TET - குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைக்கான வினா விடைகள்

*  வெறுப்பு, தோல்வி உணர்ச்சி, சந்தேகம் போன்ற எதிர்மறை எண்ணங்களின் அடிப்படையில் அமையும் தற்கருத்து - எதிர்மறை தற்கருத்து


*  வெற்றி உணர்வு, அன்பு, நம்பிக்கை போன்ற உணர்வுகளின் அடிப்படையில் அமையும் தற்கருத்து - உடன்பாட்டு தற்கருத்து

*  பிறந்த குழந்தையிடம் காணப்படும் தொடக்க கால உணர்வு - தான் என்னும் தன்னல உணர்வு

*  நாம் என்னும் உணர்வைப் பெறுவது எதன் விளைவு - சமூகவியல்பு பெறுதல்

*  படைப்புச் செயல்களின் சிறந்த வெளிப்பாடு - விளையாட்டு

*  எத்தனை வயது வரை குழந்தைகள் புலன் - இலக்க விளையாட்டுக்களை விரும்புகின்றனர் - 3 வயது

*  எத்தனை வயது வரை கற்பனை விளையாட்டுக்கள் முதன்மை பெறும் - 3 முதல் 6 வயது வரை

*  விளையாட்டுக்களில் போட்டி மனப்பான்மை காணப்படும் வயது  - 6 முதல் 12 வயது வரை

*  கூட்டு விளையாட்டுக்கள் முக்கியத்துவம் பெறும் வயது - 12 வயதுக்கு மேல்

*  ஒருவர் தன்னுடைய நிறை, குறைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளும் நிலையே - தன்னையறிதல்

*  தற்கருத்து வளர்ச்சியைத் தீர்மானிக்கும் காரணிகள் - மரபுநிலை, பெற்றோர் மனப்பாங்கு, பிறப்பு வரிசை, பள்ளிச்சுழல், ஆசிரியர்களின் அணுகுமுறை ஆகியன

*  எரிக்சன் கோட்பாட்டின்படி ஆளுமை வளர்ச்சி நிலையின் இரண்டாம் நிலையில் நிலையாளுமை பெற்றவரின் பண்பு - தன்னாட்சி

*  எரிக்சன் கோட்பாட்டின்படி ஆளுமை வளர்ச்சி நிலையின் நான்காம் நிலையில் நிறையாளுமை பெற்றவரின் பண்பு - கடின உழைப்பு

*  எரிக்சன் கோட்பாட்டின்படி ஆளுமை வளர்ச்சி நிலையின் ஐந்தாம் நிளையில் நிறையாளுமை பெற்றவரின் பண்பு - தன்னிலையறிதல்

*  எரிக்சன் கோட்பாட்டின்படி ஆளுமை வளர்ச்சி நிலையின் ஆறாம் நிலையில் நிறையாளுமை பெற்றவரின் பண்பு - நெருக்கம்

*  எரிக்சன் கோட்பாட்டின்படி ஆளுமை வளர்ச்சி நிலையின் ஏழாம் நிலையில் நிறையாளுமை பெற்றவரின் பண்பு - படைப்பூக்கம்

*  எரிக்சன் கோட்பாட்டின்படி ஆளுமை வளர்ச்சி நிலையின் இறுதி நிலையில் நிறையாளுமை பெற்றவரின் பண்பு - நல்லிணக்கம்

*  எரிக்சன் கோட்பாட்டின்படி ஆளுமை வளர்ச்சி நிலையின் முதல் நிலையில் குறையாளுமை பெற்றவரின் பண்பு - அவநம்பிக்கை

*  எரிக்சன் கோட்பாட்டின்படி ஆளுமை வளர்ச்சி நிலையின் இரண்டாம் நிலையில் குறையாளுமை பெற்றவரின் பண்பு - வெட்கம், சந்தேகம்

*  எரிக்சன் கோட்பாட்டின்படி ஆளுமை வளர்ச்சி நிலையின் மூன்றாம் நிலையில் குறையாளுமை பெற்றவரின் பண்பு - குற்ற உணர்வு

*  எரிக்சன் கோட்பாட்டின்படி ஆளுமை வளர்ச்சி நிலையின் நான்காம் நிலையில் குறையாளுமை பெற்றவரின் பண்பு - தாழ்வுணர்ச்சி

*  எரிக்சன் கோட்பாட்டின்படி ஆளுமை வளர்ச்சி நிலையின் ஐந்தாம் நிலையில் குறையாளுமை பெற்றவரின் பண்பு - தன்னிலை குழப்பம்

*  எரிக்சன் கோட்பாட்டின்படி ஆளுமை வளர்ச்சி நிலையின் ஆறாம் நிலையில் குறையாளுமை பெற்றவரின் பண்பு - தனிமை

*  எரிக்சன் கோட்பாட்டின்படி ஆளுமை வளர்ச்சி நிலையின் ஏழாம் நிலையில் குறையாளுமை பெற்றவரின் பண்பு - தேக்கநிலை

*  எரிக்சன் கோட்பாட்டின்படி ஆளுமை வளர்ச்சி நிலையின் இறுதி நிலையில் குறையாளுமை பெற்றவரின் பண்பு - ஏமாற்றம்

*  எரிக்சன் கோட்பாட்டின்படி ஆளுமை வளர்ச்சி நிலையின் முதல் நிலை - பிறப்பு முதல் ஒராண்டு வரை

*  எரிக்சன் கோட்பாட்டின்படி ஆளுமை வளர்ச்சி நிலையின் இரண்டாம் நிலை - 1-2 ஆண்டுகள்

*  எரிக்சன் கோட்பாட்டின்படி ஆளுமை வளர்ச்சி நிலையின் மூன்றாம் நிலை - 3-5 ஆண்டுகள்

*  எரிக்சன் கோட்பாட்டின்படி ஆளுமை வளர்ச்சி நிலையின் நான்காம் நிலை - 6-ஆம்  ஆண்டு முதல் பால் உறுப்புகள் முதிர்ச்சி பெறும் வரை

*  எரிக்சன் கோட்பாட்டின்படி ஆளுமை வளர்ச்சி நிலையின் ஐந்தாம் நிலை - குமரப்பருவம்

*  எரிக்சன் கோட்பாட்டின்படி ஆளுமை வளர்ச்சி நிலையின் ஆறாம் நிலை - முன் முதிர்பருவம்

*  எரிக்சன் கோட்பாட்டின்படி ஆளுமை வளர்ச்சி நிலையின் ஏழாம் நிலை - நடுமுதிர் பருவம்

*  எரிக்சன் கோட்பாட்டின்படி ஆளுமை வளர்ச்சி நிலையின் எட்டாம் நிலை - பின்முதிர் பருவம்

*  எரிக்சன் கோட்பாட்டின்படி ஆளுமை வளர்ச்சி நிலையின் முதல் நிலையில் குழந்தையின் சமூகச் செல்வாக்கு - தாய் (அ) செவிலியர்

*  எரிக்சன் கோட்பாட்டின்படி ஆளுமை வளர்ச்சி நிலையின் இரண்டாம் நிலையில் குழந்தையின் சமூகச் செல்வாக்கு - பெற்றோர்.

*  எரிக்சன் கோட்பாட்டின்படி ஆளுமை வளர்ச்சி நிலையின் மூன்றாம் நிலையில் குழந்தையின் சமூகச் செல்வாக்கு - ஆதாரக் குடும்பம்

*  எரிக்சன் கோட்பாட்டின்படி ஆளுமை வளர்ச்சி நிலையின் நான்காம் நிலையில் குழந்தையின் சமூகச் செல்வாக்கு - பள்ளஇ மற்றும் சுற்றுப்புறம்

*  எரிக்சன் கோட்பாட்டின்படி ஆளுமை வளர்ச்சி நிலையின் ஐந்தாம்  நிலையில் குழந்தையின் சமூகச் செல்வாக்கு - ஒப்பார் குழு

*  எரிக்சன் கோட்பாட்டின்படி ஆளுமை வளர்ச்சி நிலையின் ஆறாம் நிலையில் குழந்தையின் சமூகச் செல்வாக்கு - நண்பர்கள், பால் தொடர்பு உறுப்பினர்கள்.

*  எரிக்சன் கோட்பாட்டின்படி ஆளுமை வளர்ச்சி நிலையின் இறுதி நிலையின்  - மனித இனம்

*  ஒரு பொருள் அல்லது நிகழ்ச்சி குறித்த மகிழ்வுணர்வு அல்லது வெருப்புணர்ச்சி மேலோங்கிக் காணப்படுவது - மனவெழுச்சி

*  இளம் வயதில் ஒருவருக்கு ஏற்படும் மனவெழுச்சி அதிர்வுகள் ஒருவரின் - ஆளுமை கோளாறுகளுக்கு அடிப்படையாக அமைகிறது.

*  ஒரு ிலக்கை அச்சமும், சினமும் கலந்த சிக்கலான வீணான மனவெழுச்சி - பொறாமை

*  பொறமையின் காரணமாகத் தோன்றும் உடல்நலச் சீர்கேடுகள் - உயர் இரத்த அழுத்தம், ஆஸ்துமா, குடற்புண், நனநலப் பிரச்சனைகள்

*  உண்மை போல் தோன்றக்கூடிய பொய் - அச்சம்

*  மாணவர்களிடம் உணர்வுச் சமநிலையைத் தோற்றுவிக்கும் காரணிகள் - மகிழ்ச்சியான கற்றல் சூழல், அன்பும் பரிவும் கொண்ட ஆசிரியர், நல்ல உணவு, ஒய்வு, கருத்து சுதந்திரம் ஆகியன

*  நடத்தைப் பிறழ்ச்சிகள் ின்றி பிறரோடு இணைந்து போகும் தன்னிணக்கமே - மனநலம்

*  வெற்றி வெற்றியையும், தோல்வி தோல்வியையும் வளர்க்கும் என்பது - நவீன உளவியல் கோட்பாடு

*  தற்கருத்துப் பட்டியலுக்கு உதாரணம் - முத்தாராணி ரஸ்தோகியின் தற்கருத்துப் பட்டியல்

*  தன் சக மனிதனோடு, கனிவோடும், ஒத்திசைவோடும் பயன் தரும் வகையிலும் வாழ்வதற்குத் தேவையான திறன்களைக் கொடுக்க இயலாத கல்வி, கல்வியாக இருக்க முடியாது என்று குறிப்பிடுவது - தேசியக் கலைத்திட்ட வடிவமைப்பு - 2005

*  நவீன கோட்பாடுகளின்படி பள்ளி எனப்படுவது - சமுதாயத்தின் சுருங்கிய இலட்சியப் பதிப்பு

*  சமுதாயத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சமூக நிலையாகத் திகழ்வது - பள்ளி

*  எத்தனை வயது வரை குழளந்தைகள் தனித்தே விளையாட விரும்புவார்கள் - மூன்று வயது வரை

*  கல்வி விளையாட்டுக்கு உதாரணம் - சொற்கோபுரம், வார்த்தை விளையாட்டு

*  ஒருவர் தன்னுடைய நிறை, குறைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளும் நிலையே - தன்னையறிதல்

*  SWOT  என்பதன் விரிவாக்கம் - Strength Weakness Opportunity Threats

*  எரிக்சனின் கூற்றுப்படி ஒவ்வொரு நிலையிலும் ஒருவர் கட்டாயம் கற்ருத் தேர்ந்திருக்க வேண்டிய நடத்தைக் கோலங்கள் - வளர்ச்சிசார் செயல்கள்

*  வளர்ச்சி நிலைகளில் ஏற்படும் சிக்கல்கள் - வளர்ச்சி சார் சிக்கல்கள்

*  உலகில் அனைவரும் அறிந்துகொள்ளக்கூடிய, விரும்பக்கூடிய ஒரே மொழி - அன்பு

*  பிறரது உணர்வுகளையும் மனவெழுச்சிகளையும் நம்முடையதாகக் கொள்ளும் மென்மையான மன உணர்வுகள் - பரிவு அல்லது ஒத்துணர்வு

*  குழந்தையின் இரண்டாவது இல்லம் எனப்படுவது - பள்ளி

*  தன்னையும், பிறரையும் கெடுத்து எப்போதும் துன்பத்தை நீடிக்கச் செய்யும் மன உணர்ச்சி - சினம்

*  ஒரு நாள் கோபம் பல நூற்றாண்டு சிறப்புக்களை அழித்துவிடும்.

*  பிறர் குறித்த கணிப்பின் காரணமாகத் தோன்றும் உணர்வுகள் - சந்தேகம், பயம்

*  அச்சம் அல்லது பயத்தினால் ஏற்படும் ழிளைவுகள் - மனப்பதட்டம், வெட்கம், தாழ்வு மனப்பான்மை

*  நினைப்பதற்கும் நடப்பதற்கும் இடையே காணப்படும் முரண்பாடுகளே கவலைக்கு அடிப்படையாக அமைகிறது.

*  அதிக அளவில் கவலைப்படுவதன் விளைவுகள் - எரிச்சல், தெளிவற்ற மனிநிலை, மாயத்தோற்றம், சுவாச நோய், மனப்போராட்டம் ஆகியன.

*  திறமையின்மை, அச்சம், பிரச்சனை குறித்த விழிப்புணர்வு, பேராசை காரணமாக தனது இயலாமையை உணர்ந்து, நினைத்து வருந்தி அமைதி இழந்து காணப்படும் மனோநிலை - கவலை

*  மாணவர்களிடம் கவலையை ஏற்படுத்தும் காரணிகள் - தொடர் தோல்வி, உடல் தோற்ற குறைபாடுகள், ஏளன வார்த்தைகள், கற்றல் குறைபாடுகள், பிறரின் புறக்கணிப்பு ஆகியன

*  கவலைகளை எத்தனை வழிகளில் சந்திக்கலாம் - இரண்டு

*  கவலைகளைச் சந்திக்கும் இரு வழிகள் - தப்பித்து ஓடுதல், எதிர்த்துப் போராடுதல்

*  அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஆணிவேராக அமைந்திருப்பது - ஆரோக்கியமற்ற உறவுகள், தாழ்வு மனப்பான்மை

*  உடல் வளர்ச்சி வேகமாக நடைபெறும் வயது - பிறப்பு முதல் 2 வயது வரை

*  பிறப்பிற்கு முன்னரும் பிறந்த பின்னர் 3 முதல் 4 ஆண்டுகளுக்கு மிக விரைவாக நடைபெறும் வளர்ச்சி - நரம்பு மண்டல வளர்ச்சி

*  மூளை வளர்ச்சி விரைவாக நடைபெறும் வயது - பிறப்பு முதல் 4 வயது வரை

*  பிறக்கும்பொழுது குழந்தையின் மூளையின் நிறை - சுமார் 350 கிராம்

*  பருவமடைந்த பின்னர் ஒரு மனிதனின் மூளையின் நிறை - 1260 முதல் 1400 கிராம் வரை

*  பிறக்கும் பொழுது கால் மடங்காக உள்ள மூளையின் நிறை ஒன்பதாம் மாதம் அரை மடங்காகிறது.

*  குழந்தையின் 6 வயதில் மூளை 90 சதவீதம் வளர்ச்சியடைகிறது.

*  குழந்தையின் உயரம் பிறக்கும்பொழுது சுமார் - 52 செ.மீ

*  மூளையின் வளர்ச்சி உடலின் எடையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது பிறக்கும் பொழுது எட்டில் ஒரு பங்காக உள்ளது.

*  மூளையின் வளர்ச்சி உடலின் எடையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது பத்தாவது வயதில் பதினெட்டில் ஒரு பங்காக உள்ளது.

*  மூளையின் வளர்ச்சி உடலின் எடையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது 15ம் வயதில் முப்பதில் ஒரு பங்காக உள்ளது.

*  மூளையின் வளர்ச்சி உடலின் எடையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது பருவமடையும் பொழுது நாற்பதில் ஒரு பங்காக உள்ளது.

*  குழந்தையின் உயரம் ஐந்தாவது வயதில் சராசரியாக - 106 செ.மீ இருக்கும்.

*  குழந்தையின் உயரம் ஒன்பதாவது வயதில் ஏறத்தாழ 131 செ.மீ இருக்கும்.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment