - பைக்கோ எரித்ரின்.

*  கிரினெல்லாவில் உள்ள சேமிப்பு உணவுப் பொருள் - புளோரிடியன்

*  வாஸ்குலார் திசுவற்ற தாவரங்களுக்கு உதாரணம் - ரிகிசியா, ப்யுனேரியா

*  வாஸ்குலார் திசு உள்ள பூவாத்தாவரங்களுக்கு உதாரணம் - செலாஜினெல்லா, நெப்ஃரோலெப்பிஸ்

*  வாஸ்குலார் திசுக்கள் என்பது - தாவரங்களில் நீர் மற்றும் உணவைக் கடத்தும் திசுக்கள்

*  வேரிலிருந்து நீரை, தண்டு மற்றும் வேருக்குக் கடத்தும் திசு - ஃபுளோயம்

*  ஜிம்னோஸ்பெர்ம் தாவரங்களுக்கு உதாரணம் - சைகஸ், பைனஸ்

*  தாவர உலகில் மிகப்பெரிய பிரிவு - ஆஞ்சியோஸ்பெர்ம்கள்

*  வைரசின் அளவு - 17 நானோமீட்டர் முதல் 300 நானோ மீட்டர் வரை

*  அமராந்தஸ் எவ்வகை தாவரம் - வாஸ்குலார் தாவரம்

*  திறந்த விதையைக் கொண்டவை எவ்வாறு வழங்கப்படுகிறது - ஜிம்னோஸ்பெர்ம்கள்

*  துளையுடலிகளுக்கு உதாரணம் - கடற்பஞ்சு

*  பவள பாறைகளை உருவாக்கும் விலங்குகள் எந்தத் தொகுதியில் காணப்படுகின்றன - குழியுடலிகள் (சீலன்டிரேட்டா)

*  அன்னலிடா தொகுதியில் காணப்படும் சிறப்புப் பண்பு - மூடிய இரத்த ஒட்ட மண்டலம்

*  உழவனின் நண்பன் என அழைக்கப்படுவது - மண்புழு

*  கணுக்காலிகளின் புறச்சட்டகம் எதனால் அமைக்கப்பட்டது - கைட்டின்

*  கணுக்காலிகளின் இரத்தம் ஏன் வெள்ளை நிறமாக உள்ளது - ஈமோகுளோபின் இல்லாததால்

*  ஆக்டோபஸ் என்ற உயிரினம் உள்ள தொகுதி - மெல்லுடலிகள்

*  விலையுயர்ந்த முத்துக்களை உருவாக்கும் முத்துச் சிப்பியினம் இருக்கும் தொகுதி - மெல்லுடலிகள்

*  முட்தோலிகள் எதன் மூலம் இடப்பெயர்ச்சி அடைகின்றன - குழல் கால்கள்

*  பறக்கும் தன்மையற்ற பறவை - ஆஸ்ட்ரிச் எனப்படும் நெருப்புக்கொழி

*  பறக்கும் தன்மையற்ற பாலூட்டி - வெளவால்

*  மனிதனின் விலங்கியல் பெயர் - ஹோமோசேப்பியன்ஸ்

*  ஆந்த்ரோபாலஜி என்பது - மனித இனத்தைப் பற்றிப் படிக்கும் அறிவியல் பிரிவு

*  தாவரங்களின் புறத்தோற்றத்தைப் பற்றி விளக்கும் அறிவியல் பிரிவு - தாவர புற அமைப்பியல்
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment