TET தேர்வுக்கான கணிதம் வினா விடைகள் 1

* புள்ளி, கோடு, தளம் ஆகிய மூன்றும் சேர்ந்து வடிவியல் எனப்படுகிறது.

* எண்ணிலடங்கா புள்ளிகளின் தொகுப்பை கோடு என்கிறோம்.


* ஒரு கோட்டுத்துண்டில் இரு முடிவுப் புள்ளிகள் உள்ளதால் அதற்கு குறிப்பிட்ட நீளம் உண்டு.

* மூடிய உருவத்தைப் பெற வேண்டும் எனில் குறைந்தபட்சம் 3 கோட்டுத் துண்டுகள் இருக்க வேண்டும்.

* மூன்று கோட்டுத் துண்டுகளால் அடைப்பட்ட (அ) மூடிய உருவத்தை முக்கோணம் என்கிறோம்.

* ஒரு முக்கோணத்தின் இரு பக்க அளவுகளின் கூடுதல் மூன்றாவது பக்கத்தின் நீளத்தை விட அதிகமாக இருக்கும்.

* ஐந்து (அ) ஐந்திற்கு மேற்பட்ட கோட்டுத்துண்டுகளால் உருவாகும் அடைபட்ட உருவத்தினை பலகோணம் என்கிறோம்.

* முப்பரிமான வடிவங்கள் என்பது ஒரு தளத்தில் அடைக்க இயலாத வடிவியல் உருவங்கள் ஆகும்.

* ஒரே சீரான வளைக்கோட்டினால் ஆன மூடிய வடிவம் வட்டம் ஆகும்.

* வடிவங்கள் என்பது சமதள உருவங்கள் ஆகும்.

* 2, 5, 10 ஆகிய எண்களின் வகுபடும் தன்மையைக் காண - கடைசி இலக்கத்தை ஆராய வேண்டும்.

* நான்கு இலக்க மிகப்பெரிய எண் மற்றும் மிகச்சிறிய எண் இவற்றின் கூடுதல் - 10999

* ஒரு உலோகக்கலவையில் 30% தாமிரம், 40% துத்தநாகம், மீதி நிக்கல் உள்ளது எனில் 20 கி.கி உலோகக்கலவையில் உள்ள நிக்கலின் அளவு - 6 கி.கி.

* இராஜூ ரூ.36000 க்கு ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கி அதன் தோற்றப்பொலிவு நன்கு அமையவும், நல்லமுறையில் இயங்கவும் சில பாகங்களைப் பொருத்தி அதனை *

10% இலாபத்திற்கு ரூ.44000 விற்றார் எனில் அவர் செய்த இதர செலவினத் தொகை - 4000

* 6 ஆட்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 10 மணி நேரம் செய்து 24 நாட்களில் முடிப்பர். 9 ஆட்கள் நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்தால் வேலை முடிய

ஆகும் நாட்கள் - 20

* “மூன்று வாங்கினால் ஒன்று இலவசம்” என்ற தள்ளுபடி விற்பனையில் அளிக்கப்படும் தள்ளுபடி சதவீதம் - 33.33

* 68, 75, 70, 62, 75, 71, 69 இவ்விவரங்களுக்கு சராசரி மற்றும் இடைநிலை சமம். சரியா? தவறா? - சரி

* ஒரு தனியார் நிறுவனம் தனது விளம்பர அறிக்கையில் அவர்களது சேவையானது சராசரியாக 99% வாடிக்கையாளர்களால் மிகவும் திருப்திகரமாக உள்ளது என

தெரிவித்துள்ளனர் என அறிவிக்கிறது எனில் அவ்வறிக்கையில் குறிப்பிட்ட மையப்போக்கு அளவு - முகடு

* 10 ஆண்டுகளில் ஜனவரி மாதத்தில் சென்னையில் பெய்த மழையின் அளவு (மி.மீ. ல்) பின்வருமாறு: 0.8, 1.5, 4.2, 0.8, 0.8, 3.2, 2.5, 1.5, 0.2, 4.4 இவ்விவரங்களிலிருந்து *

மிகப்பெரிய மற்றும் மிகச்சிறிய மதிப்பினை நீக்கிவிட்டால் சராசரி மாற்றமடையும் ஆனால் இடைநிலை, முகடு மாறாது. சரியா? தவறா? - சரி

* ஒரு கலனில் 20 லிட்டர் பெட்ரோல் உள்ளது. கசிவின் காரணமாக 3 லிட்டர் பெட்ரோல் வீணாகிறது எனில் கலனில் மீதமுள்ள பெட்ரோல் அளவின் சதவீதம் - 85

* முதல் 20 இயல் எண்களின் வீச்சு - 19

* ஒன்பது கோடியே ஐந்து இலட்சத்து நாற்பத்து ஒன்றின் எண்ணுரு - 9,05,00,041

* பூஜ்ஜியத்தைக் கொண்ட இயல் எண்களின் தொகுப்பு முழு எண்கள் எனப்படும்.

* கூடுதல் காண்க: 13 + 23 + 33 + . . . + 93 ?  - 2025

* 1 முதல் 100 வரையுள்ள பகா எண்களின் எண்ணிக்கை - 25

* 0.245 ஐ பின்ன வடிவில் எழுது? - 245/1000

* இரு எண்களின் பெருக்குத் தொகை 2028, அதன் மீ.பெ.வ 13 எனில் அந்த எண்கள் - 39 மற்றும் 52

* A  என்பவரின் வருமானம் B  என்பவரின் வருமானத்தை விட 10% அதிகம் எனில் B-ன் வருமானம் A-ன் வருமானத்தை விட எத்தனை சதவீதம் குறைவு - 91/11%

* ஒரு எண்ணிலிருந்து 35 ஐ கழிக்க அந்த எண் தன் மதிப்பில் 20% குறைக்கப்படுகிறது. அந்த எண்ணின் 5 ல் 4 மடங்கு என்ன - 140

* ஒரு நகரத்தின் மக்கள் தொகை 1,76,400. மேலும் ஒரு வருடத்திற்கு அம்மக்கள் தொகை 5% உயருகிறது எனில் 2 வருடத்திற்கு முன்பு மக்கள் தொகை - 1,60,000

* A={3, 7, 8, 9}; B={1, 2, 5, 8, 12} எனில் n(A – B) = ? - 3

* X7-2x3y5+3xy4-10xy+11 ன் தலையாய கெழு - 2

* ஓர் எண்ணின் மூன்றில் ஒரு பங்கில் இரண்டில் ஒரு பங்கின் ஐந்தின் ஒரு பங்கு 15 எனில் அந்த எண் - 450

* 2x3-6x2+5ax-9 என்பதை (x-2) ஆல் வகுத்தால் மீதி 13 எனில் a ன் மதிப்பு - 3

* Y=1/y=9 எனில் y3-1/y3 ன் மதிப்பு  - 756

* மொத்தப் புறப்பரப்பு 216 ச.செ.மீ கொண்ட கன சதுரத்தின் பக்க அளவு - 6 செ.மீ.

* உருளையின் ஆரம் 8 செ.மீ. மற்றும் உயரம் 7 செ.மீ. எனில் அதன் மொத்தப் பரப்பு - 240 ச.செ.மீ.

* 3 செ.மீ. ஆரமுள்ள கோளத்தின் வளைபரப்பு - 36π ச.அ.

* ஒரு கோளத்தின் மேற்பரப்பு 100 ச.செ.மீ எனில் அதன் ஆரம் - 5 செ.மீ.

* 17,15,9,13,21,32,42,7,12,10 இடைநிலை - 14

* முகடு காண்க: 72,75,59,62,72,71,75,71,70,70,70 - 70

* முதல் 10 இயல் எண்களின் திட்ட விலக்கம் - 2.87

* கூட்டுசராசரி 48, திட்டவிலக்கம் 12 எனில் மாறுபாட்டுக் கெழு? - 25

* இரு எண்களின் பெருக்கு சராசரி 16, ஒரு எண் 32 எனில் மற்றொரு எண் என்ன? - 8

* லீப் வருடத்தில் 53 வெள்ளிக் கிழமைகள் கிடைக்க நிகழ்தகவு - 2/7

* S என்பது ஒரு சமவாய்ப்பு சோதனையின் கூறுவெளி எனில் P(S)=?  1

* இரண்டு நாணயங்கள் ஒருமுறை சுண்டப்படுகிறது எனில் ஒரு பூ கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன? - 1/2

* ஒரு பகடை ஒரு முறை உருட்டப்படும்போது இரட்டை எண் கிடைக்கப் பெறுவதற்கான நிகழ்தகவு என்ன? - 1/2

* ஒரு குறிப்பிட்ட நாளில் மழை வருவதற்கான நிகழ்தகவு 0.76. அக்குறிப்பிட்ட நாளில் மழை வராமல் இருப்பதற்கான நிகழ்தகவு? - 0.24

* 2006 ஆம் ஆண்டு கணிதக் கருத்துப் பரிமாற்ற மாதிரியை உருவாக்கியவர் யார்? - லிம்

* விடைத்தாளை மதிப்பீடு செய்த பின் மாணவர்களின் ________________ பட்டியல் தயார் செய்ய வேண்டும்? - மதிப்பெண்

* இரு எண்களின் பெருக்குத் தொகை 15 எனில் ஒரு எண் 5 எனில் மற்றொரு எண் _________? 3

* 8 மீ X 5 மீ அளவுள்ள ஓர் அறையின் தரைக்கு சிமெண்ட் பூச ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 7.50 வீதம் என்ன செலவாகும்? - 300

* “கணிதமே கடவுள்” என்று கூறியவர் - வினோபா பாவே

* முதன்முதலில் பூஜ்யத்தை அறிமுகப்படுத்தியவர்கள் - இந்தியர்கள்

* இயல் எண்களின் கணம் - N = {1, 2, 3, ….}

* இரு விகிதமுறு எண்களின் வித்தியாசம் - விகிதமுறு எண்

* ஒரு எண்ணை விகித அடிப்படையில் எழுத முடியுமாயின் அதனை விகிதமுறு எண் எனலாம்.

* நடந்த நிகழ்வுகளை வரிசைக்கிரமமாக பதிவு செய்தல் கால வரிசை எனப்படும்.

* ரயில்வே நேரங்களில் நள்ளிரவு 12 மணியை 24 மணி எனக் குறிப்பிடுகிறோம்.

* ஒரு எண்ணிலிருந்து அதே எண்ணைக் கழித்து அதே எண்ணைக் கூட்டினால் கிடைப்பது - அதே எண்

* கொள்ளளவின் திட்ட அலகு - லிட்டர்

* உலக உருண்டை கோளம் வடிவமுடையது. 

* பல தரப்பட்ட உண்மைகள் மற்றும் தகவல் தொகுப்பினை விவரங்கள் என்கிறோம்.

* லீப் ஆண்டில் பிப்ரவரி மாதத்திற்கு எத்தனை நாட்கள் - 29

* கோடு என்பது புள்ளிகளால் ஆல் ஆனது.

* ஒரு புறம் மட்டும் நீளும் கோட்டை கதிர் எனலாம்.

* பலவிதமான கேள்விகளுக்கு விடைதேடும் கணித ரீதியான முயற்சியே வடிவியல் ஆகும்.

* கோடு என்பது அனைத்து திசைகளிலும் முடிவே இல்லா எல்லைகளைக் கொண்டதாகும்.

* இரு நேர்கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளும் எனில் அது குறுக்குக் கோடுகள்.

* ஒரு தளத்தை அமைக்கத் தேவையான குறைந்தப் பட்சப் புள்ளிகள் - 3

* ஒரே நேர்க்கோட்டில் அமையும் புள்ளிகள் ஒரு கோடமை எனப்படும்.

* இரு நேர்க்கோடுகளுக்கு இடைப்பட்ட கோணம் செங்கோணம் எனில் அவை செங்குத்துக் கோடு கோடுகளாகும்.

* 0.57-ன் மதிப்பு - 26/45

* 11 முடிவுகளின் சராசரி 60, அதில் முதல் 6 முடிவுகளின் சராசரி 58, கடைசி 6 முடிவுகளின் சராசரி 63, எனில் 6 வது முடிவு என்ன - 66

* ஒரு சதுரத்தின் மூலைவிட்டம் 42 மீ எனில் அதன் பக்க அளவு - 4 மீ

* 5 மதிப்புகளின் விலக்க வர்க்க சராசரி 16 என்க. அவற்றில் ஒவ்வொன்றும் 2-ஆல் வகுக்கப்பட்டால் புதிய மதிப்புகளுக்கு திட்ட விலக்கம் - 2

* வருடத்தை 4ஆல் வகுத்தால் மீதி 0 வருமானால் அவ்வருடம் - லீப் ஆண்டாகும்.

* மிகச்சிறிய 4 இலக்க எண் - 1000

* ஒரு வருடத்தில் உள்ள வாரங்களின் எண்ணிக்கை - 52

* நிறையை அளக்க பயன்படுத்தும் S. I அலகு முறை - கி.கி.

* S. I அலகு முறையின் அடிப்படை அலகுகள் - லிட்டர்

* கடிகாரத்தில் நிமிட முள் 10 ஆம் எண்ணிலிருந்து 12 ஆம் எண்ணிற்கு செல்ல ஆகும் விநாடிகள் - 600

* ஓர் எண்ணை இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட எண்களின் பெருக்கலாக பிரிக்க முடியுமானால் அந்த எண்களே காரணிகள் எனப்படும்.

* ஓர் எண்ணை மீண்டும், மீண்டும் அதே எண்ணுடன் கூட்டும் போது கிடைக்கும் கூட்டற்பலன் எந்த எண்ணின் மடங்குகள் ஆகும்.

* காப்ரியல் மெளடன் 1670 ஆம் ஆண்டு அளவியலில் தசம முறையை அறிமுகப்படுத்தினார்.

* ஓர் நேர்க்கோட்டில் எண்கள் சம இடைவெளியில் குறிக்கப்பட்டால் அது எண்கோடு எனப்படும்.

*  W = {0, 1, 2, ...} என்ற கணத்தின் கீழ் எல்லை - 0

* கொள்ளளவின் குறைவான அளவை மி.லி.அலகில் அளக்கிறோம்.

* ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளாத கோடுகள் - இணைக் கோடுகள்

* மூன்று (அ) மூன்றுக்கும் மேற்பட்ட நேர்க்கோடுகள் ஒரு புள்ளி வழி சென்றால் அவை ஒரு புள்ளி வழி செல்லும் கோடுகள் ஆகும்.

* இணைகோடுகளுக்கு எடுத்துக்காட்டு - இருப்புப் பாதை

* கோடுகள் வரைய அளவுகோள் பயன்படுகிறது.

* ஒரு குறிப்பிட்ட அளவுள்ள வட்டம் வரைய கவராயம் பயன்படுகிறது.

* கோணங்களை அளக்க கோணமானி கருவி பயன்படுகிறது.

* செங்குத்துக்கோடு வரையப் பயன்படும் கருவி - மூலை மட்டக் கருவி

* ஒரு கோட்டிற்கு முடிவு புள்ளிகள் இல்லை.

* கோட்டுத்துண்டு என்பது 2 முடிவுப் புள்ளிகளை உடைய ஓர் நேர்பாதை ஆகும்.

* ஒரு கோணத்தின் புயங்கள் ஒன்றோடொன்று பொருந்தி இருக்கும் போது ஏற்படும் கோணத்தை பூஜ்யக் கோணம் என்பர்.

* பொதுவான மையத்தைக் கொண்டு வெவ்வேறான ஆரங்களுடன் ஒரு தளத்தில் வரையப்படும் வட்டங்கள் பொதுமைய வட்டங்கள் எனப்படும்.

* அடுத்தடுத்துள்ள பக்கங்கள் சமமாக உள்ள செவ்வகம் சதுரமாகும்.

* இணைகரத்தில் ஒரு கோண அளவு 90 டிகிரி எனில் அது செவ்வகம்.

* ஒரு சாய்சதுரம் அமைப்பதற்கு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரண்டு அளவுகள் தேவை.

* எதிர் பக்கங்கள் இணையாகவும், அடுத்துள்ள பக்கங்கள் சமமாகவும் உள்ள நாற்கரம் ஒரு சாய்சதுரம் ஆகும்.

* ஒர் இணைகரம் அமைப்பதற்கு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மூன்று அளவுகள் தேவை.

* ஒவ்வொரு சோடி எதிப் பக்கங்கள் இணையாக உள்ள நாற்கரம் சரிவகம் எனப்படும்.

* ஒவ்வொரு சோடி எதிர்ப் பக்கங்கள் இணையாக உள்ள நாற்கரம் இமைகரம் ஆகும்.

* ஒரு சரிவகம் அமைப்பதற்கு ஒன்றுகொன்று தொடர்பில்லாத நான்கு அளவுகள் தேவை.

* ஒரு சரிவகத்தில் இணையில்லாத பக்க அளவுகள் சமம் எனில் அச்சரிவகம் ஒரு இருபக்க சரிவகம் எனப்படும்.

* ஒர் இரு சமபக்க சரிவகம் அமைப்பதற்கு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மூன்று அளவுகள் தேவை.

* ஒரு நாற்கரம் அமைப்பதற்கு ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத ஐந்து அளவுகள் தேவை.

* ஒரு தளத்தில் நான்கு கோடுகளால் அடைபடும் வடிவம் ஒரு நாற்கரம் ஆகும்.

* மூன்று அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட நேர்கோடுகள் ஒரு புள்ளி வழிச் சென்றால் அவை ஒரு புள்ளிவழிக் கோடுகள் எனப்படும்.

* வடிவியலின் தந்தை - யூக்ளிட்

* ஒரு ஜதை(ஜோடி) என்றால் - 2 பொருட்கள்

* 1 டஜன் என்றால் - 12 பொருட்கள்

* 1 குரோசு என்றால் - 12 டஜன் (144 பொருட்கள்)

* 1 ஸ்கோர் என்றால்- 20 பொருட்கள்

* ஒரு வருடத்தில் மொத்தம் - 365 நாட்கள்

* லீப் வருடத்தில் மொத்தம் - 366 நாட்கள்

* நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் வருடம் - லீப் வருடம்

* 100 சதுர மீட்டர் என்பது - 1 ஆர்

* 100 ஆர் சதுர மீட்டர் என்பது - 1 ஹெக்டேர்
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment