TNPSC GROUP - IV பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வு வினாக்கள் 6

226. நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவியவர் யார்?

227. ஐந்தாண்டு திட்டங்களுக்கு இறுதியாக ஒப்புதல் அளிப்பது எது?

228. சந்திரக்கடல் என்றால் என்ன?

229. இந்தியாவில் கிராம அமைப்பில் உள்ள குடும்ப முறை என்ன?

230. தேம்பாவணி என்ற நூலின் ஆசிரியர் யார்?

231. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்படும் உறுப்பு எது?

232. சேரர்களின் வரலாற்றைக் கூறும் நூல் எது?

233. அணுக்கொள்கையை முதன்முதலில் வெளியிட்டவர் யார்?

234. முதுகெலும்புத் தொடரில் உள்ள முள்ளெழும்புகளின் எண்ணிக்கை எத்தனை?

235. ஆயுர்வேத மருத்துவ முறையில் இருந்து தோன்றிய மருத்துவ முறை எது?

236. தமிழகக் கல்லூரிகளில் தமிழ்ப் பயிற்றுமொழியாக எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

237. உலகின் மிகப்பெரிய பெருங்கடல் எது?

238. உலகின் மிக நீளமான மலைத்தொடர் எது?

239. ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்துள்ள மிக உயர்ந்த சிகரம் எது?

240. இந்தியாவின் திட்ட நேரம் எந்த தீர்க்கரேகையின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது?

241. இந்தியாவின் மிகப்பெரிய ஏரி எது?

242. மக்களவையில் (லோக் சபா) அனுமதிக்கப்பட்ட மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை?

243. அரசியலமைப்பு ரீதியாக மைய இந்தியாவின் தலைவர் யார்?

244. இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது எது?

245. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் அரசியலமைப்பு ஷரத்து எது?

246. ராஜ்யசபா உறுப்பினராக குறைந்தபட்ச வயது எத்தனை?

247. துணை குடியரசு தலைவரை தேர்வு செய்வது யார்?

248. மக்களவைக்கு குடியரசு தலைவரால் நியமிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை எத்தனை?

249. மக்கள் நல அரசு என்னும் கோட்பாடு பற்றி அரசியலமைப்பின் எந்த பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது?

250. குடியரசு தலைவர் பதவி விலகினால் தமது ராஜினாமா கடிதத்தை யாரிடம் சமர்ப்பிப்பார்?

251. தற்போது அடிப்படை உரிமைகள் எத்தனை தலைப்புகளில் உள்ளன?

252. வேலைவாய்ப்பில் அனைவருக்கும் சமவாய்ப்பு என்பது குறிப்பிடப்படும் ஷரத்து எது?

253. தமிழ்நாட்டில் மிக நீளமான அணைக்கட்டு எது?

254. தமிழகத்தின் முதல் மாநகராட்சி எது?

255. தமிழ்நாட்டின் சாக்ரடீஸ் என போற்றப்பட்டவர் யார்?

256. தமிழக அரசின் சின்னம் எப்போது உருவாக்கப்பட்டது?

257. உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது?

258. தமிழகத்தின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் எந்த ஆண்டு யாரால் எழுதப்பட்டது?

259. அக்கினிக் குஞ்சு என்ற நூலின் ஆசிரியர் யார்?

260. தமிழகத்தில் அனல்மின் நிலையங்கள் எங்குள்ளன?

விடைகள்

226. முதலாம் குமாரகுப்தர்

227. தேசிய வளர்ச்சிக்குழு

228. சந்திரனில் உள்ள இருண்ட சமவெளி

229. கூட்டுக்குடும்பம்

230. வீரமா முனிவர்

231. கல்லீரல்

232. பதிற்றுப்பத்து

233. ஜான் டால்டன்

234. 33

235. சித்த மருத்துவம்

236. 1970

237. பசிபிக் பெருங்கடல்

238. ஆண்டிஸ் மலைத்தொடர்

239. அபு சிகரம்

240. 82.5 டிகிரி கிழக்கு

241. உலார் ஏரி

242. 544

243. குடியரசு தலைவர்

244. இந்திய தேர்தல் ஆணையம்

245. 370

246. 30

247. லோக் சபா மற்றும் ராஜ்ய சபாஉறுப்பினர்கள்

248. 2

249. பகுதி - 4

250. துணை குடியரசு தலைவர்

251. ஆறு

252. ஷரத்து 16

253. பவானி சாகர்

254. சென்னை மாநகராட்சி (1688-ல் மாநகராட்சி ஆனது)

255. பெரியார் ஈ.வெ.ரா.

256. 1950-ம் ஆண்டு பி.எஸ். குமாரசாமி ராஜா முதல்வராக இருந்தபோது உருவாக்கப்பட்டது

257. திருவாரூர்

258. 1879-ம் ஆண்டு மாயூரம் வேதநாயகம் பிள்ளை

259. பாரதியார்

260. தூத்துக்குடி, எண்ணூர், நெய்வேலி
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment