மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்து எப்படி

அனைத்து மாணவர்களுக்கும் 24 மணி நேரம் தான் உள்ளது. ஒரே ஆசிரியர் தான் பாடம் நடத்துகிறார். ஆனால், சில மாணவர்களே முதல் மதிப்பெண், சிறப்பாகவும் படிக்கின்றனர். அதற்காக மற்ற
மாணவர்கள் படிப்பதே இல்லை என்று அர்த்தம் ஆகாது. படிக்கும் முறையில் சிலவற்றை கடைபிடித்தால் அவர்களுக்கு சிறப்பாக படிக்க முடியும் அதுபற்றி காண்போம்.

தொடர்ந்து பல மணி நேரம் படிப்பது எப்படி?

ஒரு மாணவர் ஒரே நாளில் 4 மணி நேரம் படிக்கலாம் என நினைப்பார். ஆனால் அவரால் தொடர்ச்சியாக 4 மணி நேரம் அமர்ந்து படிக்க முடியுமா? பொதுவாக, பலராலும் இது இயலாத காரியம். 4 மணி நேரம் படிக்க வேண்டும் எ்னறு இருக்கையில், நாம் ஒரேயடியாக அமர்ந்து தொடர்ந்து படித்தால் அது உடலளவிலும், மனதளவிலும் ஒருவித பாதிப்புகளை ஏற்படுத்தும்.

அதாவது, மூளை மற்றும் உடல் ஆகிய இரண்டுமே சேர்ந்து விடும். படித்த விஷயங்களும் நினைவில் பதியாமல் போகலாம். எனவே அந்த 4 மணி நேரத்தை சில அல்லது பல பகுதிகளாக பிரித்து, அதற்கேற்ப உட்கார்ந்து படிக்க வேண்டும். அப்போது மூளையும் நன்கு சுறுசுறுப்புடன் ஒத்துழைக்கும். அத்தகைய இடைவெளிகளுக்கு மத்தியில், சில எளிமையான பயிற்சிகள் செய்து உடலையும், மனதையும் ரிலாக்சாக மாற்றலாம்.

மேலும் சிறிது நேரம் கண்களை மூடி அமரலாம். சில சமயங்களில் லேசான மூச்சு பயிற்சியும் செய்யலாம். இடைவெளி சமயங்களில் நீர் அருந்தலாம். ஏதேனும் ஜூஸ் அல்லது தேநீர் கூட அருந்தலாம். ஒரே பாடத்தை படிக்காமல், பாடங்களை மாற்றி மாற்றி படிக்கலாம். இதுபோன்ற செயல்முறையில் ஈடுபடும் போது, மனமும், உடலும் சுறுசுறுப்பாகி 4 மணி நேரம் என்பது 5 அல்லது 6 மணி நேரமாகவும் அதிகரித்து மாணவர்களின் கல்விதரம் மேம்படும்.

நினைவுத் திறனை பாதுகாக்க சில வழிகள்...

உடல் தசைகளை உறுதியாக பராமரிப்பது போல், நம்முடைய எண்ணங்களையும் நினைவுகளையும் நினைவில் வைப்பதற்கான திறன்களை அதிகரித்து அதை பேணி காக்க வேண்டும். அதற்கான வழிகள் சில...

உங்கள் தூக்கத்தை பொறுத்து நினைவுத்திறன் மாறுபடும். நீங்கள் போதுமான தூக்கத்தை பெறவில்லை என்றால், அது ஞாபக மறதியை ஏற்படுத்தும். ஞாபக மறதி உள்ள மாணவர்கள் ஒரே இடத்தில் அமர்ந்து படிக்கும் பழக்கத்தை மாற்றுங்கள். வெவ்வேறு இடங்களில் அமர்ந்தோ, நடந்து கொண்டோ படியுங்கள்.

புகைப்படங்கள், வார்த்தைகள், வாக்கியங்கள், ஜோக்குகள், பாடல்கள், இணைப்பு வார்த்தைகள் போன்றவற்றை குறிப்பிட்ட கருவிகள் வார்த்தைகள், வாக்கியங்களில் உள்ள மோனைகள் ஆகியவற்றை பயன்படுத்தி நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பாடத்தில் உள்ள படங்கள், சார்டுகள், கிராபிக்ஸ்கள் போன்றவற்றை பார்த்தவுடன் அதில் உள்ள எண்ணங்களில் ஏற்படும் கற்பனைகள் மற்றும் கருத்துகளை ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இவற்றின் வாயிலாக எளிய முறையில் படங்களை நினைவில் வைத்துக் கொள்ளலாம்.

மாணவர்கள் நினைவுத்திறனை கூர்மையாக்கும் அறிவுப்பூர்வமான விளையாட்டுகளை விளையாடுங்கள்.

உதாரணமாக செஸ், கேரம் போர்டு உள்ளிட்ட விளையாட்டுகள் நம்முடைய மூளையை கூர்மையாக்கும். ஒரு குறிப்பேடு அல்லது டைரியில் பாடங்கள் தவிர நினைவில் வைத்துக் கொள்ள விரும்புவதை எழுதுங்கள். இவற்றை பின்பற்றினால். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க முடியும். 
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment