சென்னை ஐகோர்ட்டில் பணி

சென்னை ஐகோர்ட்டில் காலியாக உள்ள 317 இடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தகுதியானவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.


பணியிடங்கள் விவரம்:

1.Personal Assistant to Hon’ble Judges: 

76 இடங்கள். 

சம்பளம்: 

ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400. 

தகுதி: 

ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் ஆங்கிலத்தில் சுருக்கெழுத்து மற்றும் டைப்பிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டிலும் அரசு தொழில்நுட்ப தேர்வு உயர்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆபீஸ் ஆட்டோமேஷன் பாடத்தில் கம்ப்யூட்டர் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

2. Personal Assistant to the Registrars: 

7 இடங்கள். 

சம்பளம்: 

ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

தகுதி: 

ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் ஆங்கிலத்தில் சுருக்கெழுத்து மற்றும் டைப்பிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டிலும் அரசு தொழில்நுட்ப தேர்வு உயர்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆபீஸ் ஆட்டோமேஷன் பாடத்தில் கம்ப்யூட்டர் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

3. Personal Clerk to the Deputy Registrars: 1 இடம். 

சம்பளம்: 

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800.

தகுதி: 

ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் ஆங்கிலத்தில் சுருக்கெழுத்து மற்றும் டைப்பிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இரண்டிலும் அரசு தொழில்நுட்ப தேர்வு உயர்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆபீஸ் ஆட்டோமேஷன் பாடத்தில் கம்ப்யூட்டர் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

4. Computer Operator: 

61 இடங்கள். 

சம்பளம்: 

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800. 

தகுதி: 

கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் ஆங்கிலம், தமிழில் தட்டச்சில் உயர்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5. Typist: 

84 இடங்கள். 

சம்பளம்: 

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400. 

தகுதி: 

ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் ஆங்கிலம் மற்றும் தமிழில் தட்டச்சில் உயர்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் கம்ப்யூட்டர் படிப்பில் சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.

6. Reader/Examiner: 

80 இடங்கள். 

சம்பளம்: 

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.

கல்வித்தகுதி: 

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.

7. Cashier: 

2 இடங்கள். 

சம்பளம்: 

ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.

கல்வித்தகுதி: 

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.

8. Xerox Operator: 

6 இடங்கள். 

சம்பளம்: 

ரூ.4,800 - 10,000 மற்றும் தர ஊதியம் ரூ.1,650.

கல்வித்தகுதி: 

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.

வயது: 

மேற்குறிப்பிடப்பட்ட அனைத்து பணிகளுக்கும் 1.7.2016 அன்று பொதுப்பிரிவினருக்கு 18 முதல் 30க்குள். பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர் மற்றும் எஸ்சி., எஸ்டியினருக்கு 18 முதல் 35க்குள். சென்னை ஐகோர்ட் மற்றும் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணியாளர்களுக்கு 45க்குள்.

பதிவு கட்டணம்: 

ரூ.50. மற்றும் தேர்வு கட்டணம் ரூ.100. ஏற்கனவே டிஎஸ்பிஎஸ்சியில் பதிவு கட்டணத்தை செலுத்தி பதிவு செய்தவர்கள் தேர்வு கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். இதை ஸ்டேட் வங்கி அல்லது இந்தியன் வங்கி மூலம் செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பினாலும் ஒரே விண்ணப்பம் அனுப்பினால் போதுமானது.

எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் சென்னை, மதுரை ஐகோர்ட்டுகள், கோவை கோர்ட் ஆகியவற்றில் நியமிக்கப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வு மையங்கள், கட்டண சலுகை உள்ளிட்ட விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தேர்வு நடைபெறும் நாட்கள்: 27.8.2016 மற்றும் 28.8.2016.

கட்டணம் செலுத்த கடைசி நாள்: 5.8.2016.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 3.8.2016.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment