TET - அறிவியல் பகுதிக்கான தகுதி தேர்வு வினாக்கள் 9

*  வேர்த்தொகுப்பின் இரு வகைகள் - ஆணி வேர்த்தொகுப்பு, சல்லி வேர்த்தொகுப்பு

*  தாவரங்கள் நேர் புவிநாட்டம் கொண்டது - ஆண்வேர்த்தொகுப்பு


*  ஆஞ்சியோஸ்பெர்ம்களில் ஆணிவேர்த்தொகுப்பு இருவித்திலை தாவரத்தின் பண்பாகும்.

*  விதை முளைக்கும்போது முளைவேர் முதன்மை வேராக வருவது - இருவித்திலை தாவரத்தின் வகையாகும்.

*  ஒரு வித்திலைத் தாவரங்களின் சிறப்புப் பண்புகளில் ஒ!ன்று சல்லிவேர்த்தொகுப்பு

*  சல்லி வேர்த்தொகுப்பிற்கு உதாரணம் - சோளம், கரும்பு, நெல்

*  மண் அரிப்பைத் தடுக்க பயன்படுவது - வேர்

*  வேரின் மாற்றுருக்கள் இரண்டு வகைப்படும்.

*  வேரின் மாற்றுருக்கள் - ஆணிவேர் மாற்றுரு, சல்லிவேரின் மாற்றுரு

*  ஆணிவேரின் மாற்றுருக்கு எடுத்துக்காட்டு - கேரட், முள்ளங்கி, பீட்ரூட்

*  கூம்பு போன்று மேற்பகுதி அகன்றும், கீழ்பகுதி குறுகியும் காணப்படும் மாற்றுருக்கு உதாரணம் - கேரட்

*  நேஃபிபார்ம் வேருக்கு உதாரணம் - பீட்ரூட்

*  கதிர் கோல் வடிவ ஆணிவேரின் மாற்றுருக்கு உதாரணம் - முள்ளங்கி

*  தாவரத்தின் பிற பகுதியிலிருந்து வளரும் வேர்களின் பெயர் - வேற்றிட வேர்கள்

*  தூண் வேர்கள் காணப்படும் தாவரம் - ஆலமரம்

*  வேற்றிட வேரின் மாற்றுருக்களின் பணி - தாங்குதல், வளிமண்டல ஈரப்பத்ததை உறிஞ்சுதல்

*  தொற்றுத் தாவரத்திற்கு உதாரணம் - வாண்டா

*  தொற்றுத் தாவர வேர்களில் காணப்படும் பிஞ்சு போன்ற திசுவின் பெயர் - வெலாமன்

*  வெலாமன் திசுவின் பணி - வளிமண்டலத்தில் உள்ள ஈரத்தையும், மழைநீரையும் உறிஞ்சுதல்

*  விதையில் உள்ள முளைக்குறுத்து தண்டாக வளர்கிறது.

*  இலைக்கும் மைய அச்சுக்கும் இடைப்பட்ட கோணம் - இலைக்கேோணம்

*  நேர் ஒளி நாட்டம் உடையது - தண்டு

*  பசுமையான தண்டு எத்தன்மையை பெற்றுள்ளது - உணவு தயாரிக்கும் திறன்

*  பின்னுகொடிக்கு உதாரணம் - அவரை

*  தரையொட்டிய தண்டின் வகைகள் - நான்கு

*  தரையடித் தண்டின் வகைகள் - நான்கு

*  மண் பரப்பிற்குக் கீழே கிடைமட்டமாக வளரும் தண்டு - மட்டநிலத்தண்டு

*  மட்டநிலத்தண்டுக்கு உதாரணம் - இஞ்சி

*  நேர் செங்குத்தாக வளரும் நிலத்தடித் தண்டு - சேனை

*  கந்தம் என்பதற்கு உதாரணம் - சேனை

*  தண்டு கிழங்கிற்கு உதாரணம் - உருளைக்கிழங்கு

*  குழித்தண்டிற்கு உதாரணம் - வெங்காயம்

*  மலரைத் தாங்கிக் கொண்டிருக்கும் உறுப்பின் பெயர் - மலர்க்காம்பு

*  மலரின் வெளியடுக்கின் பெயர் - புல்லி வட்டம்

*  மலர் மொட்டாக இருக்கும்போது மலரைப் பாதுகாப்பது - புல்லி வட்டம்

*  மலரின் இரண்டாம் அடுக்கின் பெயர் - அல்லி வட்டம்

*  மலரின் மூன்றாம் வட்டத்தின் பெயர் - மகரந்தத்தாள் வட்டம்

*  மலரின் நான்காம் வட்டம் - சூலக வட்டம்

*  சூலக வட்டத்தின் மூன்று பாகங்கள் - சூல்பை, சூல்தண்டு, சூலக முடி

*  ஒளிச்சேர்க்கை செய்யக்கூடிய தண்டின் புறவளரி - இலை

*  இலைத்தாளிற்கு வலிமை கொடுப்பதோடு நீரினையும் உணவுப் பொருட்களையும் கட்த்துவது - நரம்பமைவு

*  இலையை தாங்கி நிற்கும் கம்பி போன்ற பகுதியின் பெயர் - இலைக்காம்பு

*  சுவாசித்தல் வேலையைச் செய்யும் தாவர உறுப்பு - இலை

*  நீராவிப்போக்கு நடைபெறும் இடம் - இலை

*  இலையின் உள்ளமைப்பில் நீராவிப்போக்கினைக் கட்டுப்படுத்துவது - கியூட்டிக்கிள்

*  இலையின் மேற்புறத்தோல், கீழ்ப்புறத்தோல் எத்தனை அடுக்கால் ஆனது - ஒரே அடுக்கால்

*  இலைத்துளைகள் இலையின் எப்பகுதியில் காணப்படுகின்றன - இலையின் கீழ்ப்புறத்தோல்

*  இலைத்துளையைச் சூழ்ந்துள்ள செல்களின் பெயர் - காப்புச் செல்கள்

*  இலையில் வாஸ்குலார் கற்றை என்பது - நரம்பு

*  இலை இடைத் திசுவின் இரு பகுதிகள் - பாலிசேடு பாரன்கைமா, ஸ்பாஞ்சி பாரன்கைமா
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment